தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16

தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16

தேசிய தடுப்பூசி நாள் என்பது தேசிய நோய் தடுப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில், தடுப்பூசி குறித்தும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுபூசி குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் இதுவரை சுமார் 3 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

  • தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ஒட்டு மொத்த தேசத்திற்கும் உணர்த்துவதற்காக இந்தத் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இது தேசிய நோய்த் தடுப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 1995 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ சொட்டு மருந்து என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி, வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தின் முதல் தவணையினை வழங்கியது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, ” Vaccines Work for all” என்பதாகும்.

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

நோய் தடுப்பு என்றால் என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், நம் உடலுக்கு சேராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் நுழையும்போது அவற்றுக்கு எதிராக செயல்பட்டு அழிக்கக்கூடிய ஒரு இயற்கையான செயல்பாடு நோய் தடுப்பு ஆகும். ஒரு சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட நோய் கிருமிகளின் செல்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவை மீண்டும் உடலுக்குள் தீங்கு ஏற்படுத்தாத வண்ணம் தடுக்கின்றன. இதனால், ஒவ்வொருவரும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இதுபோன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.

தடுப்பூசிகள் என்பது நோய் கிருமிகளை அழிக்க வெளியில் இருந்து உடலுக்குள் செயற்கையான நோய்கிருமிகளை உட்செலுத்துவதாகும். செயலிழந்த நிலையில் உடலுக்குள் செலுத்தப்படும் நோய்க்கிருமிகள், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டி குறிப்பிட்ட நோய்க்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க வைக்கும். இதன்மூலம் ஆன்டிபாடிகள் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.

தேசிய தடுப்பூசி நாளின் நோக்கம்:

நாட்டில் இருந்து போலியோ நோயை முற்றும் முழுதாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய தடுப்பூசி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாளில் தொற்று நோய்கள், வாழ்வியல் நோய்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?, சுகாதாரத்தின் அவசியம் மற்றும் உணவு முறைகள் குறித்தும் நிபுணர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. தேசிய சுகாதார அமைச்சகத்தின்படி, தேசிய தடுப்பூசி நாளில் ஆண்டொன்றுக்கு 17.2 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம்;

போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 சொட்டு மருந்துகள் வாய் வழியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு, கடைபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக போலியோ பாதிப்பு இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார மையம் 2014ம் ஆண்டு அறிவித்தது. இந்தியாவில் கடைசியாக, 2011, ஜனவரி 30ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் போலியோ பாதிப்பு பதிவாகியிருந்தது. போலி சொட்டு மருந்து நடைமுறைக்கு வந்தபின்னர் டெட்டன்ஸ், காசநோய், ரொட்டா வைரஸ் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது.

யுனிவர்சல் நோய் தடுப்பு திட்டம்

1978ம் ஆண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் யுனிவர்சல் நோய் தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1989ம் ஆண்டு இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பேக்சிலஸ் கால்மெட்- குயரின் தடுப்பூசி (Bacillus Calmette-Guerin), போலியோ தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, டெட்டனஸ் மற்றும் வயது வந்தோருக்கான டிப்தீரியா (டி.டி) தடுப்பூசி, டிபிடி, ஜேஇ தடுப்பூசி, பிசிவி, ரோட்டா வைரஸ் தடுப்பூசி, பென்டாவலண்ட் தடுப்பூசி ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்திராதனுஷ் திட்டம்:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி. நட்டாவால் டிசம்பர் 25, 2015ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 90 விழுக்காடு நோய் தடுப்பு நிலையை நோக்கி முன்னேறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, இந்திரா தனுஷ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. டிப்தீரியா, ஹெபடைடிஸ் பி, போலியோ, தட்டம்மை, குழந்தை பருவ காசநோய், இருமல் பிரச்சனை, ஹீமோபிளஸ் இன்ப்ளூயன்ஸாவினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், நிமோனியா மற்றும் ரெட்டன் வைரஸூக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. என்செபாலிடிஸுக் நோய்க்கும் இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன.

 

தடுப்பூசி கண்டுபிடிப்பு

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பெரியம்மை என்ற நோயால் மக்கள் பெரிதும் பாதித்து இருந்தார்கள்.இந்நோயால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.அதிலிருந்து விடுபடமுடியாமல் தவித்து கொண்டிருந்த மக்களுக்கு 1798ல் எட்வர்டு ஜென்னர் என்பவர் ஸ்மால் பாக்ஸ் வேக்சின் தடுப்பு மருந்தை கண்டறிந்தார்.இந்த தடுப்பூசியின் பயனால் 1980 ல் ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றிலும் அழிந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

அதன் பின் ஏராளமான தடுப்பூசிகளும்,தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணத்தால் எட்வர்டு ஜென்னர் தடுப்பூசி வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரை தொடர்ந்து லூயிஸ் பாஸ்டர், காலரா, ஆந்தாரக்ஸ், பிளேக் போன்ற நுண்ணுயுரி கிருமிகளுக்கு நோய் தடுப்பு மருந்துகளை கண்டறிந்ததோடு மட்டுமில்லாமல் அவற்றின் தாக்கத்தை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தவர்.முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.அந்த தினம் தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் பிறகு பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டாலும் பிரசித்த பெற்ற போலியோ தடுப்பு மருந்தும் மட்டும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: