Daily Current Affairs – 2019 February 4 to 7 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (4 to 7- Feb 2019 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  4 to 7 Feb 2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர்

முதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் டி20 தொடர்

பெண்களுக்கான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

ரஞ்சி கோப்பை

சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.

 

EGAT கோப்பை

உலக சாம்பியன் இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்துக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 192 கிலோ எடையை தூக்கி சாம்பியனானார் மீராபாய் சானு.

 

ஃபெடரேசன் கோப்பை டென்னிஸ் போட்டிகள்

அஸ்தானாவில் நடைபெற்ற ஃபெடரர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா ஓசானியா குரூப் 1ல் இந்தியா தாய்லாந்தை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

 

9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப்

9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார், ஹரியானாவில் தொடங்கியது.

முக்கியமான நாட்கள்

பிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம்

ஐக்கிய நாடுகள் சபையினால் பெண்களின் பிறப்புறுப்புச் சிதைவை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம் பிப்ரவரி 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய செய்திகள்

திறன் மேம்பாட்டு பயிற்சி

அசாம் அரசு கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளது.

மத்திய பிரதேசம் 70%  மக்களை வேலை வாய்ப்பு

போபால், மத்தியபிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களை 70% கட்டாயம் பணியில் அமர்த்த வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச அரசு அனைத்து தொழில்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் எழுபது சதவீதத்தை வழங்குவதற்கு கட்டாயமாக்கியுள்ளது. புதிய தொழிற்துறை கொள்கை மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கி தலைவர்

 உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் ((David Malpass)) பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் கடந்த 1ஆம் தேதியுடன் பதவி விலகினார்.

பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்களை ஆய்வு செய்ய குழு

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஸ்ரீராஜிவி சங்கத்னா தலைவர் விவேக் பண்டிட் தலைமையிலான 17 உறுப்பினர்கள் குழு வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பழங்குடி மக்களுக்கு சரியான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.

தரவரிசை

ஐசிசி ஒருநாள் தரவரிசை

1) இங்கிலாந்து

2) இந்தியா

3) தென் ஆப்பிரிக்கா

 • ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று  2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 • இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில்  உள்ளது.
 • தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.
 • பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 • ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.

பேட்ஸ்மேன் தரவரிசை

பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசை

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.

மாநாடுகள்

ஆயுதப் படை மருத்துவ மாநாடு

ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரி, புனே 67 வது வருடாந்தர ஆயுதப் படைகள் மருத்துவ மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை ஆயுதப் படைகள் மருத்துவ சேவையின் பொது இயக்குனர் லெப்டினண்ட் ஜெனரல் பிபின் பூரி தொடங்கி வைத்தார்.

திட்டங்கள்

ஷெர்ரி சம்ரிதி உத்சவ்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) ஷெர்ரி சம்ரிதி உத்சவ், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (DAY-NULM), தீன்தயால் அந்தியோதயா திட்டம் (DAY-NULM) ஆகியவற்றை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.

இந்தியாவை அறிவோம் திட்டம்

53-வது இந்தியாவை அறிவோம் திட்டத்தில் இளம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிஜி, கயானா, மொரிஷியஸ், போர்த்துகல், தென்னாபிரிக்கா, இலங்கை, சூரினாம் மற்றும் திரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவற்றிலிருந்து 40 பங்கேற்பாளர்கள் (24 பெண் மற்றும் 16 ஆண்களும்) பங்கேற்கின்றனர். மகாராஷ்டிரா மற்றும் டாமன் & டையூ ஆகியோர் இந்த பதிப்பகத்தின் கூட்டாளிகள்.

18-30 வயதிற்கு உட்பட்ட இந்தியாவின் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு நம் நாட்டினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளைப் பயன்படுத்தி அவர்களை தங்கள் முன்னோர்களின் தாய்நாட்டிற்கு அருகில் கொண்டுவரும் நோக்கத்துடன் “இந்தியாவை அறிவோம் திட்டத்தை” இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

UNDP சிறு மானிய திட்டம் (SGP)

MoEFCC- உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, UNDP சிறு மானிய திட்டம் (SGP) பற்றிய ஒர்க்ஷாப் புது டில்லியில் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (MoEFCC) செயலாளர், ஸ்ரீ சி.கே. மிஸ்ரா, துவக்கி வைத்தார்.

அடல் புஜல் யோஜனா

ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டம் – நிலத்தடி நீரை சமூக பங்கேற்புடன் நிலையான மேலாண்மை திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. இந்திய அரசு மற்றும் உலக வங்கி 50:50 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்க உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

விவசாயிகளை சேர்க்கும் பிரச்சாரம் துவக்க அரசு திட்டம்

கிசான் கிரெடிட் கார்ட்ஸ் (KCC) திட்டத்தின் கீழ் நிதி சேர்த்தலில் விவசாயிகளை சேர்க்கும் ஒரு பிரச்சாரத்தை அரசு துவக்க முடிவு செய்துள்ளது.

அறிவியல் செய்திகள்

ஜிசாட்-31

தகவல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் ஜி-சாட் 31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான்-5 என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஏவப்பட்ட ஏரியான்-5 ல் இருந்து ஜிசாட்31 மிகச்சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் தொலைக்காட்சி சேவைகளை பெற உதவியாக இருக்கும்

தொலைக்காட்சி சேவைகள் உள்ளிட்ட சில சேவைகளை இத்தனை நாட்களாக வழங்கி வந்த இன்சாட் 4சிஆர் செயற்கைகோள் காலம் கடந்த 2007 செப்டம்பர் மாதம் ஏவப்பட்டது. அதன் ஆயுள் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அதற்கு பதிலாக ஜி-சாட் 31 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜிசாட் 31 ஏடிஎம் சேவை, பங்கு சந்தை உள்ளிட்ட பல இ சேவைகளை வழங்க உதவியாக இருக்கும்.  

கங்கை நதி கால்வாயில் கழிவு நீர் கலப்பு

உத்தரபிரதேசத்தின் நிவாரி நகர் பஞ்சாயத்து சட்டவிரோதமாக கழிவு நீர் குழாய் அமைத்து நீர்பாசனத்துறைக்கு சொந்தமான மேல் கங்கை கால்வாயில் கழிவு நீரை கலந்து வருவதாக அந்த பகுதியில் வசிக்கும் விவேக் தியாகி என்பவர் தேசிய பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இங்குள்ள கழிவுநீரை சுத்திகரிக்க எந்த வழியும் இல்லாததால் இந்த மாசடைந்த நீர் கங்கை நதி கால்வாய் மூலம் சென்று கங்கை நதி உள்ளிட்ட மற்ற நீர்நிலைகளையும் பாழாக்கி வருகிறது.

இதனால் கங்கை நதி கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத உத்தரபிரதேச அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தது.

மாநாடுகள்

43 வது சர்வதேச புத்தக கண்காட்சி

இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஐஐடி கரக்பூரால் உருவாக்கப்பட்டது.

கொல்கத்தாவில் 43 வது சர்வதேச புத்தக கண்காட்சியில், இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் இலவசமாக புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய அனுபதிப்பதால் அதிக மக்களை ஈர்த்துள்ளது.

‘தர்வாசா பேண்ட்–பாகம் 2′ பிரச்சாரம்

நாட்டிலுள்ள கிராமங்களின் திறந்தவெளி கழிவுகள் இல்லாத நிலையை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் ‘தர்வாசா பேண்ட்-பாகம் 2’ பிரச்சாரத்தை ஸ்வச்ச பாரத் மிஷன் கிராமீன் அறிமுகப்படுத்தியது. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தயாரித்த இந்த பிரச்சாரம் மும்பையில் தொடங்கப்பட்டது.

 

விருதுகள்

சங்கீத நாடக அகாடமி விருதுகள் (Sangeet Natak Academy awards)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.

இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசை உட்பட 42 துறைகளைச் சார்ந்த நாற்பத்தி இரண்டு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

நியமனங்கள்

அமெரிக்க உள்துறை செயலாளராக டேவிட் பெர்ன்ஹார்ட் நியமிக்கப்பட்டார்.

சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பொறுப்பு செயலாளராக ஸ்ரீ சைலேஷ் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் டிஜிபி-யாக திங்கர் குப்தா நியமிக்கப்பட்டார்.


 

Download Daily Current Affairs [2019- Feb – 4 to 7]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: