TNPSC CURRENT AFFAIRS PDF –14th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Union Commerce and Industry Minister Shri Piyush Goyal virtually inaugurated e-SANTA, an electronic marketplace providing a platform to connect aqua farmers and buyers. The term e-SANTA was coined for the web portal, meaning Electronic Solution for Augmenting NaCSA farmers’ Trade-in Aquaculture. National Centre for Sustainable Aquaculture (NaCSA) is an extension arm of the Marine Products Export Development Authority (MPEDA) under the Ministry of Commerce & Industry.

மீன் வளர்ப்பு விவசாயிகளையும் வியாபாரிகளையும் இணைக்கும் மின்னணு சந்தையான e-SANTA என்கிற வலைதளத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். e-SANTA என்ற சொல்லின் விரிவாக்கம் ‘மீன் வளர்ப்பில் NaCSA விவசாயிகளின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மின்னணு தீர்வு’ ஆகும். தேசிய நிலையான நீர்வாழ் வளர்ப்பு மையம் (NaCSA) என்பது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) விரிவாக்கக் குழுவாகும்.

2.The National Cadet Corps (NCC) on April 13, 2021, paid homage to the martyrs of the Jallianwala Bagh massacre who lost their lives on this day, i.e., April 13 in 1919.

ஏப்ரல் 13, 1919 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு ஏப்ரல் 13, 2021 அன்று தேசிய மாணவர் படை (NCC) மரியாதை செலுத்தியது.

3.NITI Aayog, in partnership with Bill and Melinda Gates Foundation and Centre for Social and Behaviour Change, Ashoka University, launched Poshan Gyan, a national digital repository on health and nutrition.

அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் நடத்தை மாற்ற மையம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போஷன் ஞான் என்கிற தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

4.The Department of Biotechnology (DBT) has announced that it has approved additional funding towards clinical studies of India’s ‘first of its kind’ mRNA-based COVID-19 vaccine – HGCO19, developed by Pune-based biotechnology company Gennova Biopharmaceuticals Ltd. This funding has been awarded under the ‘Mission COVID Suraksha- The Indian COVID-19 Vaccine Development Mission’ by DBT’s dedicated Mission Implementation Unit at Biotechnology Industry Research Assistance Council (BIRAC).

புனேவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ஜெனோவா உயிரி மருந்துகள் லிமிடெட் உருவாக்கிய இந்தியாவின் முதல் mRNA-அடிப்படையிலான கோவிட் -19 தடுப்பூசி – HGCO19 இன் மருத்துவ ஆய்வுகளுக்கு கூடுதல் நிதியுதவி அளிப்பதாக உயிரி தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி ‘மிஷன் கோவிட் சூரக்ஷா- இந்திய கோவிட் -19 தடுப்பூசி மேம்பாட்டு மிஷன்’ கீழ் வழங்கப்பட்டது. மேலும், இது உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) ஆல் அமலாக்கப்படுகிறது.

5.The Commerce & Industry Minister Piyush Goyal launched the Directorate General of Foreign Trade (DGFT) India’s ‘Trade Facilitation’ mobile app on April 12 to promote ease of doing business and provide quick access to information to importers/exporters.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) ‘வர்த்தக வசதி’ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.

6.The Union Health Minister Harsh Vardhan launched “Mission Aahaar Kranti”.The mission aims to spread the message of the importance of a nutritionally balanced diet. It will also promote the importance of accessibility to local fruits and vegetables.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் “மிஷன் அஹார் கிரந்தி” ஐ தொடங்கி வைத்தார். இது ஊட்டச்சத்து மற்றும் சீரான உணவின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவத்தையும் இது ஊக்குவிக்க உள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

7.Kazakhstan Prime Minister Askar Mamin and Uzbekistan Prime Minister Abdulla Aripov launched the construction of the Central Asia International Center for Trade and Economic Cooperation located at the Kazakh-Uzbek border.

கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் மற்றும் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிபோவ் ஆகியோர் இணைந்து கஜகஸ்தான்-உஸ்பெகிஸ்தான் எல்லையில் அமைய உள்ள மத்திய ஆசிய சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

8.The Global Food Policy Report is released by the Washington DC-based International Food Policy Research Institute (IFPRI). “Transforming Food Systems After COVID-19” is the theme for 2021.

உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையை வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ளது. “COVID-19 க்குப் பிறகு உணவு முறைகளை மாற்றுவது” என்பது 2021 ஆம் ஆண்டிற்கான இதன் மையப்பொருள் ஆகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. e-SANTA web portal was inaugurated by

Piyush Goyal

Rajnath Singh

Ramesh Pokhriyal

Harsh Vardhan

e-SANTA என்கிற வலை தளத்தை யாரால் திறந்து வைக்கப்பட்டது?

பியூஷ் கோயல்

ராஜ்நாத் சிங்

ரமேஷ் போக்ரியால்

ஹர்ஷ் வர்தன்

2. Jallianwala Bagh massacre was occurred on

1. April 13

2. April 14

3. April 15

4. April 16

ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று நடந்தது?

1. ஏப்ரல் 13

2. ஏப்ரல் 14

3. ஏப்ரல் 15

4. ஏப்ரல் 16

3. Poshan Gyan was launched by

NITI Aayog

Centre for Social and Behaviour Change

Bill & Melinda Gates Foundation

All the above

‘போஷன் ஞான்’ யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

நிதி ஆயோக்

சமூக மற்றும் நடத்தை மாற்ற மையம்

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

மேலே உள்ள அனைத்தும் சரி

4. Mission COVID Suraksha is implemented by

DCGI

BIRAC

CDSCO

IFPRI

மிஷன் கோவிட் சூரக்ஷா எந்த அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது?

DCGI

BIRAC

CDSCO

IFPRI

5. HGCO19 vaccine was developed by

Serum

BionTech

Gennova

BioE

HGCO19 தடுப்பூசி எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?

Serum

BionTech

Gennova

BioE

6. Trade Facilitation mobile app was recently launched by

Piyush Goyal

Rajnath Singh

Ramesh Pokhriyal

Harsh Vardhan

வர்த்தக வசதி மொபைல் செயலி சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

பியூஷ் கோயல்

ராஜ்நாத் சிங்

ரமேஷ் போக்ரியால்

ஹர்ஷ் வர்தன்

7. Mission Aahaar Kranti was launched by

Piyush Goyal

Rajnath Singh

Ramesh Pokhriyal

Harsh Vardhan

மிஷன் அஹார் கிரந்தி யாரால் தொடங்கப்பட்டது?

பியூஷ் கோயல்

ராஜ்நாத் சிங்

ரமேஷ் போக்ரியால்

ஹர்ஷ் வர்தன்

8. The Central Asia International Center for Trade and Economic Cooperation located at

India-Pakistan Border

Kazakhstan-Uzbekistan Border

Afghanistan-Pakistan Border

None of the above

வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மத்திய ஆசிய சர்வதேச மையம் எங்கு அமைந்துள்ளது?

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

கஜகஸ்தான்-உஸ்பெகிஸ்தான் எல்லை

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை

மேற்கூறிய எதுவும் இல்லை

9.The Global Food Policy Report is released by

DCGI

BIRAC

CDSCO

IFPRI

உலகளாவிய உணவு கொள்கை அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது?

DCGI

BIRAC

CDSCO

IFPRI

           

DOWNLOAD  Current affairs -14 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d