TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –02 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –02 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 02-01-2021

Tamil Nadu

 

 1. The Prime Minister Narendra Modi on January 1 unveiled the foundation for a Light House Project under the Global Housing Technology Challenge India of the Pradhan Mantri Awas Yojana (Urban) at Perumbakkam near here. Tamil Nadu was one of the six States selected for the project.

 

மத்திய அரசு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘லைட்ஹவுஸ் புராஜெக்ட்’ என்ற பெயரில் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்கீழ் 6 மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் தலா ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளன. இவ்வீடுகளை 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ், சென்னை பெரும்பாக்கத்தில் நகர்ப்புற ஏழைகளுக்காக 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி டிசம்பர் 1 அன்று அடிக்கல் நாட்டினார்.

 

India

 

 1. The DRDO observed the 63rd Foundation Day of its establishment on January 1, 2021.

 

டிஆர்டிஓ அதன் 63 வது நிறுவன தினத்தை ஜனவரி 1, 2021 அன்று அனுசரித்தது.

 

 1. In a significant New Year announcement, the Union Minister Dr. Jitendra Singh has informed of the government decision to extend “Disability Compensation” for all serving employees, if they get disabled in the line of duty while performing their service and are retained in service in spite of such disablement.

 

பணியில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் “ஊனமுற்றோர் இழப்பீடை” விரிவுபடுத்தும் அரசாங்க முடிவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதாவது பணியில் ஊனமுற்று, மேலும் பணியில் தொடரும் ஊனமுற்ற ஊழியர்களுக்கு ஊனமுற்றோர் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

 

 1. The gross GST revenue collected in the month of December 2020 rose to ₹1,15,174 crore, an all-time monthly high since the implementation of the new tax regime, according to Finance Ministry.

 

நாட்டில் ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்குப்பின், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக கடந்த மாதம் (டிசம்பர் 2020) ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.

 

 1. The Prime Minister Narendra Modi on Friday laid the foundation of six Light House Projects, as part of the Global Housing Technology Challenge-India (GHTC-India) initiative, in Indore, Rajkot, Chennai, Ranchi, Agartala and Lucknow via video conference.

 

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறுகிய கால புதுமை தொழில்நுட்பத்துடன் கூடிய வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். உலகளாவிய ‘வீட்டு வசதி தொழில்நுட்ப சவால் இந்தியா’ என்ற அமைப்பின் கீழ் இந்த  வீடுகள் கட்டப்பட உள்ளன.

 

 1. The draft of the 5th National Science Technology and Innovation Policy, 2020 has been finalized and is now available for public consultation.

 

இந்தியாவின் 5வது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு கொள்கை (STIP), 2020 இறுதி செய்யப்பட்டு இப்போது பொது ஆலோசனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

 

International

 

 1. India and Pakistan on January 1 exchanged through diplomatic channels at New Delhi and Islamabad the lists of civilian prisoners and fishermen who are in the custody of both countries in line with the provisions of the 2008 Agreement under which such lists are exchanged every year on January 1 and July 1.

 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியும், ஜூலை 1 ஆம் தேதியும் பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

 

MULTIPLE CHOICE OF (MCQs)

 

 1. In which place of Tamil Nadu, the foundation for a Light House Project under the Global Housing Technology Challenge India has been laid?

 1. Perambalur

 2. Perumbakkam

 3. Perungalathur

 4. Pennagaram

 

உலகளாவிய வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் இந்தியாவின் கீழ் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான அடிக்கல் தமிழ்நாட்டின் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

 1. பெரம்பலூர்

 2. பெரும்பாக்கம்

 3. பெருங்கலத்தூர்

 4. பென்னாகரம்

 

 1. What is the foundation day of DRDO?

 1. January 1

 2. January 2

 3. January 3

 4. January 4

 

டிஆர்டிஓவின் நிறுவன நாள் எது?

 1. ஜனவரி 1

 2. ஜனவரி 2

 3. ஜனவரி 3

 4. ஜனவரி 4

 

 1. Which is the highest revenue collected month since the implementation of GST regime?

 1. December 2019

 2. January 2020

 3. December 2020

 4. January 2021

 

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிக வருமானம் அரசுக்கு ஈட்டிய மாதம் எது?

 1. டிசம்பர் 2019

 2. ஜனவரி 2020

 3. டிசம்பர் 2020

 4. ஜனவரி 2021

 

 1. How many th National Science Technology and Innovation Policy was drafted in 2020?

 1. Second

 2. Third

 3. Fourth

 4. Fifth

 

2020 ஆம் ஆண்டில் எத்தனையாவது ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கை’ தயாரிக்கப்பட்டது?

 1. இரண்டாவது

 2. மூன்றாவது

 3. நான்காவது

 4. ஐந்தாவது

 

 1. When was the agreement between India and Pakistan signed for exchanging the list of prisoners?

 1. 2008

 2. 2009

 3. 2010

 4. 2011

 

கைதிகளின் பட்டியலைப் பரிமாறிக் கொள்வதற்கான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

 1. 2008

 2. 2009

 3. 2010

 4. 2011

 

 1. Which of the following place is not laid with the foundation of Light House Project on January 1, 2021 by the Prime Minister?

 1. Rajkot

 2. Ranchi

 3. Raipur

 4. Agartala

 

ஜனவரி 1, 2021 அன்று பிரதமரால் லைட் ஹவுஸ் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படாத இடம் எது?

 1. ராஜ்கோட்

 2. ராஞ்சி

 3. ராய்ப்பூர்

 4. அகர்தலா

 

1

2

3

4

5

6

B

A

C

D

A

C

DOWNLOAD  Current affairs -02 JAN- 2020 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: