TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The Defence Minister Rajnath Singh has approved the budgetary support of ₹498.8 crore to Innovations for Defence Excellence (iDEX) challenge under the Defence Innovation Organisation (DIO) for the next five years.
பாதுகாப்புத்துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்த பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் (DDP) புத்தாக்க அமைப்பு (DIO) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் சிறப்பு பாதுகாப்புக்கான கண்டுபிடிப்புகள் திட்டம் (iDEX) உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதியவற்றை கண்டுபிடிப்பதற்கு உதவ ரூ.498.8 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
2.The Youth Affairs and Sports Minister Kiren Rijiju has launched the Central Athlete Injury Management System (CAIMS) for streamlining the sports medicine and rehabilitation support offered to the athletes.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உதவிகளை நெறிப்படுத்துவதற்காக மத்திய தடகள காயம் மேலாண்மை முறையை (CAIMS) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்கள் தொடங்கி வைத்தார்.
3.Mukesh Sharma, a faculty at IIT Kanpur, has been appointed as an honorary member of World Health Organisation’s (WHO) Global Air Pollution and Health – Technical Advisory Group (GAPH-TAG).
ஐ.ஐ.டி கான்பூர் பேராசிரியர் முகேஷ் சர்மா உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காற்று மாசுபாடு மற்றும் சுகாதார–தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (GAPH-TAG) கெளரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.A mobile application devoted to Yoga named “Namaste Yoga”, was launched by the Ministry of Ayush in the curtain raiser event for the 7th International Day of Yoga. The event was organised by the Ministry of Ayush in association with the Morarji Desai National Institute of Yoga. The Namaste Yoga app has been designed as an information platform for the public, with the aim to raise awareness about yoga and make it accessible for the larger community.
ஆயுஷ் அமைச்சகம் “நமஸ்தே யோகா” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (MDNI) உடன் இணைந்து ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 7 வது சர்வதேச யோகா தினத்திற்கான தொடக்க நிகழ்வில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. யோகா குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும், சமூகத்திற்கு அதை அணுகுவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
International
5.The International Albinism Awareness Day is observed by the United Nations on June 13 every year. The theme for this year is “Strength Beyond All Odds”.
உலகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டிற்கான சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு – “எல்லா முரண்பாடுகளையும் மீறிய வலிமை” என்பதாகும்.
6.The 47th G7 Leaders’ Summit held in Carbis Bay, England from June 11 to 13.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் 47-வது ஜி-7 உச்சி மாநாடு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who launched the Central Athlete Injury Management System?
A.Ajit Mishra
B.Rajnath Singh
C.Mukesh Sharma
D.Kiren Rijiju
மத்திய தடகள காயம் மேலாண்மை முறையை ஆரம்பித்து வைத்தவர் யார்?
A.அஜித் மிஸ்ரா
B.ராஜ்நாத் சிங்
C.முகேஷ் சர்மா
D.கிரண் ரிஜிஜு
2.Who has been appointed as an honorary member of the World Health Organisation’s Global Air Pollution and Health – Technical Advisory Group?
A.Ajit Mishra
B.Rajnath Singh
C.Mukesh Sharma
D.Kiren Rijiju
உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காற்று மாசுபாடு மற்றும் சுகாதாரம் – தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A.அஜித் மிஸ்ரா
B.ராஜ்நாத் சிங்
C.முகேஷ் சர்மா
D.கிரண் ரிஜிஜு
3.The 7th International Day of Yoga is organised by
A.Ministry of Health
B.Ministry of Sports
C.Ministry of Education
D.Ministry of Ayush
7 வது சர்வதேச யோகா தினத்தை எந்த அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது?
A.சுகாதார அமைச்சகம்
B.விளையாட்டு அமைச்சகம்
C.கல்வி அமைச்சகம்
D.ஆயுஷ் அமைச்சகம்
4.The Namaste Yoga app was launched by
A.Ministry of Health
B.Ministry of Sports
C.Ministry of Education
D.Ministry of Ayush
நமஸ்தே யோகா செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
A.சுகாதார அமைச்சகம்
B.விளையாட்டு அமைச்சகம்
C.கல்வி அமைச்சகம்
D.ஆயுஷ் அமைச்சகம்
5.The International Albinism Awareness Day is observed by the United Nations on
A.June 10
B.June 11
C.June 12
D.June 13
சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினத்தை ஐக்கிய நாடுகள் சபை எந்த தேதியில் கொண்டாடுகிறது?
A.ஜூன் 10
B.ஜூன் 11
C.ஜூன் 12
D.ஜூன் 13
6.The 47th G7 Leaders’ Summit held in
A.USA
B.Germany
C.France
D.UK
47 வது ஜி 7 தலைவர்களின் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
A.அமெரிக்கா
B.ஜெர்மனி
C.பிரான்ஸ்
D.இங்கிலாந்து