TNPSC CURRENT AFFAIRS PDF –07th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 07 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The National Tiger Conservation Authority (NTCA) has approved the creation of the fifth tiger reserve in Tamil Nadu that will encompass the Meghamalai and Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuaries. The 1 lakh-hectare area, home to 63 mammal species and 323 bird species — will be India’s 51st tiger reserve.

மேகமலை வன உயிரின சரணாலயத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக மாற்ற வனத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை தேசிய புலிகள் காப்பக அமைப்பு ஆராய்ந்து, இரு சரணாலயங்களையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. தற்போது அறிவித்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தமிழ்நாட்டின் 5-வது புலிகள் காப்பகமாகும். இங்கு 1 லட்சம் ஹெக்டார் பரப்பளவில், 63 பாலூட்டி இனங்கள் மற்றும் 323 பறவை இனங்கள் உள்ளன.

2.The Tamil Nadu Chief Minister Edappadi K.Palaniswami has announced that the State government would waive the crop loans outstanding in cooperative banks to the tune of ₹12,110 crores. The move will benefit over 16.43 lakh farmers.

கரோனா, புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 16.43 லட்சம் விவசாயிகளின் 12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

3.The Online games like rummy and poker involving betting shall invite imprisonment up to two years or fine not exceeding Rs 10,000 or both, according to an amendment Bill passed by the Tamil Nadu Assembly seeking to replace an ordinance banning cyberspace gambling. The Bill envisages amendments to the Tamil Nadu Gaming Act, 1930, The Chennai City Police Act, 1888 and the Tamil Nadu District Police Act, 1859 to ban online gambling.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது. இது தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கவும் வழி செய்யும். இது 1930-ம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம்,1888 சென்னை நகர காவல் சட்டம் மற்றும் 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரில் நிறைவேறியது.

4.The Tamil Nadu Legislative Assembly has passed a bill introduced by the Minister for Higher Education sought to amend the Annamalai University Act, 2013, and the Tamil Nadu Dr M.G.R. Medical University Chennai Act, 1987, to effect the handing over of the three medical institutions to the Health and Family Welfare Department, so as to treat them as government institutions.The institutions are: Rajah Muthiah Medical College and Hospital, Rajah Muthiah Dental College and Hospital, and Rani Meyyammai College of Nursing, attached to Annamalai University in Chidambaram.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகிய அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் சட்டத் திருத்தம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி மேற்கண்ட மூன்று கல்லூரிகளும் தமிழக சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக சட்டம், 2013 மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சென்னை சட்டம், 1987 ஆகியவை திருத்தப்பட்டுள்ளன.

India

5.S. N. Subrahmanyan has been appointed Chairman of the National Safety Council for a period of three years.

தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராக எஸ்.என். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் பொறுப்பு வகிப்பார்.

6.The Government of India has announced that the Aakashvani Sangeet Sammelan (Music Festival) will henceforth be called Bharat Ratna Pandit Bhimsen Joshi Akashvani Sangeet Sammelan.

ஆகாஷ்வானி சங்கீத் சம்மேலன் (இசை விழா) இனிமேல் பாரத ரத்னா பண்டிட் பீம்சன் ஜோஷி ஆகாஷ்வானி சங்கீத் சம்மேலன் என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

7.The 1st High-Level India-EU Dialogue on Trade and Investment was held on 5th February 2021. The establishment of this Dialogue was a major outcome of the 15th India-EU Leaders’ Summit held in July 2020.

பிப்ரவரி 5, 2021 ஆம் தேதி வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதலாவது உயர் மட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடல் ஜூலை 2020 இல் நடைபெற்ற 15 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டதாகும்.

8.The RBI Governor Shaktikanta Das on February 5, 2021 has announced that the central bank’s Monetary Policy Committee (MPC) will keep policy repo rate unchanged at 4%. The reverse repo rate will also be the same at 3.35%. The marginal standing facility (MSF) rate and the bank rate has been kept at 4.25%. RBI projected a GDP growth rate of 10.5% for the financial year beginning April 1.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பிப்ரவரி 5, 2021 அன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தின் (MPC) முடிவில் கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% எனவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 4.25% எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் தொடங்கும் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10.5% என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

International

9.The U.S. President Joe Biden has announced the end of U.S. support to the Saudi Arabia led war in Yemen and the appointment of foreign service officer Tim Lenderking as special envoy to Yemen.

யேமனில் நடைபெறும் போரில் சவுதி அரேபியாவிற்கான ஆதரவை அமெரிக்கா விளக்கிக்கொள்வதாகவும், யேமனுக்கு சிறப்பு தூதராக வெளிநாட்டு சேவை அதிகாரி டிம் லெண்டர்கிங்கை நியமிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அறிவித்துள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Meghamalai and Srivilliputhur Tiger Reserve is the

Fourth Tiger Reserve of Tamil Nadu

Fifth Tiger Reserve of Tamil Nadu

Sixth Tiger Reserve of Tamil Nadu

Seventh Tiger Reserve of Tamil Nadu

மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் புலிகள் காப்பகம் என்பது?

1. தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் காப்பகம்

2. தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகம்

3. தமிழ்நாட்டின் ஆறாவது புலிகள் காப்பகம்

4. தமிழ்நாட்டின் ஏழாவது புலிகள் காப்பகம்

2.From the Control of which University, the three medical institutions were recently transferred to the Health and Family Welfare Department of Tamil Nadu?

Annamalai University

Bharathiar University

Kamaraj University

Periyar University

எந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து, மூன்று மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் தமிழகத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டன?

அண்ணாமலை பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகம்

காமராஜ் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

3.Who has been appointed Chairman of the National Safety Council?

Sridhar Vembu

S. N. Subrahmanyan

Krishnamurthy Subramanian

Arvind Subramanian

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

ஸ்ரீதர் வேம்பு

எஸ்.என்.சுப்ரமணியன்

கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

4.The 1st High-Level India-EU Dialogue on Trade and Investment was held on

1. February 4

2. February 5

3. February 6

4. February 7

வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 1 வது உயர் மட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உரையாடல் என்று நடைபெற்றது?

1. பிப்ரவரி 4

2. பிப்ரவரி 5

3. பிப்ரவரி 6

4. பிப்ரவரி 7

5.Which of the following got the name of Bharat Ratna Pandit Bhimsen Joshi?

Doordarshan Music Festival

Aakashvani Music Festival

Sanskritik Music Festival

None of the above

பின்வருவனவற்றில் பாரத் ரத்னா பண்டிட் பீம்சன் ஜோஷி என்ற பெயர் எந்த விழாவிற்கு சூட்டப்பட்டுள்ளது?

தூர்தர்ஷன் இசை விழா

ஆகாஷ்வானி இசை விழா

சமஸ்கிருத இசை விழா

மேற்கூறிய எதுவும் இல்லை

6.The Meghamalai and Srivilliputhur Tiger Reserve is the

51st Tiger Reserve in India

52ndTiger Reserve in India

53rd Tiger Reserve in India

54th Tiger Reserve in India

மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் புலிகள் காப்பகம் என்பது?

1. இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகம்

2. இந்தியாவின் 52 வது புலிகள் காப்பகம்

3. இந்தியாவின் 53 வது புலிகள் காப்பகம்

4. இந்தியாவின் 54 வது புலிகள் காப்பகம்

7.Which country recently withdrawn the support to Saudi Arabia in Yemen War?

USA

Germany

Canada

India

யேமன் போரில் சவுதி அரேபியாவுக்கு அளித்த ஆதரவை சமீபத்தில் எந்த நாடு திரும்பப் பெற்றது?

அமெரிக்கா

ஜெர்மனி

கனடா

இந்தியா

8.Who approves the creation of Tiger Reserve?

Wildlife Institute of India

National Tiger Conservation Authority

Environment Ministry

State Government

புலிகள் காப்பகத்தை உருவாக்க யார் எந்த அமைப்பு ஒப்புதல் அளிக்கிறது?

இந்திய வனவிலங்கு நிறுவனம்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

மாநில அரசு

                                                      DOWNLOAD  Current affairs -07 FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us