சட்டங்கள்
இந்து திருமணச் சட்டம் 1955:
l திருமணம் என்பது சாத்திரப் படி உடைக்கக்கூடாத பந்தம் என்றிருந்த நிலையில் விருப்ப மில்லாத திருமண வாழ்விலிருந்து பெண்கள் விவாகரத்து பெறவும், கணவனிடமிருந்து வாழ்க்கைக் கான பொருளுதவி பெறவும் குழந்தையைத் தத்தெடுக்கவும் உரிமை வழங்கும் சட்டம்.
சிறப்புத் திருமணச் சட்டம் 1954
l சாதி, மதம் கடந்த காதல் திருமணங்களையும் சாதி மறுப்புத் திருமணங்களையும் அங்கீகரிப்பதன்மூலம் பெண்களுக்கான திருமண உரிமையை உறுதிசெய்யும் சட்டம்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956
l ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. 2005இல் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தம் பூர்விகச் சொத்தில் பெண்ணுக்கு இருக்கும் உரிமையைக் கால வரையறைக்குட்படுத்தியிருந்த நிலையில், 2020இல் பெண்களின் பூர்விகச் சொத்துரிமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டது.
வரதட்சிணை தடைச் சட்டம் 1961
l வரதட்சிணைக் கொடுமை யால் ஆங்காங்கே பெண்கள் பலிகொடுக்கப்பட்டுவந்த சூழலில் ஆசுவாசமளிப்பதாக அமைந்த சட்டம் இது. பணமாகவும் பொருளாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கப்படும் வரதட்சிணையை இச்சட்டம் குற்றச் செயல் என்கிறது.
பெண்களைத் தவறாகச் சித்தரிப்பதை
தடை செய்யும் சட்டம் 1986
l அனைத்து விதமான காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், வார – மாத இதழ்கள், விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றில் பெண்களைத் தவறாகவும் கண்ணியக்குறைவாகவும் சித்தரிப்பதை இந்தச் சட்டம் தடைசெய்கிறது. எழுத்து, பேச்சு, காட்சி, ஓவியம் என்று எந்த விதத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரியது.
குடும்ப வன்முறை தடைச் சட்டம் 2005
l குடும்ப உறவில் மனைவி மீது கணவன் நிகழ்த்தும் வார்த்தைரீதியான வன்முறை, உளவியல்ரீதியான வன்முறை தொடங்கி உடல் ரீதியான, பாலியல்ரீதியான வன்முறை வரை அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் பெண்களைக் காக்கிறது இந்தச் சட்டம்.
பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன் புறுத்தல் (தடுப்பு, தடை, குறைதீர்வு) சட்டம் 2013
l பணியிடங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, குற்றமிழைத்தவர்களைத் தண்டித்து பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் வழங்க வழிசெய்கிறது இந்தச் சட்டம். பெண்கள் புகார் அளிக்க ஏதுவாகப் பெண்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் ‘உள்ளகப் புகார்க் குழு’ அமைக்கவும் இந்தச் சட்டம் பரிந்துரைக்கிறது.
தன் பாலின உறவு கிரிமினல் குற்றமல்ல 2018
l தன் பாலின உறவை ‘இயற்கைக்கு முரணான உறவு’ என்று வகைப்படுத்தி அதைக் குற்றச் செயலாக அறிவிக்கும் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டது. இந்தியாவில் பால் புதுமையரின் 150 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டம் முடிவுக்கு வந்தது.
முத்தலாக் ரத்து
l இஸ்லாமியர்களில் மூன்று முறை ‘தலாக்’ என்று சொல்வதன் வாயிலாக மனைவியை விவாக ரத்து செய்துவந்த வழக்கத்துக்கு முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்டம் 2019 முற்றுப்புள்ளி வைத்தது. நேரிலோ, கடிதம் மூலமோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலமோ முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது தண்டனைக்குரியது.
செயற்கைக் கருத்தரிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2021
l செயற்கைக் கருத்தரிப்பு, சினைமுட்டை தானம், வாடகைத் தாய் போன்றவை குறித்து எவ்விதமான முறையான நெறிமுறைகளும் இல்லாத நிலையில் பெண்ணுடல் சுரண்டப்பட்டுவந்தது. இந்தச் சட்டம் அதுபோன்ற கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கிறது.