TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 04 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The Union health and family welfare minister Harsh Vardhan has approved the National Policy for Rare Diseases 2021, according to a statement issued by the health ministry on April 3.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் 2021 ஆம் ஆண்டு அரிய நோய்களுக்கான தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.The Indian Army is participating in the multinational military exercise ‘SHANTIR OGROSHENA 2021’ in Bangladesh from April 4 to April 12, 2021. The exercise will be for nine days and will start from April 4 to commemorate the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh Father of the Nation, and will mark 50 glorious years of Bangladesh liberation.
ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 12 வரை வங்கதேசத்தில் நடைபெறும் ‘சாந்திர் ஓக்ரோஷெனா 2021’ என்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்கிறது. ஏப்ரல் 4 முதல் தொடங்கும் ஒன்பது நாட்கள் பயிற்சி, வங்க தேசத்தின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும், வங்கதேசத்தின் 50வது விடுதலை தினத்தை குறிக்கும் வகையிலும் நடத்தப்படுகிறது.
3.Government has launched the All-India Survey of Migrant Workers and All-India Quarterly Establishment-based Employment Survey. The objective of the All-India Survey of Migrant Workers is to study the kind of employment-related migration undertaken by workers. The survey will provide the details of working and living conditions faced by Migrant Workers and the impact of COVID 19 on their world of work.
அகில இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுப்பு மற்றும் அகில இந்திய காலாண்டு ஸ்தாபன அடிப்படையிலான வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு ஆகாயவற்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அகில இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கெடுப்பின் நோக்கம், தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலைவாய்ப்பு தொடர்பான இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்வதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் COVID-19 தொற்றினால் அவர்களின் வேலையில் ஏற்படும் தாக்கம் குறித்த விவரங்களை இந்த ஆய்வு வழங்கும்.
4.Vice-President M. Venkaiah Naidu presented the Kalinga Ratna Award for the year 2021, to Governor of Andhra Pradesh Biswa Bhusan Harichandan.
துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு 2021 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா விருதை ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்தனுக்கு வழங்கினார்.
5.India’s biggest floating solar power plant with a capacity of 100 MW will be set up at Ramagundam in Telangana.
100 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
Sports
6.The 2023 men’s boxing World Championships will be held in Uzbekistan capital Tashkent, the International Boxing Association (AIBA) has announced.
2023 ஆம் ஆண்டு ஆண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெறும் qஎன்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) அறிவித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. ‘SHANTIR OGROSHENA 2021’ is a
Bilateral military exercise
Trilateral military exercise
Multinational military exercise
None of the above
‘சாந்திர் ஓக்ரோஷேனா 2021’ என்பது
இருதரப்பு இராணுவப் பயிற்சி
முத்தரப்பு இராணுவப் பயிற்சி
பன்னாட்டு இராணுவப் பயிற்சி
மேற்கூறிய எதுவும் இல்லை
2. Who is the Father of the Nation of Bangladesh?
1. Sheikh Hasina
2. Sheikh Mujibur Rahman
3. Sheikh Mohammed
4. None of the above
வங்க தேசத்தின் தந்தை யார்?
1. ஷேக் ஹசீனா
2. ஷேக் முஜிபுர் ரஹ்மான்
3. ஷேக் முகமது
4. மேற்கூறிய எதுவும் இல்லை
3. Who was presented with the Kalinga Ratna Award for the year 2021?
Biswa Bhusan Harichandan
Venkaiah Naidu
Mallika Srinivasan
Ajay Tyagi
2021 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
பிஸ்வா பூஷன் ஹரிசந்தன்
வெங்கையா நாயுடு
மல்லிகா சீனிவாசன்
அஜய் தியாகி
4. India’s biggest floating solar power plant will be set up at
Kurnool
Vijayawada
Ramagundam
Guntur
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
கர்னூல்
விஜயவாடா
ராமகுண்டம்
குண்டூர்
5. The 2023 men’s boxing World Championships will be held in
Kabul
Karachi
Tashkent
Delhi
2023 ஆம் ஆண்டு ஆண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?
காபூல்
கராச்சி
தாஷ்கண்ட்
டெல்லி
6. ‘SHANTIR OGROSHENA 2021’ military exercise is held in
Nepal
Afghanistan
India
Bangladesh
‘சாந்திர் ஓக்ரோஷேனா 2021’ இராணுவ பயிற்சி எங்கு நடைபெற்றது?
நேபாளம்
ஆப்கானிஸ்தான்
இந்தியா
பங்களாதேஷ்