TNPSC CURRENT AFFAIRS PDF –08th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 08 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu State Government has formed a committee headed by school education secretary Kakarla Usha to decide the modalities to award marks for admissions into higher educational institutions. Based on the committee’s report, the marks would be awarded and admissions would be based on these marks.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அவர்கள் தலைமையில், உயர் கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இந்த மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறும்.

India

2. In view of the growing problem related to children affected by COVID-19, the National Commission for Protection of Child Rights (NCPCR) has devised an online tracking portal “Bal Swaraj (COVID-Care link)” for children in need of care and protection.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ‘பால் ஸ்வராஜ்’ என்கிற இணையதளத்தை வடிவமைத்துள்ளது. அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது.

3. Lieutenant Governor of Ladakh RK Mathur launched the YounTab scheme for students. It is an initiative of the Department of School Education with technical support by the Information Technology Department under which 12,300 tablets with preloaded online and offline content, including textbooks, video lectures and online class applications, would be distributed to government school students from Class 6th to 12th.

லடாக் பிரதேச துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் பள்ளி மாணவர்களுக்கான யூன்டாப் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படும் பள்ளி கல்வித் துறையின் திட்டமாகும், இதன்கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், வீடியோ விரிவுரைகள் மற்றும் ஆன்லைன் வகுப்பு செயலிகள் உட்பட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உள்ளடக்கங்களைக் கொண்ட 12,300 டேப்லெட் எனப்படும் வரைப்பட்டிகைகள் விநியோகிக்கப்பட உள்ளன.

4. Ranjitsinh Disale, a school teacher from Maharashtra who received the Global Teacher Prize in 2020, has been named World Bank Education Advisor for the period June 2021 to June 2024.

சர்வதேச விருது பெற்ற மராட்டியத்தை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே உலகவங்கியின் ஆலோசனை கமிட்டியில் இடம்பிடித்து உள்ளார். அவரது பதவிக்காலம் ஜூன் 2021 முதல் ஜூன் 2024 வரை ஆகும்.

5. The Government of India and Asian Development Bank have signed a 2.5 million dollar (about Rs 18 crore) Project Readiness Financing (PRF) loan to upgrade major district roads in Sikkim.

சிக்கிம் மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் உள்ள சாலைகளின் மேம்பாட்டு திட்டத்துக்கு உதவுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில், இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The Securities and Exchange Board of India (SEBI) and the Luxembourg CSSF have entered into a bilateral Memorandum of Understanding (MoU) for mutual cooperation and technical assistance. The objective of this MoU is to strengthen cross-border cooperation in the area of securities regulation.

இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி), லக்சம்பர்க் நாட்டின் நிதி ஆணையம் CSSF ஆகியவற்றுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் பரஸ்பர உதவிகள், இந்தியா, லக்சம்பர்க் நாடுகளின் பங்குச் சந்தை தொடர்பான சட்டங்கள், ஒழுங்குமுறைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.

7. A French novelist David Diop won the prestigious International Booker Prize for the books translated into English with his World War I novel, “At Night All Blood is Black”. The translator of the book, Anna Moschovakis, won half the prize.

பிரெஞ்சு நாவலாசிரியர் டேவிட் டியோப் “அட் நைட், ஆல் பிளட் இஸ் பிளாக்” என்கிற முதல் உலகப் போர் தொடர்பான அவரது நாவலுக்காக மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசை வென்றார். புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் அண்ணா மோஸ்கோவாக்கிஸ் அவருடன் பரிசை பகிர்ந்து கொண்டார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the head of the committee formed to decide the modalities to award marks for admissions into higher educational institutions in Tamil Nadu?

Supriya Sahu

Ranjitsinh Disale

Kakarla Usha

R.K. Mathur

தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண்களை வழங்குவதற்கான வழிமுறைகளை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

சுப்ரியா சாஹூ

ரஞ்சித்சிங் டிசாலே

காகர்லா உஷா

ஆர்.கே. மாத்தூர்

2. Bal Swaraj Portal was launched by

NHRC

NCW

NCPWD

NCPCR

பால் ஸ்வராஜ் போர்ட்டல் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

NHRC

NCW

NCPWD

NCPCR

3. YounTab scheme is an initiative of

1. Department of Revenue

2. Department of Finance

3. Department of School Education

4. Department of Higher Education

யூன்டாப் திட்டம் எந்த துறையின் திட்டமாகும்?

வருவாய் துறை

நிதித்துறை

பள்ளி கல்வித்துறை

உயர்கல்வித்துறை

4. Who is the Lieutenant Governor of Ladakh?

Supriya Sahu

Ranjitsinh Disale

Kakarla Usha

R.K. Mathur

லடாக்கின் துணைநிலை ஆளுநர் யார்?

சுப்ரியா சாஹூ

ரஞ்சித்சிங் டிசாலே

காகர்லா உஷா

ஆர்.கே. மாத்தூர்

5. Who has been named as World Bank Education Advisor from India?

Supriya Sahu

Ranjitsinh Disale

Kakarla Usha

R.K. Mathur

இந்தியாவில் இருந்து உலக வங்கி கல்வி ஆலோசகராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

சுப்ரியா சாஹூ

ரஞ்சித்சிங் டிசாலே

காகர்லா உஷா

ஆர்.கே. மாத்தூர்

6. Which bank has signed a 2.5 million dollar loan agreement to upgrade major district roads in Sikkim?

NDB

AIIB

IMF

ADB

சிக்கிமில் உள்ள முக்கிய மாவட்ட சாலைகளை மேம்படுத்த 2.5 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வங்கி எது?

NDB

AIIB

IMF

ADB

7. Who won the International Booker Prize in 2021?

Anna Moschovakis

David Diop

Both 1 and 2 are correct

Both 1 and 2 are incorrect

2021 இல் சர்வதேச புக்கர் பரிசை வென்றவர் யார்?

அண்ணா மோஸ்கோவாக்கிஸ்

டேவிட் டியோப்

1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

1 மற்றும் 2 இரண்டும் தவறானவை

8. With which country’s organization, SEBI has entered into a bilateral MoU for mutual cooperation?

Brazil

France

Luxembourg

Switzerland

எந்த நாட்டின் அமைப்புடன், பரஸ்பர ஒத்துழைப்புக்காக செபி அமைப்பு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

பிரேசில்

பிரான்ஸ்

லக்சம்பர்க்

சுவிட்சர்லாந்து

         

DOWNLOAD  Current affairs -08 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d