Daily Current Affairs (Sep 26th to 28th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Sep 26th to 28th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
இந்தியா–இலங்கை மகளிர் டி20 கிரிக்கெட்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.
ஆசியா கோப்பை கிரிக்கெட்
ஆசியா கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டி
துபாயில் நடைபெறும் ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கவுள்ளது இந்தியா.
முக்கியமான நாட்கள்
செப்டம்பர் 26 – அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவதற்கான சர்வதேச தினம்
2013 செப்டம்பர் 26 ஆம் தேதி நியூ யார்க்கில் பொது விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அணுசக்தி நீக்கம் தொடர்பான விஷயங்களில் ஆழமான ஈடுபாடு கொள்ளவும் அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவதற்கான சர்வதேச தினத்தை பொதுச் சபை அறிவித்தது.
செப்டம்பர் 28 – தகவல் பெற யுனிவர்சல் அணுகலுக்கான சர்வதேச தினம்
தீம் – “The Asian Digital Revolution: Transforming the Digital Divide into a Dividend through Universal Access”.
செப்டம்பர் 28 – உலக ராபீஸ் தினம்
ராபீஸ் தினம், ராபீஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக ராபீஸ் தடுப்பூசியை உருவாக்கிய பிரஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டரின் மறைந்த தினம் 28 செப்டம்பர் ஆகும்.
தீம் – ‘Rabies: Share the message. Save a life’.
திட்டங்கள்
பிரதான் மந்திரி கௌஷல் கேந்திரா
ஒடிசா காலாஹண்டி, தர்மகாரில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,ஆன்மிக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் இணைந்து பிரதான் மந்திரி கௌஷல் கேந்திராவை தொடங்கி வைத்தார்.
இந்த மையம் கரிம வேளாண்மை, பிளம்பர், தையல் இயந்திரம் ஆபரேட்டர், வீட்டு சுகாதார உதவியாளர் மற்றும் வீட்டு உபயோக பொருள்களின் மின்சக்தி தீர்வுகள் போன்ற ஐந்து பணிப் பிரிவுகளில் திறன்களை மேம்படுத்தும் படிப்புகளை வழங்கும்.
SATAT தொடக்கம்
பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி புது தில்லியில் பசுமை போக்குவரத்துக்கான மாற்று எரிபொருளாக அழுத்தப்பட்ட உயிர் வாயுவை ஊக்குவிப்பதற்காக புதுமையான SATAT தொடக்கத்தை PSU எண்ணெய் வணிக நிறுவனங்களுடன் இணைந்து துவங்கி வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா -2018
ஜெய்ப்பூரில் ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா 2018 ஐ துணைக்குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா என்ற பெயரிலான மூன்று நாள் நடைபெறும் சர்வதேச மாநாடானது இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.
இம்மாநாட்டில் சிறந்த ஸ்மார்ட் சிட்டிக்கான விருது ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் நகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக செய்திகள்
ஆயுஷ் தகவல் மையம்
ரோமானியாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் ஆயூஸ் தகவல் மையத்தை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இது ஆயூர்வேதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆயூர்வேத முறையை ஊக்குவிக்கவும் ரோமானியாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில், ஆயூஷ் தகவல் மையத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
பஞ்சதந்திரா தொகுப்பு
பழங்குடியினரின் கைவினைப் பொருட்களான கைத்தறி மற்றும் கலைப் பொருட்கள் “பஞ்சதந்திரா தொகுப்பு” என்ற பெயரில் தீபாவளி விற்பனைக்கு பிரபலப்படுத்துவதற்காக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், விளம்பரத் தூதராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
குற்றவியல் குற்றம் (சட்டபிரிவு 497)
திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இணைய போர்ட்டல் – மொபைல் செயலிகள்
டிஜிவார்தா(DigiVaarta)
டிஜிவார்தா(DigiVaarta),அணுகலை விரைவுபடுத்த மற்றும் நிலைமாற்ற நடவடிக்கைக்கான நிலையை அடைய பல்வேறு திட்டங்களில் குடிமக்கள் கல்வி மூலம் நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்திற்காக செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும்.
ஜன் தன் தர்ஷக்
நிதி அமைச்சகம் நிதி இணைப்பின் ஒரு பகுதியாக மொபைல் செயலி “ஜன் தன் தர்ஷக்”ஐ தொடங்கி வைத்தார்.
இது வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், பண இயந்திரம் வசதிகள், வங்கிக் கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான திட்டம் ஆகும் .
ஒரு இடத்திலுள்ள நிதிச் சேவை தொடுபுள்ளியை கண்டறிய பொது மக்களுக்கு வழிகாட்டல் வழங்குவதற்கான மொபைல் செயலி இதுவாகும்.
http://www.psbloansin59minutes.com வலைத் தளம்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குகடன் அளித்து ஊக்குவிக்க நிதி அமைச்சர் அருண் ஜேடில் புதிதாக http://www.psbloansin59minutes.com என்ற இணைய�����ளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த இணையதளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்த 7 அல்லது 8 வேலை நாட்களுக்குள், கடன் தொகை, உரியவருக்கு கிடைத்துவிடும் என்றும் நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது.
மேலும் வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், ஏடிஎம் வசதிகள், வங்கிக் கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான ஜன் தன் தர்ஷக் என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
psbloansin59minutes.com என்ற வலைப்பின்னல் மூலம் எம்எஸ்எம்இ (MSME)க்கு ரூ.1 கோடி வரையிலான கடனை 59 நிமிடங்களுக்குள் வழங்க சிட்பி (SIDBI) மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளிடம் (PSBs) பெற உதவும்.
மாநாடுகள்
லோக் மந்தன் 2018
“லோக் மந்தன் 2018” என்ற மாநாடு ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள கலாச்சாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தேசிய இலக்கிய மற்றும் அறிவார்ந்த மாநாடு ஆகும்.இதனை துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தவிர்க்க, சட்டம் மற்றும் நீதி துறை, சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல், மருத்துவ துறையில், வேளாண் மற்றும் அதைச் சார்ந்த தொழில்துறைகளில் கூட்டு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நிதி ஆயோக் மற்றும் ரஷியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஆயோக் மற்றும் ரஷிய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே உள்ள கூட்டுறவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா மற்றும் ஓமன் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஓமனும் ஒப்புதல் பெற்றது.
ஐந்தாண்டு நிலையான வளர்ச்சி
இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஐந்து ஆண்டு (2018-2022) நிலையான வளர்ச்சி கட்டமைப்புக்கு கையெழுத்திட
விருதுகள்
ஐ.நா. சுற்றுச்சூழல் விருது
ஐ.நா. சுற்றுச்சூழல் விருதானது பிரதமர் மோடி பெற்றார்.
இந்த விருது சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும் பெற்றார்.
தொழில் முனைவோர் பார்வைக்கான விருது
தொழில் முனைவோர் பார்வைக்கான விருதை கொச்சின் சர்வதேச விமானநிலையம் பெற்றது (நிலையான ஆற்றலைப் பயன்படுத்துவதில் தலைமை தத்துவம்).
கொள்கை தலைமைப் பிரிவு
கொள்கை தலைமைப் பிரிவுக்கான விருது பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் மற்றும் மோடி ஆகியோருக்கு (சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் வெற்றிக்காக தங்கள் முன்னோடிப் பணிக்காக) வழங்கப்பட்டது.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
இந்தியாவில் அறிவியலின் பல்துறைகளில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் நிறுவனரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரின் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.1958-ல் இவ்விருது முதன்முதலில் வழங்கப்பட்டது.
CSIR எனும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் ஆண்டுதோறும் உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், கணிதம், மருத்துவம், இயற்பியல் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் பயன்பாட்டு அல்லது அடிப்படை ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க, சிறந்த பங்களிப்பினை அளிப்பவர்களுக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்படும்.
விருது பெற்றவர்கள் சார்ந்த பல்கலைக்கழகம் /நிறுவனம் துறை
டாக்டர் அஸ்வின் அனில் குமஸ்தே IIT பாம்பே பொறியியல் அறிவியல்
டாக்டர் அமித் அகர்வால் IIT பாம்பே பொறியியல் அறிவியல்
டாக்டர் பார்த்தசாரதி சக்ரவர்த்தி CSIR-NIO, கோவா பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்
டாக்டர் மதிநெனி வெங்கட் ரத்னம் தேசிய வளிமண்டல ஆய்வு ஆய்வகம், திருப்பதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்
டாக்டர் ஸ்வாதின் குமார் மண்டல் IISER கொல்கத்தா வேதியியல் அறிவியல்
டாக்டர் ராகுல் பானர்ஜி IISER கொல்கத்தா வேதியியல் அறிவியல்
டாக்டர் தாமஸ் புகாடையில் IISER புனே உயிரியல் அறிவியல்
டாக்டர் கணேஷ் நாகராஜு IISc பெங்களூரு உயிரியல் அறிவியல்
டாக்டர் அமித் குமார் IIT டெல்லி கணித அறிவியல்
டாக்டர் நிதின் சக்ஸேனா IIT கான்பூர் கணித அறிவியல்
டாக்டர் கணேசன் வெங்கடசுப்பிரமணியன் NIMHANS, பெங்களூரு மருத்துவ அறிவியல்
டாக்டர் ஆதிதி சென் தே ஹரிஷ்-சந்திரா ஆய்வு நிறுவனம், அலாகாபாத் உடல் அறிவியல்
டாக்டர் அம்பரிஷ் கோஷ் IISc பெங்களூரு உடல் அறிவியல்
தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17
புதுதில்லியில் நேற்று, 2016 – 17 ஆம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை அமைச்சர் கே.ஜே. அல்ஃபோன்ஸ் அவர்கள் வழங்கினார்.
சுற்றுலாத்துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக கீழ்கண்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
முதல் பரிசு – ஆந்திரப் பிரதேசம்
இரண்டாவது பரிசு – கேரளா
மூன்றாம் பரிசு – ராஜஸ்தான் மற்றும் கோவா
டிஜிட்டல் மீடியா விருதுகள்
WAN-IFRA இந்தியா 2018ன் 26வது ஆண்டு மாநாட்டில் மூன்றாவது தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகள் வழங்கப்பட்டது.
மெட்ராஸ் கூரியர் என்பவருக்கு தங்கக் கோப்பை வழங்கப்பட்டது.
இந்துவின் மொபைல் ஆப் பிரீஃப்கேஸ் & சாகல் மீடியாவின் அக்ரோவோன் ஆப்பிருக்கு வெள்ளிகோப்பை வழங்கப்பட்டது.
இந்துக் குழுவின் ஸ்போர்ட்ஸ்டார் லைவ் என்பதுக்கு வெண்கலக் கோப்பை வழங்கப்பட்டது.
தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச என்ற விமான நிலையம்(அகமதாபாத்) என்ற முக்கிய நகரப் பிரிவில் சிறந்த நிலையத்திற்கான விருது பெற்றது.
தேவி அஹில்யா பாய் ஹோல்கர் என்ற விமான நிலையம்(இந்தோர்) ‘ரெஸ்ட் ஆப் இந்தியா‘ பிரிவில் சிறந்த விமான நிலையத்திற்கான விருது பெற்றது.
இந்தோர் என்ற விமான நிலையம் ‘பிராந்தியத்திற்கான சிறந்த விமான நிலையம்‘ விருது பெற்றது.
“வயோஸ்ரேஷ்த விருது – 2018″
அக்டோபர் 1, 2018 இல் முதியவர்களுக்கான சர்வதேச தினத்தில் மூத்த குடிமக்களுக்கான விருதுகளை துணைக்குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.
நியமனங்கள்
ஸ்ரீ சஞ்சய் குமார் என்பவர் தீ சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டு காவலர்கள் ,பொது இயக்குனராக(FS, CD & HG) நியமிக்கப்பட்டார்.
லோக்பால் தேடல் குழு தலைமை அதிகாரியாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டார்.
Download Daily Current Affairs [2018- Sep – 26 & 28]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.