TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –04 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –04 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

1.Chennai has the maximum CCTV coverage per square kilometre and per 1,000 population among the 130 cities studied worldwide, according to a recent report published in South Asia Journal. Chennai, India, has 657 cameras per sqkm, making it the number one city in the world in terms of surveillance.

உலகிலேயே அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.

2.Despite the COVID-19 pandemic and several uncertainties, private equity and venture capital companies invested $598 million in Tamil Nadu based companies through 33 deals during 2020. In 2019, the State attracted $1,641 million in private equity and venture capital investments through 54 deals.

2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பல நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன நிறுவனங்கள் 33 ஒப்பந்தங்கள் மூலம் 598 மில்லியன் டாலர்களை தமிழ்நாடு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. 2019 ஆம் ஆண்டில், இதே நிறுவனங்கள் 54 ஒப்பந்தங்கள் மூலம் 1,641 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

3.Over 51% of the 2.56 lakh candidates appeared for the Group I examination conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC) on December 3. The percentage of candidates who appeared for the examination has reduced this year as compared to the 73% inthe Group I examination in 2019.

டிசம்பர் 3ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தப்பட்ட குரூப்-I தேர்வில் 2.56 லட்சம் போட்டியாளர்களில் ஏறத்தாழ 51% மட்டுமே பங்குகொண்டுள்ளனர். 2019 ஆண்டு நடைபெற்ற குரூப்-I தேர்வில் 73% சதவீதம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

India

4.The Central Drugs and Standards Committee (CDSCO) has formally approved the COVID-19 vaccines by Bharat Biotech and the Serum Institute of India (SII).This allows the vaccines – Covishield by SII and based on the Oxford AstraZeneca vaccine, and Covaxin by Bharat Biotech to be offered to healthcare workers and frontline workers in India.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

5.The Food Safety and Standards Authority of India (FSSAI) has capped the amount of trans fatty acids (TFA) in oils and fats to 3% for 2021 and 2% by 2022 from the current permissible limit of 5% through an amendment to the Food Safety and Standards (Prohibition and Restriction on Sales) Regulations.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடு) விதிமுறைகள் திருத்தத்தின்மூலம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் அளவின் (TFA) வரம்பை 5% இலிருந்து 2021 ஆண்டிற்கு 3% ஆகவும், 2022 ஆண்டிற்கு 2% ஆகவும் குறைத்துள்ளது.

6.The Prime Minister Shri Narendra Modi will dedicate the 450 km long Kochi – Mangaluru Natural Gas Pipeline built by GAIL (India) Ltd to the nation on 5th January 2021 via video conferencing.

கொச்சி-மங்களூர் இடையிலான 450 கி.மீ. தொலைவு கொண்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை டிசம்பர் 5 அன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

International

7.On January 4, the World Braille Day is celebrated.

ஜனவரி 4 அன்று உலக பிரெய்லி தினம் கொண்டாடப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which is the number one city in the world in terms of surveillance?

Chennai

London

New York

New Delhi

சிசிடிவி கண்காணிப்பின் அடிப்படையில் உலகின் முதலாவது நகரம் எது?

சென்னை

லண்டன்

நியூயார்க்

புது தில்லி

2.The vaccine Covaxin is developed by

Bharat Biotech

Oxford University

BioNTech

None of the above

கோவாக்சின் என்ற தடுப்பூசி யாரால் உருவாக்கப்பட்டது?

பாரத் பயோடெக்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

பயோஎன்டெக்

மேற்கூறிய எதுவும் இல்லை

3.The vaccine Covishield is developed by

Bharat Biotech

Oxford University

BioNTech

None of the above

கோவிஷீல்ட் என்ற தடுப்பூசி யாரால் உருவாக்கப்பட்டது?

பாரத் பயோடெக்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

பயோஎன்டெக்

மேற்கூறிய எதுவும் இல்லை

4.The Kochi – Mangaluru Natural Gas Pipeline was built by

BHEL

GAIL

NALCO

None of the above

கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் யாரால் கட்டப்பட்டது?

BHEL

GAIL

NALCO

மேற்கூறிய எதுவும் இல்லை

5.What is the distance of Kochi – Mangaluru Natural Gas Pipeline?

400 km

450 km

500 km

550 km

கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாயின் தூரம் எவ்வளவு?

400 கி.மீ.

450 கி.மீ.

500 கி.மீ.

550 கி.மீ.

6.The World Braille Day is celebrated on

January 1

January 2

January 3

January 4

உலக பிரெய்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 1

ஜனவரி 2

ஜனவரி 3

ஜனவரி 4

 

DOWNLOAD  Current affairs -04 JAN- 2020 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: