Daily Current Affairs – October 14th to 16th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 14th to 16th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 14th to 16th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் :-

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.

 

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு :-

அர்ஜென்டினாவில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய பெண்கள் ஹாக்கி அணி, மலேசியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

 

சாண்டோ டொமின்கோ ஓபன் டென்னிஸ் :-

லியாண்டர் பயஸ், மிஜுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலாவுடன் இணைந்து சாண்டோ டொமின்கோ ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார்.

 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:-

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குரோஷியாவின் போர்னா கரிக்கை தோற்கடித்து நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார்.

 

சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பை :-

இறுதிப்போட்டியில் இந்தியாவை 3-2 என்ற கணக்கில் பிரிட்டன் வீழ்த்தி, 2018 சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பையை வென்றது.

 

இளைஞர் ஒலிம்பிக்ஸ் :-

அர்ஜென்டினாவில் ஆண்கள் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் சூரஜ் பன்வார் வெள்ளி வென்றார்.

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 15 – மஹிலா கிசான் திவாஸ்

மஹிலா கிசான் திவாஸ் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.

புதுடில்லியில் நடைபெறும் விழாவில் வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கலந்து உரையாற்றுவார்.

 

அக்டோபர் 15 – முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டாக்டர் கலாம் இந்தியாவின் ஏவுகணை மனிதன் எனவும் அழைக்கப்படுகிறார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி தினமாக நினைவு கூறப்படுகிறது.

 

அக்டோபர் 16 – உலக உணவு தினம்

1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு நிறுவப்பட்டதன் நினைவாக அக்டோபர் மாதம் 16ந் தேதி உலக உணவு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 

உலக  செய்திகள்

 

காற்று தரம் எச்சரிக்கை அமைப்பு:-

புது தில்லியில், காற்று மற்றும் காற்று மாசுபாடு நிலைமைகளை கணிப்பதற்கு அமெரிக்க மற்றும் ஃபின்னிஷ் மாதிரிகள் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட காற்று தரம் எச்சரிக்கை அமைப்பை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள காற்றின் தரத்தை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கணித்துவிடக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை அரசு தொடங்கியுள்ளது.

இது குளிர்காலங்களில் ஏற்படும் அதிகபட்ச மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகளை செம்மைப்படுத்துவதற்கு உதவும்.

இந்த காற்றுத் தரத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அமைப்பு PM2.5 (நுண்ணிய, சுவாசிக்கக்கூடிய துகள்கள்), PM10 (கரடுமுரடான துகள்கள்), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), ஓசோன் (O3), சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) ஆகியவற்றின் உமிழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும்.

மேலும் இவ்வமைப்பு செயற்கைக்கோள் படங்கள், தூசிப் படலங்கள் மற்றும் இதர காரணிகளைக் கொண்டு தீ பற்றிய தகவல்களையும் அளிக்கும்.

இந்த அமைப்பு, டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வாயு மாசுவின் அளவினைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் தேசிய வளிமண்டல மையத்திடமிருந்தும், பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்திடமிருந்தும் மாதிரிகளை உபயோகப்படுத்தும்

 

கூட்டு பயிற்சித்திட்டம்:-

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு முதல் கூட்டு பயிற்சித்திட்டம் ஒன்றை இந்தியா மற்றும் சீனா துவக்கியுள்ளது.

 

விவசாய–ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் முனைவோர் திறப்பு விழா:-

உலக உணவு தினத்தின் போது, ​​வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் புது டில்லியில் இரண்டு நாள் விவசாய-ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் முனைவோர் திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்.

தீம் :- Unleashing potentials in agriculture for young agri-preneurs.

 

மாநாடுகள்

 

IHGF-டெல்லி கண்காட்சி :-

இந்தியாவின் மிகப்பெரிய IHGF- டெல்லி கண்காட்சியின் 46 வது பதிப்பு கிரேட்டர் நொய்டாவில் இந்தியா எக்ஸ்போ மையம் மற்றும் மார்ட்டில் ஜவுளித் துறை அமைச்சர் அஜய் தம்தா திறந்து வைத்தார்.

 

பல் அறுவைசிகிச்சை மாநாடு:-

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு புது தில்லியில் 5 வது பல் அறுவைசிகிச்சை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

திட்டங்கள்

 

இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டம்:-

புதுடில்லியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 35 உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிப் போட்டிகளுக்கான சாத்தியமான பதக்க வாய்ப்பை அடையாளம் காணவும், அதற்காக வீரர்களை தயார் செய்யவதையும் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

 

‘சௌபாக்கியா’வின் கீழ் விருது வழங்கும் திட்டம்:-

100 சதவீத வீட்டு மின்மயமாக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களின் DISCOMs / மின் துறை மற்றும் அவர்களது ஊழியர்களைப் பாராட்டுவதற்காக சவுபாக்யா திட்டத்தின் கீழ் மின் மற்றும் புது & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மாநில அமைச்சர் விருது வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. 

மத்திய அரசானது சௌபாக்கியாவின் கீழ் விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விருது திட்டமொைது 100% வீடுகளை மின்மயமாக்கல் அடைவதற்காக மின்விநியோக நிறுவனங்கள்  (DISCOMs – distribution companies), மாநிலங்களின் மின்துறைகள்  மற்றும் அவற்றின் ஊழியர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

இத்திட்டம் துவங்குவதற்கு முன்பே  99 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மயமாக்கத்தை ஏற்கனவே பெற்ற 8 மாநிலங்கள் இந்த விருதுகளுக்கு தகுதியற்றனவ ஆகும்.

அந்த 8 மொநிலங்கள் தமிழ்நொடு, கேரளா , ஆந்திரப் பிரதேசம் , கோவா, குஜராத்,ஹரியானா ,இமாச்சலப்பிரதேசம்  மற்றும் பஞ்சாப் ஆகியனவாகும்.   

சௌபாக்கியா திட்டமானது பிரதான் மந்திரி சஹத் பிஜ்லி ஹர் கர் யோஜனா என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

 

இளைஞர் சாலை பாதுகாப்பு கற்றோர் உரிம திட்டம்:-

2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளை 50 சதவிகிதம் குறைப்பதற்கான இலக்கை அடைய உதவும் இளைஞர் சாலை பாதுகாப்பு கற்றோர் உரிம திட்டத்தை அரசு துவக்கியது.

இளைஞர்களுக்கு, முதல்-முறை ஓட்டுனர்களுக்கு முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தைத் தருவது இதன் நோக்கமாகும்

பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஔஷதி பரியோஜனா

பி.பீ.பீ.ஐ மற்றும் பாங்க் ஆப் பரோடாவும் கூட்டாக பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஔஷதி பரிஜியானாவுக்கான டிஜிட்டல் ரொக்க முகாமைத்துவ முறையை செயல்படுத்தும் திட்டத்தை டி.டி. மாண்டவியா தொடங்கிவைத்தார்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா மற்றும் இலங்கை இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்:-

இந்திய நாட்டின் உதவியுடன் 50 மாடல் கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிக்க இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியா மற்றும் இலங்கை கையெழுத்திட்டது.

 

இந்தியா மற்றும் டான்சானியா இடையே ஒப்பந்தம்:-

இந்தியா மற்றும் டான்சானியா இடையே இந்தியாவின் வெளியுறவுத்துறை நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான டான்சானியா மையம், தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கழகம் மற்றும் டான்சானியா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கழகம் ஆகியவற்றின் இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

 

அலகாபாத் நகரின் பெயர் மாற்றம்:-

உத்தரப்பிரதேச அமைச்சரவை அலகாபாத் நகரின் பெயரை பிரயக்ராஜாக மாற்றுகிறது.

 

விருதுகள்

 

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் எதிர்காலக் கொள்கை தங்க விருதை சிக்கிம் பெற்றது.

உலகின் முதல் கரிம வேளாண்மை மாநிலமாக மாற்றுவதற்கான சாதனைக்கு பெற்றது.

பிரேசில், டென்மார்க் மற்றும் ஈக்வடார் ஆகியவை தங்களுடைய கொள்கைகளுக்கு வெள்ளி விருது வென்றன.

 

இணைய போர்ட்டல்

 

DRDO இணையதளம் “கலாம் விஷன் – டேர் டு ட்ரீம்” :-

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ‘ஏவுகணை மனிதன்’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக ‘கலாம் விஷன் – டேர் டு டிரீம்’ என்ற டி.ஆர்.டி.ஓ. இணையதளத்தை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

‘சி–விஜில்‘ பயன்பாடு:-

இந்திய தேர்தல் கமிஷன் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனிப்பட்ட இணைய அடிப்படையிலான மொபைல் செயலி சி-விஜிலை அறிமுகப்படுத்துகிறது. ‘CVIGIL’, இதில் ‘C’ என்பது ‘குடிமக்கள்’ என்பதைக் குறிக்கும்.

 

நியமனங்கள்

 

சந்தீப் பக்ஷி என்பவர் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 


 

 Download Daily Current Affairs [2018- Oct – 14 & 16]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: