Daily Current Affairs – 2018 November 4 to 7 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (4 to 7- Nov 2018 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  4 to 7 Nov 2018

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

SAFF U-15 சாம்பியன்ஷிப்

லலித்பூர், நேபாளத்தில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்களாதேஷ் 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் முறையில் பாகிஸ்தானை வென்றது.

 

சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன்

ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரிட்டனின் ராஜீவ் ஓசீப்பை தோற்கடித்து இந்தியாவின் சுபாங்கர் டே வென்றார்.

 

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2018

ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

 

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2 வது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

 

20 ஓவர் போட்டிகளில் அதிக சதம்

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோகித் சர்மா. சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

 

சீனா ஓபன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி

சீனா ஓபன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி சீனாவின் புழோவில் தொடங்கியது.

 

ஆசிய ஷாட்கண் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

குவைத்தில் நடைபெற்ற ஆசிய ஷாட்கண் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில், அங்கட் வீர் சிங் பாஜ்வா தங்கம் வென்றார்.

கான்டினென்டல்[கண்டம் அளவிலான] அல்லது உலக அளவிலான போட்டியில் வெல்லும் முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

 

முக்கியமான நாட்கள்

 

நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

2015 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக நவம்பர் 5ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை பரிந்துரைத்தது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் AMCDRR (பேரழிவு ஆபத்து குறைப்புக்கான ஆசிய அமைச்சக மாநாட்டில்) பேரழிவு ஆபத்து குறைப்பு (DRR) உடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

 

தேசிய ஆயுர்வேத தினம் 2018

3 வது தேசிய ஆயுர்வேத தினம் – 2018   nov 4 , ஷில்லாங் மேகாலயாவில் அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் “Ayurveda for Public Health” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய ஆயுர்வேத தினமானது நாடு முழுவதும் தன்வந்திரி ஜெயந்தியான அக்டோபர் – 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தின் தெய்வீக பரப்புநராக தன்வந்திரி கருதப்படுகிறார்.

ஆயுஷ் அமைச்சகத்தால் ஒவ்வொரு வருடமும் தேசிய ஆயுர்வேத தினத்தன்று தேசிய தன்வந்திரி ஆயுர்வேதா விருது வழங்கப்படுகிறது.

 

திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலம் – ஜார்கண்ட்

திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக ஜார்கண்ட், நவம்பர் 15ந் தேதிக்குள் உருவாகும்.

ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான வரும் நவம்பர் 15ஆம் தேதி, அம்மாநிலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகளைத் தொடர்ந்து, திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக உருவாகும் என்று,  கங்கை கிராம தூய்மை சம்மேளனத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

சுமார் 10,000 தூய்மை பணியாளர்கள், கங்கைத் தன்னார்வல இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான மக்கள்- அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் – உள்ளிட்டோர் இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

 

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வானில் ஒரு புன்னகை முகத்தை ஒத்திருக்கும்[ஸ்மைலி] விண்மீன் குழுக்களை கண்டறிந்தது.

வண்ணமயமான விணமீன் திரள்கள் கூட்டத்தின் மத்தியில் சிரித்த முகம் கொண்ட உருவத்தை ஹப்பிள் தொலை நோக்கி படம்பிடித்து உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நாசா நிறுவனம்  பால்வெளியில் நடைபெறும் மாற்றங்களை கண்காணிக்க விண்வெளி தொலைநோக்கிகளை அனுப்பி உள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டிருந்த ஹப்பிள் விண்வெளி தொலை நொக்கியில்  வினோத உருவம் ஒன்று பதிவாகி உள்ளது.அதாவது சிரிக்கும் முகத் தோற்றத்துடன் ஒளிரும் நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளது.இவ் உருவம் ஸ்மைலியை ஒத்து உள்ளது.

இதேவேளை ஹப்பிள் தொலைநோக்கி நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை படம் பிடிப்பதற்காகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

 

தரவரிசை

 

நீர் தரக் குறியீடு

122 நாடுகளில் 120 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

உலகில் உள்ள நீர் ஆதாரங்களில் 4 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. நீரின் தரவரிசையில் 122 நாடுகளி��் இந்தியா 120ஆவது நாடாக உள்ளது. நீர் கிடைக்கக்கூடிய 180 நாடுகளில் 133ஆவது நாடாக உள்ளது.

 

மாநாடுகள்

 

தொழில்முனைவோர் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான தேசிய கருத்தரங்கு

ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டுநாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது.

இந்தக் கருத்தரங்கை நித்தி ஆயோக் ஒத்துழைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இத்துறையில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

 

பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு

இந்திய போட்டி ஆணையம் (CCI) ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு தில்லியில் நடைபெறுகிறது. பொது கொள்முதல் சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி ஆலோசனை மற்றும் முக்கிய பங்குதாரர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 

திட்டங்கள்

 

ஆப்ரேஷன் கிரீன்ஸ்

ஆப்ரேஷன் கிரீன்ஸ் – நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் ஆப்ரேஷன் கிரீன்ஸ் அமல்படுத்தவதுற்கான நெறிமுறை உத்திகளுக்கு அனுமதியை வழங்கியது.

 

எல்லை பகுதி மேம்பாட்டுத் திட்டம்

அசாம், நாகலாந்து, சிக்கிம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய ஆறு எல்லைப்பகுதி மாநிலங்களுக்கு 113 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை சீர்செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா மற்றும் கொரியக் குடியரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலா மற்றும் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் கொரியக் குடியரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

இந்தியா மற்றும் மலாவிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் மலாவி நாட்டுக்கு இடையே குற்றவாளிகளை இரு நாடுகளுக்கு இடையில் ஒப்படைக்கும் ஒப்பந்தம், அணுசக்தி துறையில் சமாதான நோக்கங்களுக்கான ஒத்துழைப்பு, தூதரக மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்கு விசா விலக்கு ஆகிய மூன்று உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.

