Daily Current Affairs – September 7th to 9th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 7th to 9th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 7th to 9th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ISSF உலக சாம்பியன்ஷிப்

சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் ஜூனியர் போட்டியில் இந்தியாவின் ஹ்ரிதெய் ஹசாரிகா தங்கம் வென்றார்.

 

ISSF உலக சாம்பியன்ஷிப்

ஐ.எஸ்.எஸ்.எப் உலக சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டைப் பொறி பிரிவில் தங்கப் பதக்கத்தை அன்குர் மிட்டல் வென்றார்.

 

MRF F1600 பட்டம்

ராகுல் ரங்கசாமி MRF ஃபார்முலா 1600 பிரிவின் சாம்பியன் ஆனார்

 

IAAF கான்டினென்டல் கோப்பை

செக் குடியரசின் ஒஸ்ட்ராவாயில் நடைபெற்ற IAAF கான்டினென்டல் கோப்பை போட்டியில் ஆண்கள் ட்ரிபிள் ஜம்பில் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார்.

 

யு.எஸ் ஓபன் டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து ஜப்பானின் நவோமி ஒசாகா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

 

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 8 – 52 வது சர்வதேச எழுத்தறிவு தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

மாநாடுகள்

 

மரபணு ஆர்த்தோபீடியா மாநாடு

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 6 வது சர்வதேச மரபணு ஆர்த்தோபீடியா சொசைட்டியின் இந்திய மாநாட்டினை தொடங்கிவைத்தார்.

தீம் :- “குறைக்கப்பட்ட வீக்கத்துடன் அதிகரித்த வாழ்நாள் மற்றும் மேம்பட்ட இயக்கம்”.

 

சுகாதார உச்சி மாநாடு

“கர்நாடகா சுகாதார உச்சி மாநாடு 2018”  என்ற ஒரு நாள் மாநாடு பெங்களூரில் நடந்தது.

நோக்கம் :-  “அனைத்து உடல்நல வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

 

உலக அங்கீகார உச்சி மாநாடு (WOSA-2018)

புது தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  4 வது உலக அங்கீகார உச்சி மாநாட்டை (WOSA-2018) திறந்து வைத்தார்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா பிரான்ஸ் உடன்படிக்கை

இந்தியாவும் பிரான்ஸும் “உங்கள் நகரத்தை மாற்றியமைத்தல்” (MYC)க்கான ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதில்  “உங்கள் நகரத்தை மாற்றியமைத்தல்”(MYC) நாக்பூர், கொச்சி மற்றும் அஹமதாபாத் ஆகிய மூன்று பைலட் நகரங்களில் நகர்ப்புற போக்குவரத்து தொடர்பான பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகளை குறைப்பதை ஆதரிப்பது  நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மாநில செய்திகள்

 

வல்லபாய் படேல் சிலை திறப்பு

அக்டோபர் 31ம் தேதி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்.

நோக்கம் : இந்த நாள் பெரிய தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரின் ஆண்டு நிறைவைக் குறிக்கும்.

 

‘ஹஸ்ரத்கஞ்ச் சௌராஹா‘ பெயர்மாற்றம்

உத்தரப் பிரதேசத்தில், லக்னோ நகரின் சின்னமான ‘ஹஸ்ரத்கஞ்ச் சௌராஹா’ பெயரை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல் சௌக்’ என பெயர்மாற்றப்படவுள்ளது.

 

நியமனங்கள்

 

அமிதாப் சௌத்ரி என்பவர்  ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

ஷரத் ஷர்மா என்பவர்  ஜெட் ஏர்வேஸின் சுதந்திர இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் பூர்ணா சந்திர தாபா என்பவர்  நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அமிதாப் சௌத்ரி என்பவர்  ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

ஷரத் ஷர்மா என்பவர்  ஜெட் ஏர்வேஸின் சுதந்திர இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அன்சுலா காந்த் என்பவர் எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அஷ்வானி பாட்டியா என்பவர்  எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  


 

 Download Daily Current Affairs [2018- Sep – 7 & 9]

 

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: