TNPSC CURRENT AFFAIRS PDF – 12th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Chief Minister M K Stalin, on August 11, 2021, announced that the birth anniversary of Rajendra Cholan will be celebrated as a government function. The birth anniversary of the Chola king is celebrated every year on the day of Aadi Thiruvathirai (Thiruvathirai is a star in Aadi month) in Gangaikonda Cholapuram. Rajendra Cholan constructed the renowned Brihadeeswarar Temple in Gangaikondacholapuram in Ariyalur district 1000 years ago.

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இங்கு ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

2. Consul General of Japan in Chennai Taga Masayuki called on Chief Minister M.K. Stalin at the Secretariat on August 11, 2021.

சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் தூதர் திரு. டாகா மாசாயுகி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஆகஸ்டு 11, 2021 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

India

3. Union Minister of Youth Affairs and Sports Anurag Singh Thakur will confer the National Youth Awards 2017-18 and 2018-19 on 12th August 2021.

2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை, ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் ஆகஸ்டு 12ம் தேதி வழங்குகிறார்.

4. Commemorating the International Youth Day 2021 (August 12, 2021), ten young winning entrepreneur teams of the agri-enterprise challenge S.O.L.V.E.D 2021 (Social Objectives-Led Volunteer Enterprise Development) will be felicitated by Minister of State Youth Affairs & Sports Nisith Pramanik.

ஆகஸ்டு 12, 2021 அன்று இளைஞர் தினம் 2021-ஐ கொண்டாடும் வகையில், வேளாண் நிறுவனங்கள் சவால் போட்டியில் வெற்றி பெற்ற 10 இளம் தொழில் முனைவோர் குழுக்களை ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக் அவர்கள் அறிவித்து பாராட்டுத் தெரிவிக்கவுள்ளார்.

5. The 5th edition of the National Public Procurement Conclave (NPPC) was organized by Government e-Marketplace (GeM) in association with the Confederation of Indian Industry (CII) on August 9 & 10, 2021 on the theme “Technology-enabled Government Procurement – Towards Efficiency, Transparency, and Inclusiveness”. It was inaugurated by the Minister of State for Commerce and Industry Anupriya Patel.

அரசு மின்னணு சந்தை தளம், இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பை ஆகஸ்ட் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், “தொழில்நுட்பத்துடன் கூடிய அரசு கொள்முதல்-தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நடத்தியது. ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், ஆகஸ்டு 9-ஆம் தேதி காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

6. Prime Minister Narendra Modi will participate in ‘Atmanirbhar Narishakti se Samvad’ and interact with women Self Help Group (SHG) members/community resource persons promoted under the Deendayal Antyodaya Yojana-National Rural Livelihoods Mission (DAY-NRLM) on 12th August 2021.

தற்சார்பு பெண்சக்திகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுவினர்கள் / தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்கள் ஆகியோருடன், ஆகஸ்ட் 12-ம் தேதி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

7. Chief Election Commissioner (CEC) of India Sushil Chandra on August 12, 2021 inaugurated the 11th Annual meeting of the Forum of the Election Management Bodies of South Asia (FEMBoSA) for the year 2021. It was hosted by the Election Commission of Bhutan. The delegations from India, Afghanistan, Bangladesh, Bhutan, Maldives, Nepal and Sri Lanka participated in the meeting.

தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான மன்றத்தின் (ஃபெம்போசா) 11-வது வருடாந்திர கூட்டத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் ஃபெம்போசாவின் தற்போதைய தலைவருமான திரு சுஷில் சந்திரா தொடங்கி வைத்தார். காணொலி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தை பூடான் தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த கூட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன.

8. CEC of India Sushil Chandra as the outgoing Chairman of FEMBoSA virtually handed over the Chairmanship of FEMBoSA to CEC of Bhutan H.E. Dasho Sonam Topgay at 11th Annual meeting of FEMBoSA.

ஃபெம்போசாவின் தலைவர் பதவியை நிறைவு செய்யும் திரு சுஷில் சந்திரா, பூடான் தலைமை தேர்தல் ஆணையர் மேன்மைமிகு டாஷோ சோனம் டோப்கேவுக்கு தலைவர் பொறுப்பை காணொலி மூலம் ஒப்படைத்தார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The birth anniversary of King Rajendra Cholan is celebrated every year on

Vaikasi Visakam

Aadi Thiruvathirai

Aadi Thabasu

Chithirai Natchathiram

மன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

வைகாசி விசாகம்

ஆடி திருவாதிரை

ஆடி தபசு

சித்திரை நட்சத்திரம்

2. Who constructed the renowned Brihadeeswarar Temple in Gangaikondacholapuram?

Nandivarman

Raja Raja I

Rajendra Cholan

Varagunavarman

கங்கைகொண்டசோழபுரத்தில் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?

நந்திவர்மன்

ராஜ ராஜா I

ராஜேந்திர சோழன்

வரகுணவர்மன்

3. The 5th edition of the National Public Procurement Conclave (NPPC) was organized by

NIC

CII

NPCI

MCI

தேசிய பொது கொள்முதல் மாநாட்டின் (NPPC) 5 வது பதிப்பு ஏற்பாடு யாரால் செய்யப்பட்டது?

NIC

CII

NPCI

MCI

4. International Youth Day is observed on

August 11

August 12

August 13

August 14

பன்னாட்டு இளைஞர் தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

ஆகஸ்டு 11

ஆகஸ்டு 12

ஆகஸ்டு 13

ஆகஸ்டு 14

5. Who inaugurated the 5th edition of the National Public Procurement Conclave?

Sushil Chandra

Anupriya Patel

Dasho Sonam

Ajay Singh

தேசிய பொது கொள்முதல் மாநாட்டின் 5 வது பதிப்பை தொடக்கி வைத்தவர் யார்?

சுஷில் சந்திரா

அனுப்ரியா படேல்

டாசோ சோனம்

அஜய் சிங்

6. Gangaikondacholapuram is located in

Trichy

Perambalur

Ariyalur

Thanjavur

கங்கைகொண்டசோழபுரம் எங்கு அமைந்துள்ளது?

திருச்சி

பெரம்பலூர்

அரியலூர்

தஞ்சாவூர்

7. Who is the Chief Election Commissioner of India?

Sushil Chandra

Anupriya Patel

Dasho Sonam

Ajay Singh

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் யார்?

சுஷில் சந்திரா

அனுப்ரியா படேல்

டாசோ சோனம்

அஜய் சிங்

8. Who inaugurated the 11th Annual meeting of FEMBoSA?

Sushil Chandra

Anupriya Patel

Dasho Sonam

Ajay Singh

ஃபெம்போசாவின் 11 வது வருடாந்திர கூட்டத்தை தொடங்கிவைத்தவர் யார்?

சுஷில் சந்திரா

அனுப்ரியா படேல்

டாசோ சோனம்

அஜய் சிங்

9. Who is the new Chairman of FEMBoSA?

Sushil Chandra

Anupriya Patel

Dasho Sonam

Ajay Singh

ஃபெம்போசாவின் புதிய தலைவர் யார்?

சுஷில் சந்திரா

அனுப்ரியா படேல்

டாசோ சோனம்

அஜய் சிங்

DOWNLOAD  Current affairs -12 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us