 

விருதுகள்

 

சர்வதேச பத்திரிக்கை [பிரஸ்] நிறுவன இந்தியா விருது

சர்வதேச பத்திரிக்கை [பிரஸ்] நிறுவன இந்தியா விருதை நம்ரதா பிஜி அஹுஜா பெற்றார்.

தி வீக் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் நம்ரதா பிஜி அஹீஜா 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சர்வதேச பத்திரிக்கை நிறுவன (International Press Institute – IPI) விருதை பத்திரிக்கைத் துறையில் சிறந்த நிபுணத்துவத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றார்.

தி வீக் பத்திரிக்கையில் நம்ரதா பிஜி அஹீஜா சிறப்பு மூத்த பத்திரிக்கை நிருபர் ஆவார்.

இவர் அந்த விருதினை நாகாலாந்தில் உள்ள இரகசிய முகாம்கள் மீதான தனது பிரத்தியேக கட்டுரைத் தொடருக்காக பெற்றார்.

இந்த விருது 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும், ஒரு கோப்பையையும், ஒரு பாராட்டுச் சான்றிதழையும் கொண்டதாகும்.

இதற்கான தேர்வுக் குழு இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சொராப்ஜியால் தலைமை தாங்கப்பட்டது.

 

பத்திரிக்கையில் நிபுணத்துவத்திற்கான IPI இந்தியா விருது

2003 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச பத்திரிக்கை நிறுவனம் சிறந்த சேவையை வழங்கும் இந்திய ஊடக நிறுவனம் அல்லது பத்திரிக்கையாளர்களுக்கு அவர்களது சேவையை கௌரவப்படுத்தி அங்கீகரிக்கும் வகையில் இந்த வருடாந்திர விருதினை ஏற்படுத்தியது.

இக்குழுமம் தனது முதல் விருதை 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் செய்தியளித்தமைக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்தது.

 

ராஜாராம் மோகன் ராய் விருது

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தி இந்து பதிப்பக குழுமத்தின் தலைவரான என். இராம், புகழ்பெற்ற ராஜாராம் மோகன் ராய் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக இந்தியப் பத்திரிக்கைக் கழகத்தால் (Press Council of India – PCI) இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்தியப் பத்திரிக்கைக் கழகமானது 2018 ஆம் ஆண்டில் பத்திரிக்கைத் துறையில் சிறப்புத்துவத்திற்கான தேசிய விருதுகளை வென்றவர்களையும் அறிவித்துள்ளது.

கிராம இதழியல் பிரிவுக்கான விருதை போபால் ‘தேஷ்பந்து’ தலைமை நிருபர் ரூபி சர்க்கார், ரத்னகிரி ‘டெய்லி புதரி’யின் ராஜேஷ் பரசுராம் ஜோஷ்தே ஆகியோர் இணைந்து பெறுகின்றனர்.

‘டெவலப்மென்ட்டல் ரிப்போர்ட் டிங்’ பிரிவில், கேரள கவுமுதியின் துணை ஆசிரியர் வி.எஸ்.ராஜேஷுக்கும், புகைப்பட இதழியல் பிரிவில், டெல்லியின் ராஷ்டிரிய சகாராவைச் சேர்ந்த சுபாஷ் பாலுக்கும், டெல்லியில் உள்ள பஞ்சாப் கேசரியின் புகைப்பட இதழியலாளர் மிஹிர் சிங்குக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறந்த பத்திரிகை வரை கலை, கார்ட்டூன் பிரிவில் ஹைதராபாத்தின் நவ தெலங் கானா பத்திரிகை கார்ட்டூன் ஆசிரியர் பி.நரசிம்மாவுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட விளையாட்டு செய்திப் பிரிவில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

 

மாநில செய்திகள்

 

அயோத்தி தீபாவளிக் கொண்டாட்டம்

அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட தீபாவளிக் கொண்டாட்டத்தில் 3 லட்சம் மண் விளக்குகள் அல்லது தீபங்கள் ஏற்றப்பட்டு உலக சாதனையை படைத்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள புனித சரயூ நதிக்கரையில் இந்த மண் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

உத்தரபிரதேசத்தின் பைசாபாத் என்னும் வரலாற்று நகரம் இனிமேல் அயோத்தி என்று அழைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

ஜிபிஎஸ் வரைபடம்

நாகாலாந்து முதலமைச்சர் நிபிஹோ ரியோ அரசாங்க பள்ளிகள் மற்றும் பணியாளர் இருப்பிட அமைப்புகளில்  ஜிபிஎஸ் வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.

 

உலக செய்திகள்

 

அமெரிக்கப்  பொருளாதாரத் தடை விலக்கு அளிப்பு

ஈரானிடம் எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியா உட்பட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகியவை இதில் அடங்கும்.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும்.

 

அறிவியல் செய்திகள்

 

ஓசோன் படலம்  மீண்டு வருதல்

இந்த வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.

சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சரியாகி வருவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

முதல் நிரந்தர விண்வெளி நிலைய பிரதி

சீனா தனது முதல் நிரந்தர விண்வெளி நிலையத்தின் ஒரு பிரதி ஒன்றை வெளியிட்டது.இது சர்வதேச சமூகத்தின் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்கு ISS மாற்றாக இருக்கும்.

 


 

Download Daily Current Affairs [2018- Nov – 4 to 7]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: