Daily Current Affairs -May 21st to 23rd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (May 21st-23rd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : May 21-23

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

விளையாட்டு செய்திகள்

 

கால்பந்து கேப்டன் ஹாரி கேன்

ரஷ்யாவில் இங்கிலாந்தின் கால்பந்து உலகக் கோப்பையின் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்ப ட்டார்.

 

ISSF ஷூட்டிங் உலகக் கோப்பை

ஐ.எஸ்.எஸ்.எஃப் ஷூட்டிங் உலகக் கோப்பை மியூனிச்சில் நடக்க இருக்கிறது .

இதில் மனு பாக்கர்,ஹீனா சித்து,ஜீத்து ராய் ஆகியோர் ISSF ஷூட்டிங் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ளனர்.

 

உபர் கோப்பை பேட்மின்டன்

பாங்காக்கில் உபர் கோப்பை பேட்மின்டன் போட்டி நடைபெற்றது

இதில் இந்தியா மூன்றாவது மற்றும் இறுதிப் பிரிவு-A அணியில் ஜப்பானுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் தோல்வி கண்டது.

 

மாநில செய்திகள்

 

கிழக்குப் புறப்பரப்பு எக்ஸ்பிரஸ்வே

உத்திரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி கிழக்குப் புறப்பரப்பு எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்டும் குண்டில்-கஜியாபாத்-பல்வால் (கே.ஜி.பீ.) எக்ஸ்பிரஸ்யை திறந்துவைத்தார்.

 

நடன நாடக விழா “அஷ்டபடியாட்டம்”

கேரள குருவாயூரில் 12 வது நூற்றாண்டு கவிஞர் ஜெயதேவா எழுதிய “கீதா கோவிந்தம்”.

இதன் பண்டைய நடன நாடக “அஷ்டபடியாட்டத்தின் ” மறுமலர்ச்சி விழாவை இந்திய துணைத் ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

 

நய் ரஹேன் நய் மன்சிலேன்

நய் ரஹேன் நய் மன்சிலேன் திட்டம் ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக மாநில அரசு தொடங்கியது.

 

விவசாயம் மாதிரி சட்டம்

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உற்பத்தி பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை வெளியிட்டார்.

 

 

உலக செய்திகள்

 

ஆசியான் இந்தியா திரைப்படத் திருவிழா

ஆசியான் – இந்தியா திரைப்பட விழா புதுதில்லி – சிரிஃபோர்ட் கலையரங்கில் 2018, மே 25 அன்று தொடங்கபட்டது.

மத்திய தகவல் & ஒலிபரப்பு மற்றும் விளையாட்டு & இளைஞர் நலத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

 

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷியா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர், மே 21, 2018 அன்று ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள சோச்சி நகரில் முதல் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தினர்.

 

பாலின நீதி – தேசிய மாநாடு

போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (பி.பீ.ஆர் & டி), “குற்றவியல் சட்டத்தில் பாலின நீதி” பற்றிய தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வை ஏற்பாடு செய்துள்ளது.

 

71 வது உலக சுகாதார சபை

ஜெனீவாவில் 71 ஆவது உலகளாவிய சுகாதார சபை கூட்டம் நடந்தது .

இதில் பொதுநல சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜீ.பி . நட்டா, உரையாற்றினார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய SCO

மே 23 முதல் 25 வரை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானால் நடத்தப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) – பிராந்திய பயங்கரவாத அமைப்பின் (SCO-RATS) உறுப்பினர்களுடன் சந்திப்பதற்கான மூத்த பிரதிநிதிகளை இந்தியா அனுப்பியுள்ளது .

 

நியூயார்க் பங்குச் சந்தை தலைவர்

226 ஆண்டு பழமையான நியூயார்க் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவராக ஸ்டேசி கன்னிங்ஹாம் நியமிக்கப்பட்டார்.

 

மை எம்.பி. ரோஜ்கார் போர்ட்டல்

போபால் நகரில் இளைஞர்களுக்கான வேலைகளை வழங்குவதற்காக பஹால் திட்டத்தின் ஒரு பகுதி மை எம்.பி. ரோஜ்கார் போர்ட்டல் என்பது தொடங்கப்பட்டது .
இதனை மத்தியப் பிரதேச அரசாங்கம் தொடங்கியது .

 

 

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)

 

இந்தியா – அங்கோலா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் நடந்தது.

இந்தியா மற்றும் அங்கோலா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்தியா பிரான்ஸ் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது .

புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்தியா–டென்மார்க் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது .

 

இந்தியா-மொராக்கோ இடையிலான ஒத்துழைப்பு

புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் இந்தியா – மொராக்கோ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது .

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த ஒப்பந்தத்தில் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம்

துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதில், இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகத்தில், விரைவான – வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த ஒப்பந்தத்தில் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்தியா–சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பணியாளர் மேலாண்மை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளில், இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த ஒப்பந்தத்தில் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

அறிவியல் செய்திகள்

 

சர்வதேச பல்லுயிர் தினம் – மே 22

தீம்            : செலிப்ரேட்டிங் 25 இயர்ஸ் ஆப் ஆக்க்ஷன் ஆன் பயோடைவர்சிட்டி

நோக்கம் : பல்லுயிரியலின் முக்கியத்துவத்தையும், அச்சுறுத்தல்களையும் பற்றி விழிப்புணர்வு பெறவும், நிலையான வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பை சிறப்பித்துக் காட்டவும் இந்த தினம் அனுசரிக்க படுகிறது.

 

நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை என்னும் அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம்(WII) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

கவனிக்கப்பட்ட உயிரினங்கள் :

 1. சீபோல்ட் மென்மையான செதிலுள்ள நீர் பாம்பு (என்ஹைட்ரிஸ் ஸீபோல்டி)
 2. இந்திய ஸ்கிமமர் (ரைன்சோபஸ் ஆல்பிக்கோலிஸ்) என்னும் ஒரு பறவை

 

‘நிடான்’ மென்பொருள்

ராஜஸ்தானில் பருவகால மற்றும் தொற்றாத நோய்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் நோய்களின் போக்குகள் ஆகியவற்றின் முன்னறிவிப்பு, ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக புதிய மென்பொருள், ‘நிடான்’, தொடங்கப்பட்டுள்ளது.

 

புத்தகம் – ஆசிரியர்கள்

 

க்ராண்ட் த்ரோண்டோன்

“இன்ட்ராப்ரெனியூர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் ஆப் பார்மர் ப்ரொடியூசிங் கம்பெனிஸ்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் க்ராண்ட் த்ரோண்டோன்.

 

கார்ல் மார்க்ஸ் கையெழுத்துப் பிரதி

கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற புத்தகமான டாஸ் கேப்பிடலின் முதல் வரைவில் ,அவரது கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம், ஏலத்தில் 5,23,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.

 

மேன் புக்கர் சர்வதேச பரிசு – Olga Tokarczuk

போலந்து நாவலாசிரியர் Olga Tokarczuk
இவர் Flights என்னும் நாவலுக்கான மேன் புக்கர் சர்வதேச பரிசு வென்றார்,

 

 


 

Download Daily Current Affairs (2018-May-21 & 23)

 

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: