TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 09 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. With COVID19 spreading rapidly, the Tamil Nadu government has announced a total lockdown across the State from 4 a.m. on May 10 to 4 a.m. on May 24.
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
2. Senior DMK leader K.Pitchandi has been named the protem Speaker of the Assembly by the Governor of Tamil Nadu, the Assembly Secretary K. Srinivasan press release said.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. The Minister for Water Resources Duraimurugan has been named the Leader of the House, the Assembly Secretary K. Srinivasan press release said.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. The 16th Tamil Nadu Legislative Assembly has been summoned to meet for its first session at Kalaivanar Arangam in the Omandurar Government Estate on May 11. The newly elected members will take their oath on that day. The election of the Speaker and the Deputy Speaker Would be held on May 12.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை மே 07 அன்று பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் தொடங்கவுள்ளது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெறுகிறது.
India
5. The Drugs Controller General of India (DCGI) has granted permission for emergency use of an anti-COVID-19 therapeutic application of the drug 2-deoxy-D-glucose(2-DG), developed by the Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), a lab of the Defence Research and Development Organisation (DRDO), in collaboration with Dr. Reddy’s Laboratories, Hyderabad.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (INMAS) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து கடுமையான கொரோனா நோயாளிகளுக்கு மிதமான ஒரு துணை சிகிச்சை மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த மருந்து அவசரகால பயன்பாட்டிற்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
6. The World Migratory Bird Day is celebrated every year on the second Saturday of May and October. This year, it is celebrated on May 8, 2021. The previous World Migratory Bird Day was celebrated on October 10, 2020. “Sing, Fly, Soar – Like a Bird!” is the theme of this year’s World Migratory Bird Day.
உலக இடம்பெயர்வு பறவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இது மே 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முந்தைய உலக இடம்பெயர்வு பறவை தினம் அக்டோபர் 10, 2020 அன்று கொண்டாடப்பட்டது. “பாடு, பற, உயரப்பற – ஒரு பறவை போல!” என்பது இந்த ஆண்டு உலக இடம்பெயர்வு பறவை தினத்தின் மையப்பொருள் ஆகும்.
7. The World Thalassemia Day is observed every year on May 8. This year, World Thalassemia Day is celebrated under the following theme: “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community”.
உலக தலசீமியா நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உலக தலசீமியா நோய் தினம் பின்வரும் மையப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது: “உலகளாவிய தலசீமியா சமூகத்தில் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்” அகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who appoints the protem speaker of the State Legislative Assembly?
Governor
Chief Minister
Leader of the House
Speaker
மாநில சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகரை நியமிப்பது யார்?
ஆளுநர்
முதலமைச்சர்
அவை முன்னவர்
சபாநாயகர்
2. Who is the leader of the House for the 16th Tamil Nadu Legislative Assembly?
Stalin
Duraimurugan
K.Pitchandi
K. Srinivasan
16வது தமிழ்நாடு சட்டமன்ற அவை முன்னவர் யார்?
ஸ்டாலின்
துரைமுருகன்
கு.பிச்சாண்டி
கி.சீனிவாசன்
3. Who is the protem Speaker of the 16th Tamil Nadu Legislative Assembly?
Stalin
Duraimurugan
K.Pitchandi
K. Srinivasan
16 வது தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் யார்?
ஸ்டாலின்
துரைமுருகன்
கு.பிச்சாண்டி
கி.சீனிவாசன்
4. Which authority grants permission for emergency use of drugs in India?
DRDO
ICMR
CSIR
DCGI
இந்தியாவில் மருந்துகளை பயன்படுத்த எந்த அமைப்பு அனுமதி அளிக்கிறது?
DRDO
ICMR
CSIR
DCGI
5. Who is the Secretary of Tamil Nadu Legislative Assembly?
Stalin
Duraimurugan
K.Pitchandi
K. Srinivasan
தமிழக சட்டப்பேரவையின் செயலாளர் யார்?
ஸ்டாலின்
துரைமுருகன்
கு.பிச்சாண்டி
கி.சீனிவாசன்
6. The drug 2-deoxy-D-glucose(2-DG) was developed by
DRDO
ICMR
CSIR
DCGI
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்து எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?
DRDO
ICMR
CSIR
DCGI
7. The World Migratory Bird Day is celebrated in 2021 on
1. May 6
2. May 7
3. May 8
4. May 9
2021 ஆம் ஆண்டு உலக இடம்பெயர்வு பறவை தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. மே 6
2. மே 7
3. மே 8
4. மே 9
8. The World Thalassemia Day is observed every year on
1. May 6
2. May 7
3. May 8
4. May 9
ஒவ்வொரு ஆண்டும் உலக தலசீமியா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 6
2. மே 7
3. மே 8
4. மே 9