TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14th september 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC September Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date :14 SEP 2021
INDIA :
-
A Tamil language paper will be made compulsory in exams conducted by agencies such as the Tamil Nadu Public Service Commission, Finance Minister Palanivel Thiagarajan said.
தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை கிடைக்கும் வகையில் அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Rural local body polls in the nine newly created districts will be held in two phases on October 6 and 9. Votes will be counted on October 12, State Election Commissioner V. Palanikumar said on September 13, 2021. The model code of conduct has come into effect in these nine districts.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது, இது அக்டோபர் 16-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
-
The Tamil Nadu Assembly on September 13, 2021 passed a Bill seeking to “dispense” with the requirement for candidates to qualify in the National Eligibility cum Entrance Test (NEET) for admission to undergraduate medical courses in the State.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரையில் செப்டம்பர் 13, 2021 அன்று நிறைவேற்றப்பட்டது.
-
The Assembly on September 13, 2021 passed a Bill to make the encroachment of properties belonging to religious institutions a cognisable and non-bailable offence, amending the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959.
தமிழ்நாட்டில் இந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்யும் வகையில் சட்ட திருத்தம் ஒன்றை தமிழ்நாடு சட்டசபை நிறுவேற்றியுள்ளது. மேலும், இந்த சட்ட திருத்தத்தின்படி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் ஜாமினில் வெளிவர முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
The Tamil Nadu government will set up separate Police Commissionerates in Avadi and Tambaram, Chief Minister M.K. Stalin announced it in the State Legislative Assembly on September 13, 2021.
நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறை பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், செப்டம்பர் 13, 2021 அன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அதை உறுதி செய்தார். சென்னை காவல்துறை 3 ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
-
Historian and Bharathi scholar A.R. Venkatachalapathy was given the Mahakavi Bharathi Award by the Coimbatore-based Bharathi Pasarai for his contribution to research and studies about the national poet.
பாரதியார் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்துவரும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கோவை பாரதி பாசறை, ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
India
-
Union Minister of Rural Development & Panchayati Raj Giriraj Singh will inaugurate the National Meet on SVAMITVA Scheme: A Stepping-Stone Towards Upliftment of Rural Economy on 14th September, 2021.
ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை, ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், செப்டம்பர் 14, 2021 அன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
-
The two-day conference of Tourism and Culture Ministers of North Eastern States has been organized under the Chairmanship of Minister of Tourism, Culture and DONER, to discuss development of tourism and issues related to connectivity in the North Eastern Region.
சுற்றுலா வளர்ச்சி மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடக்கிறது.
International
-
India and the United States of America (USA) on September 13, 2021 launched the “Climate Action and Finance Mobilization Dialogue (CAFMD)”. The CAFMD is one of the two tracks of the India-U.S. Climate and Clean Energy Agenda 2030 partnership launched at the Leaders’ Summit on Climate in April 2021, by Prime Minister Narendra Modi and US President Mr. Joseph Biden.
பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பேச்சுவார்த்தையை (CAFMD) இந்தியாவும், அமெரிக்காவும் செப்டம்பர் தொடங்கின. கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே நடந்த பருவநிலை குறித்த உச்சி மாநாட்டில் பருவநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி கொள்கையில் கூட்டாக செயல்படும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பிரிவாக பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பேச்சுவார்த்தை தொடங்கியது.
-
The first-ever India Africa Defence Ministers Conclave (IADMC) was held in Lucknow, Uttar Pradesh in conjunction with DefExpo on February 06, 2020, co-organised by the Ministry of Defence and Ministry of External Affairs. This was the first in the series of Pan Africa events at the Ministerial level in the run-up to India Africa Forum Summit IV. A Joint Declaration, ‘Lucknow Declaration’ was adopted after the conclusion of IADMC 2020 as an outcome document of the Conclave. In furtherance of the declaration and in consultation with stakeholders, India proposes to institutionalise the India Africa Defence Dialogue during successive DefExpos to be held once every two years. It has also been decided that Defence Minister Rajnath Singh will host the Defence Ministers of African Nations in the next India – Africa Defence Dialogue on the sidelines of the DefExpo that is scheduled to be held at Gandhinagar, Gujarat in March 2022.
இந்திய, ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் முதலாவது உச்சிமாநாடு 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பு கண்காட்சியை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன. ‘லக்னோ பிரகடனம்’ என்ற கூட்டு உடன்படிக்கை மாநாடு நிறைவடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற உள்ள பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டு இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Mahakavi Bharathi Award is given by
A. Bharathi Peravai
B. Bharathi Pasarai
C. Bharathi Payilagam
D. Bharathi Sinthanaiyagam
மகாகவி பாரதி விருது யாரால் வழங்கப்படுகிறது?
A. பாரதி பேரவை
b. பாரதி பாசறை
C. பாரதி பயிலகம்
D.பாரதி சிந்தனையகம்
2.Who is the State Election Commissioner of Tamil Nadu?
A. Baskaran
B. Balachandran
C. Palani Kumar
D. Venkatachalapathy
தமிழ்நாட்டின் மாநில தேர்தல் ஆணையர் யார்?
A. பாஸ்கரன்
B. பாலச்சந்திரன்
C. பழனி குமார்
D. வெங்கடாசலபதி
3.India-U.S. Climate and Clean Energy Agenda 2030 was launched in
A, April 2021
B. May 2021
C. June 2021
D. July 2021
இந்தியா-அமெரிக்கா காலநிலை மற்றும் சுத்தமான ஆற்றல் நிகழ்ச்சி நிரல் 2030 எப்போது நடத்தப்பட்டது?
A. ஏப்ரல் 2021
B. மே 2021
C. ஜூன் 2021
D. ஜூலை 2021
4.Climate Action and Finance Mobilization Dialogue was launched by
A. India and Russia
B. India and USA
C. India and Japan
D. India and Germany
பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பேச்சுவார்த்தை எந்த நாடுகளால் தொடங்கப்பட்டது?
A. இந்தியா மற்றும் ரஷ்யா
B. இந்தியா மற்றும் அமெரிக்கா
C. இந்தியா மற்றும் ஜப்பான்
D. இந்தியா மற்றும் ஜெர்மனி
5.Who chaired the two-day conference of Tourism and Culture Ministers of North Eastern States?
A. Prime Minister
B. Vice President
C. Union Home Minister
D. Union Minister for Tourism
வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டிற்கு யார் தலைமை தாங்கினார்?
A.பிரதமர்
B.துணைக் குடியரசுத் தலைவர்
C.ஒன்றிய உள்துறை அமைச்சர்
D.ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர்
6. The first India Africa Defence Ministers Conclave was held in
A. Kanpur
B.Agra
C. Lucknow
D.Ayodhya
இந்திய, ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் முதலாவது உச்சிமாநாடு 2020 எங்கு நடைபெற்றது?
A. கான்பூர்
B. ஆக்ரா
C. லக்னோ
D. அயோத்தி
7.Who was given the Mahakavi Bharathi Award in 2021?
A. Baskaran
B. Balachandran
C. Palani Kumar
D. Venkatachalapathy
2021 இல் மகாகவி பாரதி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A. பாஸ்கரன்
B. பாலச்சந்திரன்
C.பழனி குமார்
D. வெங்கடாசலபதி
8.‘Lucknow Declaration’ was adopted after the conclusion of
A. UNFCCC 26
B. UNFCCC 27
C. IADMC 2020
D. CAFMD 2020
‘லக்னோ பிரகடனம்’ கீழ்கண்ட எந்த நிகழ்வில் நிறைவேற்றப்பட்டது?
A. UNFCCC 26
B. UNFCCC 27
C. IADMC 2020
D. CAFMD 2020