TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 01 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. The Central government has selected Theni for the pilot project under Horticulture Cluster Development Programme to promote the cultivation of banana.
வாழை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக தேனி மாவட்டம் தோட்டக்கலை தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை முயற்சிக்கு மத்திய அரசால் தேர்வு செய்துள்ளது.
India
2. The National Statistical Office (NSO) has released the Provisional Estimates of Annual National Income for the financial year 2020-21. The official data released by the government shows that the GDP has contracted, for the first time since 1980-81. A contraction of 7.3 per cent was reported in the financial year 2020-21. The GDP growth in 2019-20, prior to the COVID-19 pandemic, was 4%.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2020-21 நிதியாண்டுக்கான தேசிய வருமானத்தின் தற்காலிக மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 1980-81 க்குப் பிறகு முதன்முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை கண்டுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 சதவிகிதமாக இருந்தது.
3. The Union Minister of Agriculture and Farmers’ Welfare Narendra Singh Tomar virtually launched the Horticulture Cluster Development Programme (CDP) on May 31, 2021. It is a central sector programme implemented by the National Horticulture Board (NHB) through Cluster Development Agencies (CDAs) which are appointed on the recommendations of the respective state/UT government. It aims at growing and developing identified horticulture clusters to make them globally competitive.
ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மே 31, 2021 ஆம் தேதி தோட்டக்கலை தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தை (CDP) இணைய வழியில் தொடங்கி வைத்தார். மத்திய துறை திட்டமாகிய இது தேசிய தோட்டக்கலை வாரியத்தால் (NHB) தொகுப்பு மேம்பாட்டு முகமைகள் (CDA) மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
4. The Union Ministry of Finance has announced that the member of CBDT Jagannath Bidyadhar Mohapatra will hold the charge of Chairman in the Central Board of Direct Taxes (CBDT) for the time being. The outgoing Chairman Pramod Chandra Mody completed his term on May 31, 2021.
ஜெகந்நாத் பித்யாதர் மோகபத்ரா மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) தலைவர் பொறுப்பை தற்போதைக்கு ஏற்றுக்கொள்வார் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. முந்தைய தலைவர் பிரமோத் சந்திர மோடி தனது பதவிக் காலத்தை மே 31 அன்று நிறைவு செய்தார்.
5. The Industry chamber CII has elected T V Narendran, CEO and MD, Tata Steel, as its new president for 2021-22. He takes over from Uday Kotak, Managing Director, and Chief Executive Officer, Kotak Mahindra Bank.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான டி வி நரேந்திரன் சிஐஐ கூட்டமைப்பின் 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு இப்பதவியில் இருந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான உதய் கோட்டக்கிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
6. The World Health Organisation (WHO) has assigned a set of names to label coronavirus variants that are deemed to be of global concern. The B.1.617.1 and B.1.617.2 variants of the COVID-19, first identified in India, have been named as ‘Kappa’ and ‘Delta’ respectively. So far, the four Variants of Concern (VOC) have been identified by the WHO. They are:
- B.1.1.7 (UK) – Alpha
- B.1.351 (South Africa) – Beta
- P 2 (Brazil) – Gamma
- B.1.617.2 (India) – Delta
வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.1 மற்றும் B.1.617.2 வகைகளுக்கு முறையே ‘கப்பா’ மற்றும் ‘டெல்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- B.1.1.7 (இங்கிலாந்து) – ஆல்பா
- B.1.351 (தென்னாப்பிரிக்கா) – பீட்டா
- P 2 (பிரேசில்) – காமா
- B.1.617.2 (இந்தியா) – டெல்டா
7. World Milk Day is celebrated every year on June 1. World Milk Day was established in 2001 by the Food and Agriculture Organisation (FAO) of the United Nations. The theme for 2021 is ‘Sustainability in the dairy sector with messages around the environment, nutrition, and socio-economics’.
உலக பால் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. உலக பால் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (FAO) 2001 இல் நிறுவப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் மையப்பொருள் ‘சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து மற்றும் சமூக பொருளாதாரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள செய்திகளைக் கொண்ட நிலைத்தன்மை உடைய பால் துறை’ ஆகும்.
8. Every year on June 1, the Global Day of Parents is celebrated. June 1 was proclaimed as Global Day of Parents first by the General Assembly of the United Nations in 2012. The theme for 2021 is ‘Appreciate all parents throughout the world’.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி, உலகளாவிய பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 1 ஐ 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை முதன் முதலில் உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டின் மையப்பொருள் ‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெற்றோர்களையும் பாராட்டுங்கள்’ ஆகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Which district is selected for the pilot project under Horticulture Cluster Development Programme?
Tirupur
Coimbatore
Theni
Trichy
தோட்டக்கலை தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பைலட் முயற்சிக்கு எந்த மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
திருப்பூர்
கோவை
தேனி
திருச்சி
2. Which organisation releases the annual National Income data in India?
1. National Horticulture Board
2. National Statistical Office
3. Central Statistics Office
4. Office of Chief Economic Adviser
இந்தியாவின் தேசிய வருமான தரவை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
1. தேசிய தோட்டக்கலை வாரியம்
2. தேசிய புள்ளியியல் அலுவலகம்
3. மத்திய புள்ளியியல் அலுவலகம்
4. தலைமை பொருளாதார ஆலோசகர் அலுவலகம்
3. Which of the following coronavirus variants is named Delta?
B.1.1.7
B.1.351
P2
B.1.617.2
பின்வரும் எந்த கொரோனா வைரஸ் வகை டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது?
B.1.1.7
B.1.351
P2
B.1.617.2
4. World Milk Day is celebrated every year on
1. June 1
2. June 2
3. June 3
4. June 4
ஒவ்வொரு ஆண்டும் உலக பால் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. ஜூன் 1
2. ஜூன் 2
3. ஜூன் 3
4. ஜூன் 4
5. The Global Day of Parents is celebrated every year on
1. June 1
2. June 2
3. June 3
4. June 4
ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பெற்றோர் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. ஜூன் 1
2. ஜூன் 2
3. ஜூன் 3
4. ஜூன் 4
6. The Horticulture Cluster Development Programme is implemented by
1. National Horticulture Board
2. National Statistical Office
3. Central Statistics Office
4. Office of Chief Economic Adviser
தோட்டக்கலை தொகுப்பு மேம்பாட்டு திட்டம் எந்த அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது?
1. தேசிய தோட்டக்கலை வாரியம்
2. தேசிய புள்ளியியல் அலுவலகம்
3. மத்திய புள்ளியியல் அலுவலகம்
4. தலைமை பொருளாதார ஆலோசகர் அலுவலகம்
7. Gama variant coronavirus variant was first identified in
India
UK
Brazil
South Africa
காமா என்கிற கொரோனா வைரஸ் முதன் முதலில் எங்கு காணப்பட்டது?
இந்தியா
யுகே
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
8. Who is the current Chairperson of CBDT?
Kuldeep Singh
T.V. Narendran
J.B. Mohapatra
Mahesh Sharma
CBDT யின் தற்போதைய தலைவர் யார்?
குல்தீப் சிங்
டி.வி.நரேந்திரன்
ஜே.பி.மோகபத்ரா
மகேஷ் சர்மா
9. Who is the president of CII for 2021-22?
Kuldeep Singh
T.V. Narendran
J.B. Mohapatra
Mahesh Sharma
2021-22 க்கான CII யின் தலைவர் யார்?
குல்தீப் சிங்
டி.வி.நரேந்திரன்
ஜே.பி.மோகபத்ரா
மகேஷ் சர்மா