Daily Current Affairs (May 1-3)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 1-3
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ஹாக்கி யிற்சியாளர்
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மரிஜென்.
கால்பந்து
எகிப்து நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருது பெற்றார்.
துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார்
தடகளம்
3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் மே 5 மற்றும் 6-ம் தேதி நடக்கிறது.
உலக செய்திகள்
88-வது ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டம்
இடம் : நாகை மாவட்டம் – வேதாரண்யம்
நாள் : உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 88-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
குறிப்பு :1930 ஏப்ரல் 30-ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ராஜாஜி தலைமையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத் துணை முதல்வராகிறார் சபாநாயகர் கவீந்தர் குப்தா.
இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்
பெயர் – அயான் கபாடியா
மாநிலம் – மகாராஷ்டிரா மாநிலம் – மும்பை
வயது – 9 வயது
குறிப்பு : அயான் கபாடியா மிகச்சிறிய வயதில் புத்தகம் எழுதி இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியராக சாதனைப் படைத்துள்ளான்.
பத்திரிகை தகவல் இயக்குனர்
சிதான்ஷு ரஞ்சன் கர் – பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர தினம் – மே 3
2018 தீம் – “Keeping Power in Check: Media, justice and the Rule of Law”
நோக்கம் : உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பவும் , “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்தப்பட்டது.
உமாங் செயலி
ஓய்வூதியதாரர்கள் உமாங் செயலி மூலம் “ஓய்வூதிய கணக்கு புத்தகத்தைக் காட்டுக” எனும் சேவையை ஈ.பி.எஃப்.ஓ. அறிமுகம் செய்துள்ளது.
பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்” திட்டம் :
“பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 244 மாவட்டங்களில் செயல்படுத்துகிறது.
இதன் தொடர்பாக தேசிய மாநாட்டை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் மே 4 , 2018 ல் நடத்துகிறது.
பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டம்
பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
ரவீந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாள்
புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1913 – ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர்.
இவரது 155வது பிறந்த நாளை முன்னிட்டு எகிப்து தலைநகரான கெய்ரோவில் 5 நாள் கலாச்சார திருவிழா நடைபெறுகிறது.
வணிகச் செய்திகள்
பொருளாதாரம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு – ஜப்பான்,
ஏழாவது பொருளாதார நாடு – இந்தியா
விமானங்களில் செல்போன் சேவை:
விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவையை அளிப்பது தொடர்பான பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐஆர்டிஏஐ புதிய தலைவர்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) தலைவராக சுபாஷ் சந்திர குந்த்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
எல்ஐசி தலைவர் – வி.கே.சர்மா
நியு இந்தியா அஸ்யூரன்ஸ் தலைவர் – ஜி.ஸ்ரீனிவாசன்
அறிவியல் செய்திகள்
உலக ஆஸ்துமா தினம்
மே 1 தினங்கள் – உலக ஆஸ்துமா தினம், சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மகாராஷ்டிர & குஜராத் மாநில தினம்
ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
குறிப்பு : ஆஸ்துமா நோய் ஒவ்வாமையால் வருகிறது.
நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனை:
பிரதமரின் மருத்துவப் பாதுகாப்பு திட்டம் 2020 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
இதில் 6 மருத்துவமனைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு விட்டன.
இதுதவிர 73 மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
Download Daily Current Affairs (2018-MAY-1 & 3)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.