Daily Current Affairs -May 24th to 27th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (May 24th-27th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : May 24th-27th

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

விளையாட்டு செய்திகள்

 

 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி

போட்டி        –    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி

பிரிவு           –    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவு

இடம்            –    ஜெர்மனியின் முனிச் நகர்

வென்றவர்  –   இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த்

வென்றது    –   தங்கப்பதக்கம் .

 

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை ரியல் மாட்ரிட் கைப்பற்றியது

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

யுபர் கோப்பை (பேட்மின்டன்)

ஜப்பான் பெண்கள் யுபர் கோப்பை (பேட்மின்டன்) யை வென்றார்கள்

குறிப்பு : ஜப்பான் தாய்லாந்தை பேட்மின்டனில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது

 

 

மாநில செய்திகள்

 

 

உலக ஸ்கிசோஃப்ரினியா தினம் – மே 24

ஸ்கிசோஃப்ரினியா – ஒரு நபரின் நினைவுதிறன்,உணரும்திறன் மற்றும் தெளிவாக யோசிக்கும் திறனையும் பாதிக்கக்கூடிய கோளாறாகும்.

மே 24 அன்று உலக ஸ்கிசோஃப்ரினியா தினத்தை குறிக்க, கேரளாவில் வஜ்வாடாவில் ‘மனோரஞ்சன்’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பங்களாதேஷ் பவன்

பிரதமர் மோடி சாந்தி நிகெட்டானில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான கலாச்சார உறவுகளின் அடையாளமாக பங்களாதேஷ் பவன் திறந்துவைத்தார்.

 

கேரளாவில் கிச்சன் திட்டம்

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அட்டப்பாடி , கேரளாவில் அன்னப்ராதாயினி கம்யூனிட்டி கிச்சன் திட்டத்திற்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 

15 வது நிதி ஆணையம் கேரளாவுக்கு வருகை 

15 வது நிதி ஆணையம் மே மாதம் 28 முதல் 31 ஆம் தேதி வரை வருகை புரியும் முதல் மாநிலம் கேரளவாகும்.

 

 

விருதுகள் மற்றும் திட்டங்கள் 

 

சமக்ரா ஷிக்சா

புது தில்லியில் பள்ளிக் கல்வியின் முழுமையான வளர்ச்சிக்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமக்ரா ஷிக்சா திட்டத்தை தொடங்கியது.

 

க்ளாரிவேட் அனலிட்டிக்ஸ் இந்தியா இன்னோவேஷன் விருது 2018

அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சிலுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் பகுப்பில் க்ளாரிவேட் அனலிட்டிக்ஸ் இந்தியா இன்னோவேஷன் விருது 2018 வழங்கப்பட்டது.

 

நாரி சக்தி புரஸ்கர் விருது 2017

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி ஐ.என்.எஸ்.வி. தாரிணி குழுவின் உறுப்பினர்களுக்கு பெருமைமிகு நாரிசக்தி விருதினை புதுதில்லியில் வழங்கினார்.

 

புவனேஸ்வரில் மேகக் கணிமை ஆற்றல் கொண்ட தரவு மையம்

தேசிய தகவல் மையம் புவனேஸ்வரில் மேகக் கணிமை ஆற்றல் கொண்ட தரவு மையத்தை உருவாக்கியுள்ளது.

 

கூட்டு இராணுவ பயிற்சி சூரியா கிரான்- XIII

இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான கூட்டு பயிற்சி சூரியா கிரான்-XIII பிப்ரவரி 30, 2018 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை உத்தரகாண்ட் பித்தோர்கரில் நடக்கிறது

 

பத்ராட்டு சூப்பர் தெர்மல் பவர் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்டில் உள்ள என்டிபிசி இன் 2400 மெ.கா. திறன்கொண்ட பத்ராட்டு சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 

சமக்ரா ஷிக்சா

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட கல்விக்காக இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அடுத்த ஆண்டு பள்ளிக்கூட கல்வியில் 20 சதவிகிதம் வரவுசெலவுத்திட்டத்தை அதிகரிப்பதாக உறுதியளித்தது.

 

பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா (சவுபாக்கியா) திட்டம்

குடும்பங்களுக்கு 24×7 மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம் பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (சவுபாஹ்யா) திட்டம்,

 

டைனமிக் திட்டங்கள்

புதுடில்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “பிரகாட்டி கே பாத் பர் ” என்று தலைப்பிடப்பட்ட டைனமிக் திட்டங்கள் மற்றும் ப்ரொஜெக்ட்களுக்கான ஒரு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் விஜய் கோயல் திறந்து வைத்தார்.

 

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

 

சீனா, புர்கினா பாசோ ஒப்பந்தம்

பாசோ தூதரக உறவுகளை நிறுவுவதற்கான உடன்படிக்கையில் சீனா மற்றும் புர்கினா கையெழுத்திட்டன.

 

இந்தியா, ரஷ்யா S-400 ட்ரையூம் ஒப்பந்தம்

இந்திய விமானப்படைக்கு S-400 ட்ரையூம் ஏர் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூ .40,000 கோடி இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

 

உலக செய்திகள்

 

 

இந்தோ-டச்சு கங்கா மன்றம்

புது டில்லி விழாவில் இந்திய-டச்சு கங்கா மன்றத்தை நெதர்லாந்து பிரதம மந்திரி மார்க் ருட்டே துவங்கினார்.

 

LCU MK-IV கப்பல்கள்

IN LCU L54 நான்காம் லேண்டிங் கிராஃப்ட் யூட்டிலிட்டி (LCU) MK-IV வகுப்பு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இந்த கப்பல் உள்நாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்டு, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் பொறியாளர்களால் கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட்

தலைவர் – ஸ்ரீ ரமேஷ் சந்த் மீனா·

துணை தலைவர் – திருமதி. பிரதிபா பிரம்மா

 

அமெரிக்க விண்வெளி வீரர் சந்திரனில் மரணம்

சந்திரனில் நடந்த அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர்  ஆலன் பீன் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரன் சென்று திரும்பினார்.

அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன் சந்திரன் சென்றார்.

இவர் சந்திரனில் நடந்த 4-வது விண்வெளி வீரர்

 

பார்படாஸ் பிரதமர்

பார்படாஸின் முதல் பெண் பிரதாமராக மியா மோட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

அறிவியல் செய்திகள்

 

காகித அடிப்படையிலான பயோசென்சார் டிடெக்ட் எத்தனால்

ஐ.ஐ.டி கவுஹாத்தியின் ஆராய்ச்சியாளர்கள் காகித அடிப்படையிலான பயோசென்சார் ஒன்றை உருவாக்கினார்கள்.

இது எத்தனாலை கண்டறிய உதவும்.

 

அல்பர்டோ புயல் அவசரநிலை மாநிலங்கள்

புளோரிடா, அலபாமா மற்றும் மிசிசிபி ஆகியவை அல்பர்ட்டோ புயலால் அவசரநிலை மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.

 

 

வணிகம் செய்திகள்

 

ஹெச்-4 விசா ஆணை ரத்து

ஹெச்-4 விசா பணி ஆணை ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஜூன் மாதம் இறுதியில் ரத்து செய்யப்படும்.

ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் ,அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

புத்தகம்

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஏ.கோப்பண்ணா எழுதினார்.

 


Download Daily Current Affairs (2018-MAY- 24 & 27)

 

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: