TNPSC CURRENT AFFAIRS PDF –05th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 05 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Election Commission of India (EC) on March 4 informed the Madras High Court that it had uploaded on the website http://www.elections.tn.gov.in an updated list of names, designations, mobile phone numbers, landline numbers and e-mail IDs of Returning Officers (ROs) and Assistant Returning Officers (AROs) of as many as 230 out of 234 Assembly constituencies in the State.

தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக, 234-இல் 230 சட்டமன்ற தொகுதிகளுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தொகுதி தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அவர்களின் முகவரி, கைபேசி எண், வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை வெளியிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.Chennai has secured the fourth rank in the ease of living among 49 cities in the million-plus category, according to a report on the Municipal Performance and Ease of Living Indices, 2020, issued by the Union Ministry of Housing and Urban Affairs. The city stood 14th in the previous survey.

இந்திய நகரங்கள் தொடர்பான வாழ்க்கை வசதிக் குறியீடு, நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு ஆகியவற்றை இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் பிப்ரவரி 04 அன்று வெளியிட்டது. 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட 49 நகரங்களில் சென்னை (62.61) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை வெளியிட்ட குறியீட்டில் சென்னை பதிநான்காவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

3.Chennai ranks 18th, Coimbatore 12th and Madurai 22nd in the municipal performance index, which measures governance, planning, technology, finance and services.

10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நகராட்சிகளின் நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீட்டில் சென்னை 18-வது இடத்தையும், கோவை 12-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

India

4.The Office of Principal Scientific Adviser of the Government of India has launched the “Swachhta Saarthi Fellowship” under the “Waste to Wealth” Mission on March 3, 2021.

இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மார்ச் 3 ஆம் தேதி “கழிவில் இருந்து செல்வம்” திட்டத்தின் கீழ் “ஸ்வச்ச்தா சார்தி பெல்லோஷிப்”- ஐ தொடங்கியுள்ளது.

5.Six-time world champion boxer Mary Kom has been appointed as the Chairperson of the International Boxing Association’s (AIBA) champions and veterans committee.

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

6.Telecom Equipment Export Promotion Council (TEPC) is organising ‘India Telecom 2021’ – an Exclusive International Business Expo virtually on March 3 & 4, 2021 under Market Access Initiative Scheme (MAI) of Department of Commerce, Government of India and with support of Department of Telecommunications & Ministry of External Affairs.

வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் (MAI) கீழ் டெலிகாம் கருவி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (TEPC) தொலைத்தொடர்பு மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ‘இந்தியா டெலிகாம் 2021’ என்கிற பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சியை மார்ச் 3 & 4, 2021 தேதிகளில் ஏற்பாடு செய்தது.

7.Dr Harsh Vardhan has exhorted scientists of CSIR laboratories across the country to develop the land available at each laboratory to be set up as a model under the “CSIR Floriculture Mission”.

“சி.எஸ்.ஐ.ஆர் மலர் வளர்ப்பு மிஷன்” இன் கீழ் ஒவ்வொரு ஆய்வகத்திலும் நிலத்தை ஒதுக்கி அபிவிருத்தி செய்யுமாறு நாடு முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களின் விஞ்ஞானிகளை டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

8.Chabahar Day was commemorated on the sidelines of the Second edition of International Maritime Summit-2021 in the virtual format.

இணையவழி சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு -2021 இன் இரண்டாம் பதிப்பின் போது சாபஹார் தினம் நினைவுகூரப்பட்டது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Returning Officers for the assembly elections are appointed by

State Government

Central Government

Election Commission

None of the above

சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?

மாநில அரசு

மத்திய அரசு

தேர்தல் ஆணையம்

மேற்கூறிய எதுவும் இல்லை

2.Which city in Tamil Nadu ranked 18th in the municipal performance index?

Coimbatore

Chennai

Madurai

Trichy

நகராட்சி செயல்திறன் குறியீட்டில் 18 வது இடத்தில் தமிழ்நாட்டின் எந்த நகரம் உள்ளது?

கோவை

சென்னை

மதுரை

திருச்சி

3.‘India Telecom 2021’ is organised by

Department of Telecommunications

Ministry of External Affairs

Both 1 and 2

Neither 1 nor 2

‘இந்தியா டெலிகாம் 2021’ யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

தொலைத்தொடர்பு துறை

வெளிவிவகாரத்துறை அமைச்சகம்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

4.Which city in Tamil Nadu ranked 12th in the municipal performance index?

Coimbatore

Chennai

Madurai

Trichy

நகராட்சி செயல்திறன் குறியீட்டில் 12 வது இடத்தில் தமிழ்நாட்டின் எந்த நகரம் உள்ளது?

கோவை

சென்னை

மதுரை

திருச்சி

5.Who has been appointed as the Chairperson of the International Boxing Association’s (AIBA) champions and veterans committee?

Abhinav Bindra

Vijendra Singh

Ajay Kumar

Mary Kom

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) சாம்பியன்கள் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

அபிநவ் பிந்த்ரா

விஜேந்திர சிங்

அஜய் குமார்

மேரி கோம்

6.Chabahar Day was commemorated on the sidelines of

1. International Environment Summit

2. International Maritime Summit

3. International Climate Summit

4. International Peace Summit

சாபஹர் தினம் எந்த நிகழ்வின் போது நினைவுகூரப்பட்டது?

1. சர்வதேச சுற்றுச்சூழல் உச்சி மாநாடு

2. சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு

3. சர்வதேச காலநிலை உச்சி மாநாடு

4. சர்வதேச அமைதி உச்சி மாநாடு

7..Which city in Tamil Nadu has secured the fourth rank in the ease of living index?

Coimbatore

Chennai

Madurai

Trichy

எளிதான வாழ்க்கை குறியீட்டில் நான்காவது இடத்தை தமிழ்நாட்டின் எந்த நகரம் பெற்றுள்ளது?

கோவை

சென்னை

மதுரை

திருச்சி

8.Mary Kom is a

Four time champion

Five time champion

Six time champion

Seven time champion

மேரி கோம் அவர்கள் குத்துச்சண்டையில்

நான்கு முறை சாம்பியன்

ஐந்து முறை சாம்பியன்

ஆறு முறை சாம்பியன்

ஏழு முறை சாம்பியன்

9.Which ministry releases Municipal Performance and Ease of Living Indices?

1. Ministry of Urban Affairs

2. Ministry of Environment

3. Principal Scientific Adviser

4. Chief Economic Adviser

நகராட்சி செயல்திறன் மற்றும் எளிதான வாழ்க்கை குறியீடுகளை எந்த அமைச்சகம் வெளியிடுகிறது?

நகர விவகாரங்கள் துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

முதன்மை அறிவியல் ஆலோசகர்

தலைமை பொருளாதார ஆலோசகர்

10.“Swachhta Saarthi Fellowship” is launched by

1. Ministry of Urban Affairs

2. Ministry of Environment

3. Principal Scientific Adviser

4. Chief Economic Adviser

“ஸ்வச்ச்தா சார்தி பெல்லோஷிப்” யாரால் தொடங்கப்பட்டது?

நகர விவகாரங்கள் துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

முதன்மை அறிவியல் ஆலோசகர்

தலைமை பொருளாதார ஆலோசகர்

 

athiyaman book store

DOWNLOAD  Current affairs -05 MAR- 2021 PDF

 1,225 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: