Daily Current Affairs – June 28th to 30th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (June 28th – 30th )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : June 28th – 30th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ISSF ஜூனியர் உலகக் கோப்பை

ஐஎஸ்எஸ்எப்(ISSF) ஜூனியர் உலகக் கோப்பை ஜெர்மனி சுஹிலில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் கலப்பு ஏர் பிஸ்டல், கலப்பு ஏர் ரைபிள் மற்றும் நிலையான பிஸ்டல் பிரிவில் தங்க பதக்கங்களை வென்று குவித்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தனர்.

தரம்  நாடு  தங்கம் வெள்ளி வெண்கலம்                          மொத்தம்
1இந்தியா152926
2சீனா   69520
3செக் குடியரசு 4-15

 

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018

இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.

இறுதிப்போட்டியில் இந்தியா ஈரான் அணியை எதிர்கொள்கிறது.

 

பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை

இந்திய அணியின் கேப்டனாக ராணி ரம்பால் என்பவர் உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடருக்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 இறுதிப் போட்டியில் ஈரானை 44-26 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா இரண்டாவது முறையாக நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

உலக  செய்திகள்

 

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் விரைவில் சி.டி., எம்.ஆர்.ஐ.

மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசாங்க மருத்துவமனைகளில் அமைந்துள்ள 58 கம்ப்யூட்டேட் டோமோகிராபி (CT) மற்றும் 18 காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) இயந்திரங்கள் மெய்நிகர் மூலம் இணைத்த நாட்டின் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

 

ஸ்வச்ச் ஐகானிக் இடம்

ஸ்வச்ச் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக சபரி மலையை ஸ்வச்ச் ஐகானிக் இடமாக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

 

பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் ஆப்

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை கண்காணிப்பதற்கான ஒரு ‘ஆப்’பை ஆலப்புழா போலீசார் நிறுவுகின்றனர்.

இந்த ஆப் ‘கிட் சேஃப்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டு, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

 

நாணயம் வெளியீடு

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கொல்கத்தா இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில், ரூ.125 நினைவு நாணயம் மற்றும் ரூ. 5 சாதாரண நாணயம் ஆகியவற்றை  வெளியிட்டார்.

மத மாற்ற எதிர்ப்பு சட்டம்

அருணாச்சல பிரதேசம் மதச்சார்பின்மையை நிலைநாட்ட 40 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மத மாற்று தடை சட்டத்தை அகற்றுகிறது.

 

தேசிய பொதுவான ஆவண பதிவு முறை

பஞ்சாப் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தேசிய பொது ஆவணப் பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

விக்டோரியன் கோத்திக் ஆர்ட் டெகா மும்பை

மும்பையில் உள்ள விக்டோரியன் கோத்திக் ஆர்ட் டெகா கட்டிடத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், எலிபெண்டா குகைகளுக்கு ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது.

தாய்ப் பால் வங்கி 20,000 குழந்தைகள் பயனடைவு

அரசால் நடத்தப்படும் சமூக பால் வங்கி முறையை ஸ்தாபிப்பதில் நாட்டின் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.

ராஜஸ்தானின் 18 மாவட்ட அரசாங்க மருத்துவமனைகளில் நிறுவப்பட்ட ஆன்சல்,தாய்ப் பால் வங்கி திட்டம் மூலம் 20,000 குழந்தைகள் பயனடைவு, அவர்களின் ஊட்டச்சத்து அளவுகளை மேம்படுத்த உதவியது.

தாய்வழி இறப்பு விகிதம்

சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு தரவுப்படி, தமிழ்நாடு மாநிலத்தின் தாய்வழி இறப்பு விகிதம் (MMR) 62 சதவீதம் ஆகும்.

முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளர்

பாகிஸ்தானின் பொது செய்தி சேனலால் பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளராக ஹர்மீத் சிங் பணியமர்த்தப்பட்டார்.

 

12-வது புள்ளியியல் தினம் – ஜூன் 29

12-வது புள்ளியியல் தினத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையும், இந்தியப் புள்ளியியல் நிறுவனமும் கூட்டாக கொண்டாடியது.

அப்பொழுது பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

2018 ஆண்டின் தீம் – “Quality Assurance in Official Statistics”

 

விருதுகள்

 

தாய்மை பிரச்சார விருது

மத்திய பிரதேசம் தாய்வழி இறப்புகளை குறைத்தலுக்காக பிரதமரின் பாதுகாப்பான தாய்மை பிரச்சார விருது பெற்றது.

 

மொபைல் செயலிகள் 

 

‘ரியுனைட்’ என்னும் கைபேசிச் செயலி

மத்திய வர்த்தகம் & தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு ‘ரியுனைட்’ என்னும் கைபேசிச் செயலியைத் தொடங்கிவைத்தார்.

இந்தச் செயலி இந்தியாவில் காணமல்போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைத் தேடவும் பின் தொடரவும்  உதவும்.

 

திஷா டேஷ்போர்டு

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் திஷா டேஷ்போர்டை அறிமுகப்படுத்தியது.
இது குறைந்த நேரத்தில் இடம் சார்ந்த ஆட்சியை கண்காணிக்க உதவும்.

 

அறிவியல் செய்திகள்

 

ஹார்பின் உயிரியல் பூச்சிக்கொல்லி

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கைடோசான் நானோ துகள்களில்.மூடப்பட்டிருக்கும் ஹார்பின் உயிரியல் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் பொழுது தக்காளித் தாவரங்களில் பூஞ்சை தொற்றுநோய்களின் தீவிரத்தன்மையில் 80-90% குறைப்பைக் கண்டறிந்துள்ளனர்.

திட்டங்கள்

 

முகம்மோதையம் – ஈரநிலப்  பாதுகாப்பு ஒரு முன்மாதிரி
‘முகம்மோதையம்’ என்றத் திட்டம், நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிப்பதன் மூலம் வேம்பநாட் ஏரி சுற்றுச்சூழலின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.

நியமனங்கள்

 

அன்டோனியோ மானுவல் டி கார்வால்ஹோ ஃபெரிரா விட்டோரினோ என்பவர் ஐ.நா. இடம்பெயர்தல் அமைப்பின் புதிய பொது இயக்குனராக நியமிக்கப்பட்டார்.  

டால்மியா சிமெண்ட் (பாரத்) தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஓஓ) உஜ்வால் பத்ரியா நியமிக்கப்பட்டார்.

 

 


 

Download Daily Current Affairs [2018- June – 28 & 30]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: