Daily Current Affairs (June 7th – 10th )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : June 7th – 10th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
டி20 போட்டிகளில் மிதாலி ராஜ் சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
போட்டி – பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
பிரிவு – பெண்கள் ஒற்றையர் பிரிவு
வெற்றி பெற்றவர் – ருமேனியாவின் ஷிமோனா ஹெலப்
தோல்வியடைந்தவர் – அமெரிக்காவின் ஸ்டீபன்
வென்றது – முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம்
11 வது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற ரஃபேல் நடால் ஆஸ்திரிய டொமினிக் தீவை தோற்கடித்தார்.
ஆசிய ஜூனியர் தடகளம்
போட்டி – ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்
பிரிவு – பெண்களுக்கான 400மீ ஓட்டம்
இடம் – ஜப்பான்
வென்றவர் – இந்திய வீராங்கனை ஜிஸ்னா
வென்றது – மேத்யூ தங்கம்
மாநில செய்திகள்
திரிபுராவின் மாநில பழமானது அன்னாசி
திரிபுரா மாநிலத்தில் அதிகம் விளையக்கூடிய ராணி ரக அன்னாசிப் பழத்தை மாநில அரசின் அதிகாரப்பூர்வ பழமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் அறிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா மற்றும் நார்வே இடையே ஒப்பந்தம்
நார்வே இந்தியா கூட்டு முயற்சியில் (NIPI) 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை மூன்று வருட காலத்திற்குள் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நார்வே அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் பேட்டரி திட்டம்
மத்திய அறிவியல் & தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில், தமிழகத்தின் காரைக்குடியில் இயங்கிவரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராசி சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனமும், இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் பேட்டரி திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஐ.நா. இந்தியா வணிக மன்றம்
தொழில் முதலீடுகளில் பாலின வேறுபாடுகள் குறைத்து பெண்களுக்கு வழிகாட்டல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்குகிறது. அதோடு பெண்களுக்கு தொழில் மற்றும் சந்தை இணைப்புகளை துரிதப்படுத்த ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கப்பட்டது.
ஐ.நா வின் இந்தியா வணிக மன்றம் மற்றும் NITI Aayog இன் மகளிர் தொழில் முனைவோர் தளம் ஆகியவை ஐ.நா. இந்தியா வணிக மன்றம் என்ற கூட்டுறவு அமைப்பை உருவாக்கியது
ஒலி மாசு நகரங்கள் பட்டியல்
ஹைதராபாத் ஒலி மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது
பேங்காக்கில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) 2018 விருது விழாவில் அனுபம் கெர் என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பி.சி.சி.ஐ விருதுகள்
பாலி யுமிர்கார் விருது விராத் கோலிக்கு வழங்கப்பட்டது
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (பெண்கள்) ஹர்மன் பிரீத் கவுர்க்கு வழங்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளுக்கு மிக உயர்ந்த பதக்கம்
தெலுங்கானா மாநில அரசால் காவல்துறை அதிகாரிகளுக்கு மிக உயர்ந்த பதக்கம் வழங்கப்பட்டது
போலிஸ் கான்ஸ்டபிள் பி. ராமுலு முக்கியமந்திரி சர்வோன்னதா போலிஸ் பதக்கம் 2018 வழங்கப்பட்டது
அறிவியல் செய்திகள்
உலக கடல் தினம் – ஜூன் 8
தீம் – Preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean
கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம்.
தானாக செயலிழக்கும் ஊசிகள்
அனைத்து மருத்துவ நோக்கங்களுக்காகவும் தானாக செயலிழக்கக்கூடிய ஊசிகளைப் பயன்படுத்தும் முதல் மாநிலமாக இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் இருக்கும்.
இது உலக ஹெபடைடிஸ் தினமான ஜூலை 28 அன்று நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்படும்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு
பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.
பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும். எனவே இந்த பொருட்களுக்கு உயிர் இருக்கலாம்.
ISRO இன் ‘EPIC’ கிரகம்
அஹமதாபாத்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் PRL குழு ஒரு கிரகத்தை கண்டுபித்தனர்.
அது பூமியைவிட ஆறு மடங்கு பெரிய மற்றும் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் ‘EPIC’ என்ற கிரகத்தை கண்டுபிடித்தனர்.
‘தனுஷ்’ பீரங்கி
முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது.
உலகச் செய்திகள்
ஓஸ்மான்சாகர் ஏரி திட்டம்
ஹைதராபாத் மாநகராட்சி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் ஓஸ்மான்சாகர் ஏரியின் அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயராக்கினார்
இந்திய விவசாயி உலக சாதனை
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள கேரளாவைச் சேர்ந்த இந்திய விவசாயி சுதேஷ் குருவாயூர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான (4,914) கரிம கறிவேப்பிலை கன்றுகளை ஷார்ஜாவில் விநியோகம் செய்தார்.
டீயோசா -பச்சமி நிலக்கரி தொகுதி
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான டீயோசா- பச்சாமி நிலக்கரி சுரங்கங்களை மத்திய அரசு மேற்கு வங்க அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
விருதுகள்
ஐகான விருது
ரோஹன் போபன்னா என்பவருக்கு “ஆண்டின் விளையாட்டு ஐகான விருது வழங்கப்பட்டது
எக்ஸலன்ஸ் விருது – 2018
டாடா கன்சல்டன்சி சேவைக்கு பெகா பார்ட்னர் எக்ஸலன்ஸ் விருது 2018 வழங்கப்பட்டது
கமில்லா ஷம்மிஸ்(பிரிட்டிஷ் பாகிஸ்தானி) என்பவர் ஹோம் ஃபயர் என்னும் கற்பனை நாவலுக்காக 2018 பெண்களுக்கான பரிசு பெற்றார்.
நியமனங்கள்
தாரிக் பிரேம்ஜி – விப்ரோ எண்டர்பிரைசஸ் நிர்வாகி அல்லாத இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
சரீதா நாயர் – உலக பொருளாதார மன்றம் (WEF) நிர்வாக உறுப்பினராக நியமிக்கப்பட்டார்
முதல் துலு நாவல்
முதல் துலு நாவலான ‘சதி கமலே’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
இந்த ‘சதி கமலே’ நாவல் எஸ்.யூ. மங்களூர் பல்கலைக்கழகத்தின் இரண்டு முன்னாள் பேராசிரியர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இது 1921 இல் எழுதப்பட்டு 1936 இல் வெளியிடப்பட்டது.
UNSC இன் நிரந்தரமற்ற உறுப்பினர்கள்
ஐ.நா. பொதுச் சபை ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பணியாற்றுவதற்காக சில நாடுகளை தேர்ந்தெடுத்தது.
அது பெல்ஜியம், டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா மற்றும் தென் ஆபிரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
Download Daily Current Affairs [2018- June – 7&10]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.