Daily Current Affairs (May 18th-20th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 18th-20th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
எஃப் ஏ கோப்பை
FA கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இத்தாலி ஓபன் டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தேசிய செய்திகள்
கிஷன்கங்கா நீர்மின் நிலையம்
ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கிஷன்கங்கா நீர்மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பீஜ் வாகன் விகாஸ் வாகன் ரத்
காரிப் பருவத்தில் அரசாங்க திட்டங்களைப் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வை உருவாக்க ‘கிருஷி மஹாபியன் மற்றும் பீஜ் விகாஸ் வாகன் ரத்’ திட்டம் அறிமுகம் செய்துள்ளது.
உலகின் முதல் மிதக்கும் அணுசக்தி நிலையம்
கிழக்கு ரஷ்யாவின் முர்மாஸ்க்கின் துறைமுகத்தில் உலகின் முதல் மிதக்கும் அணுசக்தி நிலையத்தை ரஷ்ய வெளியிட்டது,
மாநில செய்திகள்
கூட்டு கடற்படை பயிற்சி
இந்திய கடற்படை மற்றும் வியட்நாம் மக்கள் கடற்படை தனங்கில்(Danang) இல் உள்ள டியின் சா (Tien sa) துறைமுகத்தில் கூட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளது .
யமுனா நதி – ஆசீதா
யமுனா நதிக்கரையோரத்தை மீட்கவும், புதுப்பிக்கவும் விரிவான அசீதா திட்டம் மரியாதைக்குரிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட முதன்மை குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
குறிப்பு : அசீதா என்பது யமுனா நதியின் மற்றொரு பெயராகும்.
உலக செய்திகள்
ஆறாவது செல்வந்த நாடு
மொத்தம் 8,230 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களோடு ஆறாவது செல்வந்த நாடு இந்தியா.
சீனா உலக அளவில் இரண்டாவது செல்வந்த நாடு.
மூன்றாவது செல்வந்த நாடு ஜப்பான்.
இங்கிலாந்தில் தொண்டு நிறுவனத்தின் விருது
இந்தியாவின் ஜகிர்தி யாத்ரா இங்கிலாந்தில் தொண்டு நிறுவனத்தின் விருதை வென்றது.
நியமனம்
ஹாக்கி இந்தியா தலைவர் (HI) – ராஜிந்தர் சிங்·
புதிய I&B செயலாளர் – அமித் கரே
Download Daily Current Affairs (2018-MAY- 18 & 20)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.