Daily Current Affairs (June 21st – 24th )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : June 21st – 24th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
பெண்கள் விளையாட்டு அரங்கத்துள் நுழைய அனுமதி
தெஹ்ரான் மிகப்பெரிய கால்பந்து மைதானம் ஆகும் .
இதில் 1979ல் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை விளையாட்டு அரங்கத்தினுள் நுழைய ஈரான் அனுமதி அளித்தது.
கபடி மாஸ்டர்ஸ்
துபாய் கபடி மாஸ்டர்ஸ் தொடக்க ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
ஹீரோ மகளிர் விருது
ரிதிமா திலாவரி ஹீரோ மகளிர் தொழில்முறை கோல்ப் டூர் விருதை வென்றார்.
சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்
போட்டி- சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்
பிரிவு – ஆண்கள் 50 மீட்டர் மார்பக நிகழ்வு
வென்றவர் – சந்தீப் சேஜ்வால்
வென்றது – தங்கப் பதக்கம்.
பிரஞ்சு கிராண்ட் பிரிக்ஸ்
ஃபார்முலா ஒன் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ்க்கா ஃபிரான்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றார்.
சவுதி அரேபியா முதல் பெண் உறுப்பினர்
சவுதி அரேபியா மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின் முதல் பெண் உறுப்பினர் அசீத் அல் ஹமாத் ஆவார்.
நான்காவது சர்வதேச செஸ் திருவிழா
நான்காவது சர்வதேச செஸ் திருவிழா இத்தாலியில் நடைப்பெற்றது.
இதில் சென்னை பிராக்கானந்தா உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்.
முக்கியமான நாட்கள்
சர்வதேச யோகா தினம் – ஜூன் 21
2018 தீம் – “Yoga for Peace”
நோக்கம் – யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 மற்றும் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு சர்வதேச யோகா தினம்.
உலக ஒட்டகச் சிவிங்கி தினம் – ஜூன் 21
நோக்கம் – ஒட்டகச்சிவிங்கிக்கு ஆதரவை உயர்த்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் காடுகளில் இந்த விலங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய ஆழமான புரிதலை வழங்குதல் ஆகும்.
உலக இசை தினம் – ஜூன் 21
உலக அளவில் ஜூன் 21 ஆம் தேதி தான் உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சுத்தமான காற்று தினம் 2018 – ஜூன் 21
இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பல்வேறு வழிகளில் மக்கள் காற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விதவைகள் தினம் – ஜூன் 23
சர்வதேச விதவைகள் தினம், விதவைகளுக்கு நீண்ட கால கண்ணுக்கு தெரியாத, மதிக்கப்படாத மற்றும் அலட்சியம் செய்யப்படுவதிலிருந்து முழுமையான உரிமைகள் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு தொடங்கப்பட்டது.
ஒலிம்பிக் தினத்தின் 70 வது ஆண்டு விழா – ஜூன் 23
ஒலிம்பிக் தினம் ஜூன் 23, 1894 இல் பாரிசில் ஐ.ஓ.சி உருவாக்கியது.
இதனை நினைவுகூறும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொண்டாட 1948 ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் – ஜூன் 23
ஐ.நா. பொதுச் சேவை நாள் சமூகத்தின் பொதுச் சேவையின் மதிப்பும் மற்றும் நன்மையும் கொண்டாடுகிறது.
பொது ஊழியர்களின் வேலைகளை அங்கீகரிக்கிறது, பொதுத் துறையில் இளைஞர்களைத் தொடர ஊக்குவிக்கிறது.
உலக செய்திகள்
முதல் குடிமகன் தகவல் மையம்
மாநிலத்தின் முதல் குடிமகன் தகவல் மையம் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவில் உள்ள முத்துகுளத்தில் செயல்படுகிறது.
இந்த தகவல் மையத்தில் முதியவர்களுக்கான ஆன்லைன், கல்வி சார்ந்த விண்ணப்பங்கள், பல்வேறு பரிசோதனை முடிவுகள், கிராம இணைய கஃபேக்கள், மின்-டிக்கெட், மின்-ஆளுமை பயன்பாடுகள், டிடிபி, அடிப்படை கணினி கல்வி மற்றும் மின்-நூலகம் ஆகியவற்றுக்கான மின்வகை பயிற்சி போன்ற சேவைகளை வழங்குகிறது.
4 வது சர்வதேச யோகா தினம்
4வது சர்வதேச யோகா தினம் உத்தரகண்ட் டெஹ்ராடூன், வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
கோட்டா நகரத்தில் கின்னஸ் உலக சாதனை
ராஜஸ்தான் கோட்டா நகரத்தில் சர்வதேச யோகா தினத்தின் நான்காவது பதிப்பைக் குறிக்க 05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை உருவாக்கப்பட்டது.
கேரளாவில் தோட்டக்கலை வரி ரத்து
தோட்டக்கலை வரி வசூல் செய்யும் நாட்டின் ஒரே மாநிலம் கேரளா ஆகும்.
தோட்டத் துறையில் இருந்து விவசாய வருவாய் வரி (ஏஐடியை) சேகரிப்பதை கேரள அரசு நிறுத்த முடிவு செய்கிறது.
சுரினாமில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், ஜூன் 21, 2018 இல் சுரினாமில் அந்நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினார்.
சுரினா ஜனாதிபதி – டிசைரே டெலோனோ பூடர்ஸ்
சுரினா துணை ஜனாதிபதி – மைக்கேல் அஸ்வின் ஆதின்
துஷன்பேயில் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம்
தஜிகிஸ்தான், துஷன்பேயில் உள்ள இந்திய தூ���ரகத்தில் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் இந்திய சமூகம் குறித்து ஸ்ரீ கத்காரி உரையாற்றினார்.
அறிவியல் செய்திகள்
புலிகள் அறிமுகம்
மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா டைகர் ரிசர்விலிருந்து மூன்று வயதுடைய புலி T-2, முதல் முறையாக ஒடிசாவின் சாட்கோசியா டைகர் ரிசர்வ்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் மிகச் சிறிய கணினி சாதனம்
உலகின் மிகச் சிறிய கணினி “மிச்சிகன் மைக்ரோ மோட்” விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்
இது புற்றுநோயைக் கண்காணிக்கவும் சிகிச்சை செய்யவும் 0.3 மில்லி மீட்டர் அளவைக் கொண்டிருக்கும் ஒரு சாதனம் ஆகும்.
TB சிகிச்சைக்கு ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து ப்ரான்லூக்ஸ்ட்.
தற்போது காசநோய்க்கு எதிராக உபயோகிக்க இந்திய அறிவியல் கழகத்தின் (IISC) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் ரோபோ தொலைநோக்கி
இந்தியாவின் புதிய முதல் ரோபோ தொலைநோக்கி லடாக் பகுதியில் உள்ள ஹேன்னில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் (IAO) அமைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் இயற்கை சிகிச்சை மையம்
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இயற்கைச் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
விருதுகள்
சிறந்த வீரர் விருது
ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் இந்தியா பத்திரிக்கையின் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றார்.
ஸ்கோச் விருது
மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் அதன் சாதனைகளுக்காகவும் முன் முயற்சிகளுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்ட சமூகத் துறை அமைச்சகத்திற்கான’ ஸ்கோச் விருதைப் பெற்றது.
இந்தியா ஸ்மார்ட் நகரங்கள் விருது – 2018
சூரத் ஸ்மார்ட் சிட்டியானது ‘சிட்டி விருது‘ பெற்றது.
போபால் மற்றும் அகமதாபாத் ஆகியவை ‘புதுமையான ஐடியா‘ விருது பெற்றது.
முதல்வர் விருது
‘ஆண்டின் முதல்வர் விருது’ வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முதல்வர்) பெற்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஒப்பந்தம்
இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் நிலையான நீர் வளர்ச்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்.
திட்டங்கள்
காண்டீபம் திட்டம்
2021 க்குள் தடகளத்தில், 2022 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில், 2024 ஒலிம்பிக்கில் போட்டியிட மற்றும் 2028 ஆம் ஆண்டில் பதக்கங்களை வென்றெடுக்கவும் ஆந்திரப்பிரதேசம் நாட்டில் முதலிடம் பெறுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மொபைல் செயலிகள்
உழவன் செயலி
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற பெயரில் செல்போன் ஆப் அறிமுகம்.
உழவன்’ மொபைல் ஆப் மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்களை அறியலாம்.
‘ஐ–ஹரியாலி‘
பஞ்சாப் மாநில அரசு இலவச மரக்கன்றுகளைப் பெற ‘ஐ-ஹரியாலி’ எனும் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநாடுகள்
ஏஐஐபி மூன்றாவது ஆண்டுக் கூட்டம்
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் மூன்றாவது ஆண்டுக் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
நோக்கம் : முக்கியமான அடிப்படை வசதி தேவைகளுக்கு புதுமையான நிதித் திட்டங்களை உருவாக்குவது குறித்து இந்த அமைப்பு கவனம் செலுத்தும்.
2018 மையக் கருத்து : “அடிப்படை வசதிக்கு நிதி திரட்டுதல் – புதுமைப் படைப்பும், ஒத்துழைப்பும்”.
வணிக செய்திகள்
மாலத்தீவுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை இந்தியா குறைக்கிறது
மாலத்தீவுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் முட்டை போன்ற சில அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி மீதான வரம்புகளை இந்தியா குறைத்தது.
திட்டங்கள்
சூரிய சக்தி உருவாக்க விவசாயிகளுக்கு SKY திட்டம்
குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஒரு சூரிய சக்தி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
சூர்யசக்தி கிசான் யோஜனா (SKY) திட்டம் அவர்களுக்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கவும், உபரி சக்தியை கிரிட்டுக்கு அனுப்பவும், கூடுதலாக சம்பாதிக்கவும் உதவுகிறது.
மோகன்பூரா நீர்ப்பாசன திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்பூரா நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கினார்.
Download Daily Current Affairs [2018- June – 21 & 24]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.