Daily Current Affairs – September 10th to 12th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 10th to 12th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 10th to 12th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜூனியர் துப்பாக்கிச் சூடு வீரர்கள் நாட்டின் முதல் ஸ்கீட் பதக்கங்களை வென்றனர்.

கர்னிஹால், அனன்ஜீத் சிங் நருகா, ஆயுஷ் ருத்ரராஜூ அடங்கிய ஆண்கள் அணி வெள்ளி வென்றது.

குர்னிஹால் சிங் கர்சா தனிநபர் பிரிவில் வெண்கலத்தை வென்றார்.

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்து வென்றார்.

இது ஜோகோவிக்கின் 14 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம், மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டம் ஆகும்.

 

திட்டங்கள்

 

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம்

குழந்தைப் பருவ புற்றுநோயின் சிகிச்சை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை இந்த திட்டம் வழங்கும்.

 

திறன் மேம்பாட்டுத் திட்டம்

2017-18 முதல் 2019-20 திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 11 – சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 -வது ஆண்டு விழா

சுவாமி விவேகானந்தர் செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் உள்ள உலக மதங்களின் பாராளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார்.இந்த நாள்   சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது.

வேதாந்தா மற்றும் யோகா போன்ற தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய முக்கிய நபர்களில் ஒருவராக அவர் நினைவுபடுத்தப்படுகிறார்.

 

உலக செய்திகள்

 

BIMSTEC இராணுவ பயிற்சி (MILEX-18)

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா அமைப்பின் தொடக்க இராணுவப் பயிற்சி, MILEX-18 என்ற பெயரில் துவங்கியது.

 

மார்பத் திருவிழா

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தின் தெருக்களில் மார்பத் திருவிழாவை கொண்டாடப்படுகிறது.

 

அமெரிக்க தாக்குதல்களின் நினைவு நாள்

அமெரிக்கர்கள் செப்டம்பர் 11, 2001, நியூயார்க், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியாவில் கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்குதல்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

யுத் அபியாஸ்(Yudh Abhyas) 2018

இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சி யுத் அபியாஸ் 2018 உத்தரகாண்டிலுள்ள சௌபாத்தியாவில் இமயமலை அடிவாரத்தில் நடத்தப்படவுள்ளது.

 

கஜின்ட்(KAZIND) 2018

இந்திய மற்றும் கஜகஸ்தான் படைகளுக்கு இடையே ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி,கஜின்ட்-2018 கஜகஸ்தானின் ஓடார் இராணுவப் பகுதியில் தொடங்கப்பட்டது.

 

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதான உடன்படிக்கை ஜப்பானுக்கு பரிந்துரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவும் ஜப்பானும் ஆண்டின் இறுதிக்குள் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பகைமையை முடித்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா – புருனே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரிக்ஸ் வங்கி மற்றும் இந்திய ஏற்றுமதி–இறக்குமதி வங்கி இடையே ஒப்பந்தம்

பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

 

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விண்வெளியை அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இந்தியா மற்றும் எகிப்து இடையே ஒப்பந்தம்

வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இந்தியா மற்றும் மால்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுபடுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் (PM-AASHA)

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு (PM-AASHA) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

தரவரிசை 

ஐசிசி தரவரிசையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோலி உள்ளார்.

 

 

விருதுகள்

மிஸ் அமெரிக்கா விருது  நியா இமானி பிராங்க்ளின் என்பவர் பெற்றார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் என்பவர் எக்ஸலன்ஸிற்கான மெரில் ஸ்ட்ரீப் விருது பெற்றார்.

ஸ்ரீ மனோஜ் ஜலானி என்பவர்  ஐ.நா. ஒருங்கிணைந்த டாஸ்க் படை (UNIATF) விருது பெற்றார்.

பிஎஸ்என்எல் என்ற நிறுவனம் WiFi தலைமைக்கான விருது 2018 பெற்றது .

 

நியமனங்கள்

விபா பாதல்கர் என்பவர் ஹெச்.டி.எஃப்.சி லைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ரா  என்பவர் நேபாளத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

 

 


 

 Download Daily Current Affairs [2018- Sep – 10 & 12]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: