Daily Current Affairs (June 4th – 6th )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : June 4th – 6th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்
ஜப்பான், கிபூவில் 18 வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்றது.
மாநில செய்திகள்
ஹரியானா அரசாங்கம் – தந்தைக்குரிய விடுப்பு
அனைத்து ஆண் அரசாங்க ஊழியர்களுக்கும் 15 நாள் தந்தைக்குரிய விடுமுறை ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம்
சவூதி அரேபியாவில் பல ஆண்டுகளுக்குப்பிறகு பெண்களுக்கு முதல் ஓட்டுநர் உரிமம் வழங்கத் தொடங்கியது.
அறிவியல் செய்திகள்
புதிய கிரகத்தில் தண்ணீர் மற்றும் உலோகங்கள்
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரான் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே ‘வாஸ்ப்-127பி’ என்ற புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இந்த கிரகத்தில் அதிக அளவிலான உலோகங்கள் உள்ளன. தற்போது சோடியம், பொட்டாசியம், லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு தண்ணீர் இருப்பதும் தெரிய வந்துள்ளது
எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து
சீனாவில் உள்நாட்டிலேயே நீண்ட காலமாக வேலைசெய்யக்கூடிய அல்புவிர்டைடு(Albuvirtide) என்ற எச்.ஐ.வி. மருந்து கண்டுபிடிக்கப்பட்டது .
இது பல்லாயிரக்கணக்கான எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரமாக இருக்கலாம் என்று சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் நாள் – ஜூன் 5
தீம் – ‘Beat plastic pollution’
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.
வணிகச் செய்திகள்
இந்தியாவுக்கு மலிவான LNG
முதல் மலிவான திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நிறுவனத்திடமிருந்து இந்தியா பெற்றுள்ளது.
இது இந்தியா ரஷ்யாவுடனான ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படை ஆகும் .
உலகச் செய்திகள்
BRICS வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டம்
பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா) வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டம் ஜூன் 4, 2018 அன்று நடந்தது .
வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்
இன்போர்மல் கூட்டம்
பாரிசில் உலக வணிக அமைப்பு (WTO) அமைச்சர்களின் இன்போர்மல் கூட்டம் நடந்தது .
இதில் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மே 31, 2018 கலந்து கொண்டார்.
மலபார் கூட்டுப்பயிற்சி 2018
மலபார் கூட்டுப்பயிற்சி அமெரிக்காவின் குவாமில் நடைபெறுகிறது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி 2018 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் வரை நடக்கிறது .
கிரிஷி கல்யாண் திட்டம்
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தொடங்கிய கிரிஷி கல்யாண் திட்டம், 2018 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை செயல்படுத்தப்படும் .
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலை நோக்கு திட்டத்திற்கு ஏற்ப, 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
ஜன் ஔஷாதி சுவிதா திட்டம்
பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜனா திட்டம் , உயிரி முறையில் மட்கும் தன்மை வாய்ந்த சானிடரிநாப்கின் வழங்குவது ஆகும் .
இந்த “ஜன் ஔஷாதி சுவிதா” திட்டத்தை மத்திய ரசாயன உரங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, கப்பல் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவியா புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
கங்கா பிரஹாரிஸ்
கங்கா ப்ராஹாரிஸ் கங்கா ஆற்றின் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றிற்கு கங்கை நதிகளை பாதுகாப்பதற்காகவும்,உயிர்-பன்முகத்தன்மை பாதுகாப்பிற்காகவும் மக்களுக்கு பயிற்றுவித்தல் ஆகியவற்றிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புருஷோத்தப்பட்னம் திட்டம்
கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் மற்றும் வட ஆந்திரா ஆகிய பகுதியின் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை புருஷோத்தப்பட்னம் லிப்ட் பாசன திட்டம் (பிஎல்ஐபி) பூர்த்தி செய்கிறது.
அடல் புஜல் யோஜனா
சமுதாயப் பங்களிப்பு மூலம் நாட்டின் முன்னுரிமைப் பகுதிகளில் நிலத்தடி நீர் மேலாண்மைகளை மேம்படுத்துவதே அடல் புஜல் யோஜனா திட்டதின் நோக்கமாகும்
நீர் வள அமைச்சகத்தின் 600 கோடி ரூபாய் திட்டமான அடல் புஜல் யோஜனாவிற்கு (ஏபிஹைஐ) உலக வங்கி ஒப்புத���் அளித்துள்ளது.
நியமனங்கள்
எகிப்து அதிபர் – அப்தேல் அல்சிசி
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான பிராண்ட் தூதர் – அக்ஷய் குமார்ஐ.நா
பொதுச்சபையின் தலைவர்
பொதுச்சபையின் தலைவர் – மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா [ஈக்வடார்]
இவர் ஐ.நா.சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண் ஆவார்.
Download Daily Current Affairs [2018- June – 4&6]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.