Daily Current Affairs (May 4-7)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 4-7
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
உலக செஸ் போட்டி
போட்டி நடைபெற்ற இடம் – ஐரோப்பா
வென்றவர் – லக்ஷனா(வயது 6)
பள்ளி – காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 1-ம் வகுப்பு மாணவி
சாதனை – சாம்பியன் பட்டம்
ஆசிய வலுதூக்குதல்
போட்டி – ஆசிய வலுதூக்குதல் போட்டி
பிரிவு – பெண்களுக்கான 84 கிலோ எடை பிரிவு
போட்டி நடைபெற்ற இடம் – ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்
வென்றவர் – சென்னை மாணவி ரம்யா
வென்றது – தங்கப்பதக்கம்
தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ்
தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 06.05.2018ல் கொழும்பில் தொடங்கியது.
முதல் நாளில் இந்தியா 11 தங்கம், 10 சில்வர், மூன்று வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ப்ராஹ் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்
போட்டி – ப்ராஹ் ஓபன் டென்னிஸ்
போட்டி நடைபெற்ற இடம் – செக்குடியரசின் தலைநகர் ப்ராஹ்
நாள் – 05.05. 2018
வென்றவர் – உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோ
(ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை வீழ்த்தினார்)
இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ்
போட்டி – இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ்
வெற்றியாளர் – ஜப்பான் வீரர் டாரோ டேனியல்
வென்றது – முதல் ஏடிபி சாம்பியன் பட்டம்
முனிச் ஓபன் டென்னிஸ்
போட்டி – முனிச் ஓபன் டென்னிஸ் போட்டி
நடைபெற்ற இடம் – ஜெர்மனி
வெற்றியாளர் – ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்
வெற்றி – சாம்பியன் பட்டம்
ஹாக்கி
தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவராக சேகர் மனோகர் தேர்வு.
சர்வதேச செய்திகள்
மே 4 – சர்வதேச தீயணைப்புப் படையினர் தினம்
அமெரிக்காவில் இடைக்கால நீதிபதி இந்திய பெண்
நியூயார்க் நகர சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தீபா அம்பேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் நீதிபதியாகியுள்ள இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் தீபா அம்பேகர் பெற்றுள்ளார்
அவருக்கு முன்பாக அமெரிக்காவில் 2015ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜப்பானில் காளைகள் மோதும் வீர விளையாட்டு
ஜப்பானிலும் ஆண்டுதோறும் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெறுகிறது.
ஜப்பானில் காளைகள் மோதும் மைதானத்திற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை
உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை லண்டனில் உள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின் ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்படுகிறது .
ரஷ்யா அதிபர்
ரஷியாவின் அதிபராக நான்காவது முறையாக 07.05.2018ல் விளாடிமிர் புதின் பதவியேற்றார்.
ரஷியாவின் துணை பிரதமராக நிதி மந்திரி – அன்ட்டன் சிலுவனாவ்
பிரதமர் – டிமிட்ரி மெட்வடேவ்
தேசியசெய்திகள்
பிரவாசி பாரதீய திவாஸ்
வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையில் கொண்டாடப்படும் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.
‘அனிதா சாட்’ விண்ணுக்கு பயணம்
வளிமண்டலத்தில் உள்ள காற்றில் மாசு அளவு மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கண்டறிய திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து மே 6 2018 விண்ணில் ஏவப்படுகிறது.
கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம் – மே 7
இந்தியா(ஜன கன மன), வங்காளதேசம்(அமர் சோனார் பங்களா) என இரு நாடுகளுக்கு தேசிய கீதம் அளித்த வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் 158-வது பிறந்ததினம் 07.05.2018-ல் கொண்டாடப்படுகிறது.
கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர்
ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 10 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
ஜூலை மாதத்துக்கு பிறகு அமலுக்கு வரும்.
ஏப்ரில் மாதம் 2018 ல் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆயுஷ்மான் பாரத் கீழ் முதலாவது ஆரோக்கிய மற்றும் நல���வாழ்வு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
அறிவியல் செய்திகள்
சிக்குன்குனியா வைரஸ் அழிக்கும் என்சைம்
ஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.
ரூர்கே ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் என்எஸ்பி-2 புரோட்டீஸ் என்ற என்சைமில் இருந்து பெப்-1, பெப்-2 ஆகிய மூலக்கூறுகளை எடுத்து அதன் மூலம் சிக்குன்குனியா வைரஸ்களை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
நாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்
செவ்வாய் கிரகத்துக்கு பூகம்பங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் மைல்கல் விண்கலம் இன்சைட் என்பதை அனுப்பியுள்ளது.
விண்வெளி ஹோட்டல் – அரோரா ஸ்டேஷன்
இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்க இருக்கிறது.
அந்த ஹோட்டலுக்கு 2022-ம் ஆண்டு விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதன் முறையாக ரோபோ மூலம் தண்டு வட ஆபரேசன்
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழுவினர் முதன் முறையாக ரோபோ மூலம் தண்டுவட ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
Download Daily Current Affairs (2018-MAY- 4 & 7)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.