TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 11 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. The Tamil Nadu government has given additional charge to the Principal Secretary to CM T. Udhayachandran, IAS as Secretary of Special Programme Implementation Department.
முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் என்கிற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை என்பது தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பது, அவற்றை சீரிய முறையில் அமல்படுத்துவது ஆகிய பணிகளை கொண்டதாகும்.
2. The Tamil Nadu Government has transferred and posted Director General of Police (DGP) Mohammad Shakeel Akhter as the Director of CB-CID, the premier investigation agency of the Tamil Nadu police.
காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த டிஜிபி ஷகீல் அக்தர் அவர்கள் சிபிசிஐடி இயக்குநராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. The Tamil Nadu Government has transferred and posted Special DGP P Kandasamy as the Director of Directorate of Vigilance & Anti-Corruption.
சென்னை நிர்வாகப் பிரிவில் சிறப்பு டிஜிபியாக இருந்த கந்தசாமி அவர்கள், ஊழல்-லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக தமிழ்நாடு அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
India
4. The NITI Aayog and Mastercard have released a report titled ‘Connected Commerce: Creating a Roadmap for a Digitally Inclusive Bharat’. The report identifies challenges in accelerating digital financial inclusion in India and provides recommendations for making digital services accessible to its 1.3 billion citizens.
‘இணைக்கப்பட்ட வர்த்தகம்: உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான வரைபடம்’ என்ற தலைப்பில் நிதி ஆயோக் மற்றும் மாஸ்டர் கார்டு இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேர்க்கையை விரைவுபடுத்துவதில் உள்ள சவால்களை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை கொண்டு சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
5. The Public Enterprises Selection Board (PESB) has selected Arun Kumar Singh as the chairman and managing director of state-run oil refining and marketing firm Bharat Petroleum Corporation Ltd (BPCL). This selection will have to be ratified by the Appointments Committee of the Cabinet led by prime minister Narendra Modi.
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அருண்குமார் சிங் அவர்களை பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியம் (PESB) தேர்வு செய்துள்ளது. இந்தத் தேர்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
6. The International Day of Argania is celebrated for the first time on May 10, 2021. It is proclaimed by the United Nations General Assembly at the initiative of Morocco to honour the Argan tree. Argania tree grows in the sub-Saharan region of Morocco.
சர்வதேச ஆர்கானியா தினம் முதல் முறையாக மே 10, 2021 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஆர்கானியா மரத்தை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கானியா மரம் மொராக்கோவின் துணை-சஹாரா பகுதியில் வளர்கிறது.
Sports
7. Arzan Nagwaswalla, a 23-year-old left-arm seamer from Gujarat, has been picked as a reserve player in the Indian Test squad named for the World Test Championship final against New Zealand in Southampton. He is the first Parsi cricketer to break into the Indian team since 1975 and the only active Parsi cricketer.
சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில் குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்சான் நாக்வஸ்வாலா இருப்பு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1975 க்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறும் முதல் பார்சி கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது விளையாடி வரும் ஒரே பார்சி கிரிக்கெட் வீரர் இவர் ஆவார்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the Secretary of the Special Programme Implementation Department in Tamil Nadu?
Udhayachandran
Mohammad Shakeel Akhter
Irai Anbu
Kandasamy
தமிழ்நாட்டில் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை செயலாளர் யார்?
உதயச்சந்திரன்
முகமது ஷகீல் அக்தர்
இறையன்பு
கந்தசாமி
2. Who is the new Director of Tamil Nadu CB-CID?
Udhayachandran
Mohammad Shakeel Akhter
Irai Anbu
Kandasamy
தமிழ்நாடு சிபிசிஐடி யின் புதிய இயக்குனர் யார்?
உதயச்சந்திரன்
முகமது ஷகீல் அக்தர்
இறையன்பு
கந்தசாமி
3. Who is the new Director of Directorate of Vigilance & Anti-Corruption in Tamil Nadu?
Udhayachandran
Mohammad Shakeel Akhter
Irai Anbu
Kandasamy
தமிழகத்தில் ஊழல்-லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தின் புதிய இயக்குநர் யார்?
உதயச்சந்திரன்
முகமது ஷகீல் அக்தர்
இறையன்பு
கந்தசாமி
4. In which country, Argania tree is grown?
France
Colombia
Morocco
Spain
ஆர்கானியா மரம் எந்த நாட்டில் வளர்கிறது?
பிரான்ஸ்
கொலம்பியா
மொராக்கோ
ஸ்பெயின்
5. The International Day of Argania is celebrated every year on
1. May 10
2. May 11
3. May 12
4. May 13
சர்வதேச ஆர்கானியா தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. மே 10
2. மே 11
3. மே 12
4. மே 13
6. Who is the only active Parsi cricketer in the Indian Team?
Rahul Chahar
Deepak Chahar
Arzan Nagwaswalla
Arshdeep Singh
இந்திய அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே பார்சி கிரிக்கெட் வீரர் யார்?
ராகுல் சாஹர்
தீபக் சாஹர்
அர்சான் நாக்வஸ்வல்லா
அர்ஷ்தீப் சிங்
7. The World Test Championship Cricket final is between
1. India and England
2. India and Australia
3. India and Newzealand
4. None of the above
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது?
1. இந்தியா மற்றும் இங்கிலாந்து
2. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
3. இந்தியா மற்றும் நியூசிலாந்து
4. மேற்கூறிய எதுவும் இல்லை