TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 06 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. The Tamil Nadu government has announced fresh restrictions between 4 am on May 6 to 4 am on May 20, in its attempt to contain the spread of COVID-19.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலை கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலை தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
India
2. The Indian armed forces have launched operation “CO-JEET” to aid anti-COVID-19 efforts, like strengthening medical infrastructure and oxygen supply chains, as well as take measures to ensure the mental wellbeing of people.
மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை வலுப்படுத்துவது, அத்துடன் மக்களின் மன நலனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற கோவிட் -19 எதிர்ப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஆயுதப்படைகள் “கோ-ஜீத்” என்ற ஆபரேஷன் ஒன்றைத் தொடங்கியுள்ளன.
3. The Supreme Court struck down the provisions of a Maharashtra law providing reservation to the Maratha community, which took the total quota in the state above the 50 percent ceiling set by the court in its 1992 Indra Sawhney (Mandal) judgment.
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இட ஒதுக்கீடு வழங்கி 2018-ல் நிறைவேற்றப்பட்ட மகாராஷ்டிரா அரசின் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சட்டம் 1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில் (மண்டல் கமிஷன் வழக்கு) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுகிறது. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கி இருப்பதன் மூலம் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகி இருக்கிறது. ஆகையால் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
4. Mamata Banerjee was sworn in as the Chief Minister of West Bengal on May 5 for the 3rd consecutive term by Governor Jagdeep Dhankhar.
3வது முறையாக மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி அவர்கள் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜகதீப் தன்கர் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
5. World Asthma Day is observed every year on the 1st Tuesday of May. This year, World Asthma Day is observed on May 4, 2021. The theme for 2021 World Asthma Day is “Uncovering Asthma Misconceptions”.
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உலக ஆஸ்துமா தினம் மே 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 உலக ஆஸ்துமா தினத்திற்கான மையப்பொருள் “ஆஸ்துமா பற்றி தவறான கருத்துக்களை தெளிவுபடுத்துதல்” ஆகும்.
6. Every year, the World Hand Hygiene Day is observed on May 5. The day is organized by the World Health Organization (WHO). The theme for 2021 is ‘Seconds Save Lives: Clean Your Hands’.
ஒவ்வொரு ஆண்டும், உலக கை சுகாதார தினம் மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் உலக சுகாதார அமைப்பால் (WHO) தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான மையப்பொருள் ‘வினாடிகள் உயிர்களைக் காக்கும்: கைகளை சுத்தம் செய்யுங்கள்’ ஆகும்.
7. International Day of the Midwife is observed globally on 5 May every year since 1992. The theme for 2021 International Day of the Midwife is “Follow the Data: Invest in Midwives.”
1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 5 அன்று சர்வதேச மருத்துவச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சர்வதேச மருத்துவச்சி தினத்தின் மையப்பொருள் “தரவைப் பின்பற்றுங்கள்: மருத்துவச்சிகள் முதலீடு” என்பதாகும்.
8. The Indian Naval Ship (INS) Kolkata has reached Port Shuwaikh in Kuwait as a part of Operation Samudra Setu II to bring Liquid Medical Oxygen (LMO) and other medical items to India.
ஆபரேஷன் சமுத்ரா சேது II இன் ஒரு பகுதியாக திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (LMO) மற்றும் பிற மருத்துவ பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட இந்திய கடற்படைக் கப்பல் (INS) கொல்கத்தா குவைத்தில் உள்ள ஷுவைக் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
9. India and the UK adopted an ambitious ‘Roadmap 2030’ during the virtual bilateral summit between Prime Minister of India Narendra Modi and Prime Minister of UK Boris Johnson that will elevate bilateral ties to a “Comprehensive Strategic Partnership”.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 2030 ஆம் ஆண்டு வரை இந்தியா-இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ‘ரோட்மேப் -2030’ என்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the Governor of West Bengal?
Jagdeep Dhankar
Harichandan
Vajubhai Vala
Bhagat Singh Koshyari
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் யார்?
ஜகதீப் தன்கர்
ஹரிச்சந்தன்
வஜூபாய் வாலா
பகத்சிங் கோஷ்யரி
2. In which year, Mandal case judgement was declared?
1991
1992
1993
1994
மண்டல் வழக்கு தீர்ப்பு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
1991
1992
1993
1994
3. International Day of the Midwife is observed globally on
1. May 2
2. May 3
3. May 4
4. May 5
சர்வதேச மருத்துவச்சி தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 2
2. மே 3
3. மே 4
4. மே 5
4. The World Hand Hygiene Day is observed every year on
1. May 2
2. May 3
3. May 4
4. May 5
ஒவ்வொரு ஆண்டும் உலக கை சுகாதார தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 2
2. மே 3
3. மே 4
4. மே 5
5. World Asthma Day is observed in 2021 on
1. May 2
2. May 3
3. May 4
4. May 5
2021 இல் உலக ஆஸ்துமா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 2
2. மே 3
3. மே 4
4. மே 5
6. The Operation “CO-JEET” was launched by
Armed Forces
Paramilitary Forces
Ministry of Health
Ministry of Education
ஆபரேஷன் “கோ-ஜீத்” யாரால் தொடங்கப்பட்டது?
ஆயுத படைகள்
துணை ராணுவப் படைகள்
சுகாதார அமைச்சகம்
கல்வி அமைச்சகம்
7. With which country, India has adopted ‘Roadmap 2030’?
Saudi Arabia
Kuwait
UK
Japan
இந்தியா ‘ரோட்மேப் 2030’ என்ற பிரகடனத்தை எந்த நாட்டுடன் மேற்க்கொண்டது?
சவுதி அரேபியா
குவைத்
இங்கிலாந்து
ஜப்பான்
8. Port Shuwaikh is located in
Saudi Arabia
Kuwait
UK
Japan
ஷூவைக் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
சவுதி அரேபியா
குவைத்
இங்கிலாந்து
ஜப்பான்