Daily Current Affairs -May 15th to 17th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (May 15th-17th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : May 15th-17th

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சர்வதேச துப்பாக்கி சுடுதல் – சாம்பியன்ஷிப்

இந்தியாவின் ஹீனா சித்து சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

 

ஐசிசி தலைவர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சஷாங்க் மனோகர் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ரஷ்யாவில் பிபா உலகக் கோப்பை 2018

2018 FIFA உலகக் கோப்பை ரஷ்யாவில் ஜூன் 14 முதல் ஜூலை 15, 2018 வரை நடைபெறும்.

இறுதி போட்டி மாஸ்கோவில் லூஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

11 நகரங்களில் அமைந்துள்ள 12 இடங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும்.

 

மாநில செய்திகள்

 

தர்பங்கா-ஜலந்தர் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

பீகாரில் உள்ள தர்பாங்கா மற்றும் ஜலந்தர் இடையே பஞ்சாப் அந்தியோதயா எஸ்பிரஸ் வாராந்திர ரயில் சேவையை மந்திரி மனோஜ் சின்ஹாவால் மே 15 அன்று தொடங்கி வைத்தார்.

 

பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையம்

பஞ்சாப் மாநிலத்தில் முழுக்க பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா தொடங்கி வைத்தார்.

நாட்டின் 192வது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆக செயல்படும்.

 

சத்தீஸ்கர் மாநிலம் வர்த்தக விமான இணைப்பு பெறவுள்ளது

பஸ்தாரை வான்வழி மூலமாக ராய்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுடன் உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (UDAN) சேவைகள் இணைக்கின்றன.

இவை நாட்டின் முக்கிய நகரங்களின் விமான சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

உலக செய்திகள்

 

மே 15 – சர்வதேச குடும்ப தினம்

குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி, மே 15ஐ சர்வதேச குடும்ப தினமாக ஐ.நா., சபை அறிவித்து இருக்கிறது.

தீம் – “குடும்பங்கள் மற்றும் உள்ளடங்கிய சமூகங்கள் “

 

இந்திய இராணுவ மகளிர் அலுவலர்கள் மலையேறும் பயணம்

பாகிரதி-2 (6512 மீட்டர்) என்ற மலையில் ஒன்பது பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்திய இராணுவப் பெண்கள் அதிகாரிகளின் குழு – மலையேறும் பயணம் 14 May 2018 அன்று இராணுவப் பயிற்சி இயக்குனரால் தொடங்கப்பட்டது.

 

உலகில் மூன்றாவது பெரிய சோலார் சந்தை

2017 ஆம் ஆண்டு சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய சோலார் சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது.

 

ஜெயதேவ் ராஷ்ட்ரிய யுவ புரஸ்கார்

அமெரிக்காவை சேர்ந்த கதக் நடன கலைஞரான அனிந்தாடா ஆனம் கலைத்துறைக்கு சிறந்த பங்களிப்பிற்காக கௌரவமான ‘ஸ்ரீ ஜெயதேவ் ராஷ்ட்ரிய யுவ புரஸ்கார் 2018’ பெற்றுள்ளார்.

 

நெட்மெட்ஸ் பிராண்ட் தூதர்

நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி ஆன்லைன் மருந்தகம் நெட்மெட்ஸின் பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டார்.

 

தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனம் – போபால்

இந்த நிறுவனம் 1860 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தின் கீழ் மத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் போபாலில் அமைக்கப்படும்.

போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை (என் ஐ எம் எச் ஆர்) ஒரு சங்கமாக ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

ஸ்வச்சதா ஸர்வேக்ஷன் 2018

இந்தோர்,போபால் & சண்டிகர் நாடுகளில் முதல் 3 தூய்மையான நகரங்கள் என ஸ்வச்சதா ஸர்வேக்ஷன் 2018 தரவரிசையில் இடம் பெற்றுள்ளன .

 

பிரேசில் நாட்டின் கௌரவம்

முல்லப்புடி நரேந்திரநாத் ஆந்திர சர்கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை இயக்குநர்.

இவர் இந்தியாவில் உள்ள ஓன்கோல் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக இரண்டு பிரேசிலிய அரசுகளால் பாராட்டப்பட்டார்.

அறிவியல் செய்திகள்

 

சுகாதார பானம் நீரோ

வி.எஸ்.சுனுல் குமார் கூட்டிய உயர் மட்ட கூட்டத்தில் தேங்காய் மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நீரோவை (மதுபானம் அல்லாத பொருள்) ஊக்குவிப்பதற்காக முடிவு செய்தது.

 

முதல் நகர எரிவாயு விநியோக (CGD) நெட்வொர்க்

முதல் நகர வாயு விநியோக(CGD) நெட்வொர்க்கை உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் ருத்ரபூரில் உள்ள மாநிலத்தில் ஆரம்பித்தார்.

 

சூரிய சக்தி மூலம் இயங்கும் ரயில் நிலையம்

இந்தியாவின் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் முதல் இரயில் நிலையம் குவாஹாத்தியில் அமைந்துள்ளது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)

 

இந்தியா-பிரான்ஸ் புரிந்துணர்வு ஓப்பந்தம்

2018 மார்ச் 10ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்திய ரயில்வேக்கும், பிரான்ஸ் நாட்டின் அரசுக்கு சொந்தமான எஸ் என் சி எஃப் மொபிலிட்டிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமை�����்சரவை எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியா மற்றும் மொரோக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இது சட்டம் மற்றும் சட்டம் இயற்றல் துறையில் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள உதவுகிறது.

சட்டத்துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

 

இந்தியா – ஸ்வசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்தியா – சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தில் தேர்தல் நடைமுறை தொடர்பான அமைப்பு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் பரிவர்த்தனை ஆதரவு, நிறுவன வலுப்படுத்துதல் மற்றும் திறன்மேம்பாடு, பணியாளர்களுக்கான பயிற்சி, அடிக்கடி ஆலோசனைகள் நடத்துதல் போன்ற துறைகள் அறிவு மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கும் வகை செய்கிறது.

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா – சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்தது.

 

இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவமுறையில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.

 

இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இது கொலம்பியாவில் இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையையை ஊக்குவிக்கவும் பரப்பவும் உதவும்.

இந்திய பாரம்பரிய மருத்துவ துறையை அமைக்க ஒத்துழைப்பு வழங்க இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

===========================================================================

Download Daily Current Affairs (2018-MAY- 15 & 17)

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

One thought on “Daily Current Affairs -May 15th to 17th – Important Current Affairs For All Exams

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us