TNPSC CURRENT AFFAIRS PDF –07th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 07 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.Judges and advocates practising in the Madurai Bench of the Madras High Court took part in the inaugural Dr. Justice A.R. Lakshmanan Rolling Trophy at Race course stadium, Madurai on March 6. The Chief Justice’s XI defeated the Advocate General’s XI (Madurai Bench) by a comfortable 80 runs.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் அணிகளுக்கு இடையிலான டாக்டர் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் ரோலிங் டிராபி கிரிக்கெட் போட்டி மார்ச் 6 அன்று மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் தலைமை நீதிபதியின் அணி அட்வகேட் ஜெனரலின் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

India

2.The Defence Research and Development Organisation(DRDO) successfully carried out a flight demonstration based on Solid Fuel Ducted Ramjet (SFDR) technology from Integrated Test Range, Chandipur off the Odisha coast. Successful demonstration of SFDR technology has provided DRDO with a technological advantage,which will enable it to develop long range air to air missiles.

ஒடிசா கடற்கரை சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து திட எரிபொருள் குழாய் ராம்ஜெட் (SFDR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நடத்தியது. SFDR தொழில்நுட்பத்தின் வெற்றிகரமான சோதனை DRDOக்கு ஒரு தொழில்நுட்ப நன்மையை வழங்கியுள்ளது, இது நீண்ட தூர காற்று ஏவுகணைகளை உருவாக்க உதவும்.

3.The Union Culture Ministry notified the formation of the 259 member national high level committee for planning the commemoration of the 75th year of Independence in 2022, chaired by Prime Minister Narendra Modi. Earlier, the government had set up an implementation committee chaired by Union Home Minister AmitShah and a committee of secretaries for the purpose.

2022 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூருவதற்கு திட்டமிட பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 259 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய உயர் மட்டக் குழுவை அமைத்து மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமலாக்கக் குழுவையும், செயலாளர்கள் குழுவையும் இந்திய அரசாங்கம் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4.The United Nation Environment Programme (UNEP) published the “Food Waste Index Report, 2021”.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) “உணவு கழிவு தரவரிசை அறிக்கை, 2021” ஐ வெளியிட்டது.

5.The state of Madhya Pradesh introduced the night safaris in the three national parks in Madhya Pradesh on March 4, 2021. The three parks include the Bandhavgarh National Park, Kanha National Park and Pench National Park.

மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று தேசிய பூங்காக்களில் மத்திய பிரதேச மாநில அரசு இரவு சஃபாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த மூன்று தேசிய பூங்காக்கள் பந்தவ்கர் தேசிய பூங்கா, கன்ஹா தேசிய பூங்கா மற்றும் பெஞ்ச் தேசிய பூங்கா ஆகியவையாகும்.

6.The Indian Medicines Pharmaceutical Corporation Limited (IMPCL) and the Government e-Market (GeM) portal has inked a deal under which the IMPCL will now sell its products on the e-Market (GeM) portal of the government.

இந்தியன் மெடிசின்ஸ் பார்மாசிட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் (IMPCL) மற்றும் அரசு மின்-சந்தை (GeM) போர்டல் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இந்த ஒப்பந்தத்தின்படி IMPCL தனது தயாரிப்புகளை அரசாங்கத்தின் இ-மார்க்கெட் (GeM) போர்ட்டலில் விற்பனை செய்யும்.

International

7.The Union Home Ministry has asked the paramilitary Assam Rifles to prevent any Myanmar national from crossing into Indian territory and push back any found attempting to cross over.

மியான்மர் நாட்டினர் இந்திய எல்லைக்குள் சட்டத்துக்கு புரம்பாக நுழைவதை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் துணை ராணுவப்படையான அசாம் ரைபிள்ஸைக் கேட்டுக் கொண்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Dr. Justice A.R. Lakshmanan Rolling Trophy is related to

Hockey

Football

Cricket

Volleyball

டாக்டர் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் ரோலிங் டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

ஹாக்கி

கால்பந்து

மட்டைப்பந்து

கைப்பந்து

2.Solid Fuel Ducted Ramjet technology was recently tested by

ISRO

DRDO

CSIR

ICMR

திட எரிபொருள் குழாய் ராம்ஜெட் தொழில்நுட்பம் சமீபத்தில் எங்கு சோதனை செய்யப்பட்டது?

ISRO

DRDO

CSIR

ICMR

3.Who is the head of the high level committee for planning the commemoration of the 75th year of Independence in 2022?

President

Vice President

Prime Minister

Home Minister

2022 ஆம் ஆண்டில் 75வது சுதந்திர தினத்தின் உயர் மட்டக் குழுவின் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்

பிரதமர்

உள்துறை அமைச்சர்

4.A flight demonstration based on Solid Fuel Ducted Ramjet was recently carried out in

Hyderabad

Bangalore

Mumbai

Odisha

திட எரிபொருள் குழாய் ராம்ஜெட்டை அடிப்படையாகக் கொண்ட விமான சோதனை சமீபத்தில் எங்கு மேற்கொள்ளப்பட்டது?

ஹைதராபாத்

பெங்களூர்

மும்பை

ஒடிசா

5.Who is the head of the implementation committee for the 75th year of Independence in 2022?

President

Vice President

Prime Minister

Home Minister

2022 ஆம் ஆண்டு 75 வது சுதந்திர தினத்தின் அமலாக்கக் குழுவின் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்

பிரதமர்

உள்துறை அமைச்சர்

6.Which organisation releases a Food Waste Index Report?

UNESCO

UNICEF

UNEP

UNDP

உணவு கழிவு தரவரிசை அறிக்கையை எந்த அமைப்பு வெளியிடுகிறது?

UNESCO

UNICEF

UNEP

UNDP

7.Which paramilitary force has been directed to prevent any Myanmar national from crossing into Indian territory?

Central Reserve Police Force

Central Industrial Security Force

Indo Tibetan Police Force

Assam Rifles

எந்தவொரு மியான்மர் நாட்டவரும் இந்திய எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க எந்த துணை ராணுவப் படை இயக்கப்பட்டுள்ளது?

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

இந்தோ திபெத்திய போலீஸ் படை

அசாம் ரைபிள்ஸ்

8.Which state recently introduced the night safaris in the three national parks?

Madhya Pradesh

Andhra Pradesh

Arunachal Pradesh

Himachal Pradesh

மூன்று தேசிய பூங்காக்களில் இரவு சஃபாரிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

மத்தியப் பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

9.Kanha National Park is located in

Madhya Pradesh

Andhra Pradesh

Arunachal Pradesh

Himachal Pradesh

கன்ஹா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?

மத்தியப் பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

athiyaman book store

DOWNLOAD  Current affairs -07 MAR- 2021 PDF

 799 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: