TNPSC CURRENT AFFAIRS PDF –02nd JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 02 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu government released water for irrigation from the Mullaperiyar reservoir on June 1. This is the first time in 14 years water has been released from the dam.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதி முதல் போக பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியில் நீர்மட்டம் 130 அடியை எட்டாததால் அந்த தேதியில் நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது எனவே ஜூன் கடைசி வாரம், ஜூலையிலே நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் இரண்டாவது போக சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அணை நீர்மட்டம் இன்று 130.90 அடியை எட்டியதால் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார்.

2. The Tamil Nadu Director of Elementary Education has said that students of classes 1 to 8 in all schools under the State Board have been promoted to the next class, for the academic year 2020-21, in accordance with the provisions of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009. Section 16 of the RTE Act 2009 states that no child shall be held back in any class or shall be expelled until the completion of elementary school, and Tamil Nadu follows a no-detention policy for students till class 8.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ், அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவரையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரையும் தேர்ச்சி அடைய வைக்க வேண்டும். எந்தக் குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

India

3. The Research Design & Standards Organization (RDSO) of Indian Railways has become the FIRST Institution to be declared Standard Developing Organisation (SDO) under the “One Nation One Standard” mission of the Bureau of Indian Standards (BIS) which is an institution under the Department of Consumer Affairs.

நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய பணியகத்தின் (BIS) “ஒரு தேசம் ஒரு தரம்” திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) முதல் தரநிலை மேம்பாட்டு அமைப்பாக (SDO) அறிவிக்கப்பட்டுள்ளது.

4. The President Ram Nath Kovind on June 2 formally appointed Justice Arun Kumar Mishra as the Chairman of the National Human Rights Commission (NHRC). Justice Mishra’s name was recommended by a high powered selection panel consisting of Prime Minister Narendra Modi; Union Home Minister Amit Shah; Deputy Chairman of the Rajya Sabha, Harivansh; Lok Sabha Speaker Om Birla; and the Leader of the Opposition in the RajyaSabha, Mallikarjun Kharge.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்துள்ளார். இவரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அடங்கிய பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரை செய்தது.

5. The Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) has launched the World’s 1st Nano Urea Liquid, a nutrient to provide nitrogen to plants as an alternative to conventional urea.

வழக்கமான யூரியாவுக்கு மாற்றாக தாவரங்களுக்கு நைட்ரஜனை வழங்குவதற்கான ஊட்டச்சத்துடைய உலகின் முதலாவது நானோ யூரியா திரவத்தை இந்திய உழவர் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) அறிமுகப்படுத்தியுள்ளது.

6. The World Health Organization (WHO) has honoured Union health minister Harsh Vardhan with the ‘Director-General Special Award’ for his accomplishments to control tobacco consumption in India.

புகையிலை பயன்பாட்டை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகவும், மக்களிடையே பயன்பாட்டைக் குறைத்தமைக்காகவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

7. The Indian Broadcasting Foundation (IBF) has announced the appointment of former Supreme Court judge Justice Vikramjit Sen as the Chairman of its newly formed self-regulatory body Digital Media Content Regulatory Council (DMCRC).

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் அவர்களை புதிதாக அமைக்கப்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்பான டிஜிட்டல் மீடியா உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சிலின் (DMCRC) தலைவராக நியமிக்கப்படுவதாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை (IBF) அறிவித்துள்ளது.

8. World Reef Day is celebrated annually on 1st June to create awareness of the imperative role of Coral reefs in our ecosystem.

நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பவளப்பாறைகளின் இன்றியமையாத பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி உலக பவளப்பாறைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who has been appointed as the Chairman of NHRC?

Arun Kumar Mishra

Harsh Vardhan

Vikramjit Sen

Ramesh Pokhriyal

NHRC-ன் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

அருண் குமார் மிஸ்ரா

ஹர்ஷ் வர்தன்

விக்ரம்ஜித் சென்

ரமேஷ் போக்ரியால்

2. Which section of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009 provides No Detention Policy for the classes up to the eighth standard?

16

17

18

19

எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தடுப்புக்காவல் கொள்கையை 2009 ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி (ஆர்.டி.இ) சட்டம் எந்த பிரிவு வழங்குகிறது?

16

17

18

19

3. Which organisation recently launched the World’s 1st Nano Urea Liquid?

NEERI

IFFCO

RDSO

CSIR

உலகின் முதல் நானோ யூரியா திரவத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

NEERI

IFFCO

RDSO

CSIR

4. Who was recently bestowed with WHO’s Director-General Special Award?

Arun Kumar Mishra

Harsh Vardhan

Vikramjit Sen

Ramesh Pokhriyal

WHO இன் இயக்குநர்-ஜெனரல் சிறப்பு விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?

அருண் குமார் மிஸ்ரா

ஹர்ஷ் வர்தன்

விக்ரம்ஜித் சென்

ரமேஷ் போக்ரியால்

5. Which is the first Institution to be declared a Standard Developing Organisation?

NEERI

IFFCO

RDSO

CSIR

இந்தியாவில் தர மேம்பாட்டு அமைப்பாக அறிவிக்கப்பட்ட முதல் நிறுவனம் எது?

NEERI

IFFCO

RDSO

CSIR

6. Who has been appointed as the Chairman of the Digital Media Content Regulatory Council?

Arun Kumar Mishra

Harsh Vardhan

Vikramjit Sen

Ramesh Pokhriyal

டிஜிட்டல் மீடியா உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சிலின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

அருண் குமார் மிஸ்ரா

ஹர்ஷ் வர்தன்

விக்ரம்ஜித் சென்

ரமேஷ் போக்ரியால்

7. World Reef Day is celebrated annually on

1. June 1

2. June 2

3. June 3

4. June 4

உலக பவளப்பாறைகளின் தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. ஜூன் 1

2. ஜூன் 2

3. ஜூன் 3

4. ஜூன் 4

 

         

DOWNLOAD  Current affairs -02 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d