TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 16th August 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC August Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date : 16-08-2021
Tamil Nadu
-
Hoisting the Tricolour for the first time at the ramparts of Fort St George on the occasion of 75th Independence day celebrations, Chief Minister MK Stalin on August 15 announced that the State government would release a complete document on the contribution of Tamil Nadu in the country’s freedom struggle. The document will be released both in Tamil and English.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் ஆகஸ்டு 15, 2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக்கொடியேற்றினார். இதையடுத்து, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
The Chief Minister also unveiled the Commemorative Pillar erected near Napier bridge in Chennai to commemorate the platinum jubilees of the country’s Independence.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் சென்னை காமராஜர் சாலை – சிவானந்தா சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 59 அடி உயர சுதந்திர தின வைரவிழா நினைவுத் தூணை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1.94 கோடி செலவில் தொடங்கப்பட்ட நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் பத்து நாட்களில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
The Chief Minister said that the Gandhi Memorial Museum in Madurai would be renovated at a cost of ₹6 crore to attract members of the public and those belonging to the younger generation.
மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
The Chief Minister announced that the monthly pension for freedom fighters would be increased from Rs.17,000 to Rs.18,000 while their family pension would be hiked from Rs.8,500 to Rs.9,000.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 17,000 ரூபாயில் இருந்து 18,000 ஆக உயர்த்தப்படும். அவர்களின் குடும்ப ஓய்வூதியமும் 8,500 ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.
-
Chief Minister M.K. Stalin presented the Kalpana Chawla Award for Courage and Daring Enterprise to P. Shanmuga Priya, posthumously, at the Independence Day celebrations held at Fort St. George on August 15, 2021. Shanmuga Priya was a medical officer at the Anuppanadi Primary Health Centre in Madurai.
மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியா அவர்களுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.
-
The Chief Minister presented the Dr.A.P.J. Abdul Kalam Award to M.Lakshmanan, Professor of Eminence, Bharathidasan University, a specialist in non-linear dynamics in theoretical physics.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது, பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் முனைவர் மு.லட்சுமணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
The Chief Minister presented the first Thagaisal Thamizhar Award to veteran Communist leader N. Sankaraiah. He visited Mr. Sankaraiah at his residence and presented the award and a cheque for ₹10 lakh.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை, அவரது வீட்டுக்கே நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி கவுரவித்தார். விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
-
K. Narayanasamy, Director, Government Corona Hospital, Guindy, was honoured with the Chief Minister’s Best Practices Award for his efforts to restructure the building of the National Institute of Ageing on the King Institute campus into a dedicated COVID-19 hospital.
கிண்டி கொரோனா மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் நாராயணசாமி அவர்களுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
-
Holy Cross Service Society, Tiruchi; P. Padmapriya, Medical Officer, Salem; social worker Maria Aloysis Novamoney, Nagercoil; We are Your Voice, Chennai; and Erode Central Cooperative Bank were honoured for exemplary service to the differently abled.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருது –
-
திருச்சியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி,
-
சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா,
-
திருநெல்வேலியைச் சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி,
-
சென்னை வி ஆர் யுவர் வாய்ஸ்,
-
ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி
ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
The Avvaiyar Award was conferred on Santhi Duraisamy, Sakthi Devi CharitableTrust, Erode.
சமூக நலத்திற்காக மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான ஔவையார் விருது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி துரைசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
The Best Third Gender Award was conferred on Grace Banu, Thoothukudi, for services to the welfare of society.
சிறந்த மூன்றாம் பாலினர் விருது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
Thanjavur won the Best Corporation Award. Udhagamandalam won the prize for the best municipality. Kallakudi in Trichy won the prize for the best town panchayat.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது, உதகை மண்டலத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருது, திருச்சியில் உள்ள கல்லக்குடிக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
Who unveiled the Commemorative Pillar for India’s 75th Independence Day in Chennai ?
-
Banwarilal Purohit
-
M.K. Stalin
-
M.R.K. Panneerselvam
-
Thangam Thennarasu
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கான நினைவுத்தூண் சென்னையில் யாரால் திறந்து வைக்கப்பட்டது?
-
பன்வாரிலால் புரோஹித்
-
மு.க. ஸ்டாலின்
-
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
-
தங்கம் தென்னரசு
-
Who hosted the national flag at Fort St George on the occasion of Independence Day?
-
Banwarilal Purohit
-
M.K. Stalin
-
M.R.K. Panneerselvam
-
Thangam Thennarasu
சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியது யார்?
-
பன்வாரிலால் புரோஹித்
-
மு.க. ஸ்டாலின்
-
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
-
தங்கம் தென்னரசு
-
The Chief Minister has announced that the Gandhi Memorial Museum in Madurai would be renovated at a cost of
-
4 crore rupees
-
5 crore rupees
-
6 crore rupees
-
7 crore rupees
எவ்வளவு ரூபாய் செலவில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்?
-
4 கோடி ரூபாய்
-
5 கோடி ரூபாய்
-
6 கோடி ரூபாய்
-
7 கோடி ரூபாய்
-
Who has been conferred Dr.A.P.J. Abdul Kalam Award by the Tamil Nadu government?
-
M.Lakshmanan
-
Santhi Duraisamy
-
P. Padmapriya
-
P. Shanmuga Priya
சுதந்திர தின விழாவில் Dr.A.P.J. அப்துல் கலாம் விருது தமிழக அரசால் யாருக்கு வழங்கப்பட்டது?
-
லட்சுமணன்
-
சாந்தி துரைசாமி
-
பத்மப்ரியா
-
சண்முகப்பிரியா
-
What is the revised monthly pension for the freedom fighters announced by the Chief Minister of Tamil Nadu?
-
17,000 rupees
-
18,000 rupees
-
19,000 rupees
-
20,000 rupees
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி எவ்வளவு ரூபாயாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்?
-
17,000 ரூபாய்
-
18,000 ரூபாய்
-
19,000 ரூபாய்
-
20,000 ரூபாய்
-
Who was honoured for exemplary service to the differently abled?
-
M.Lakshmanan
-
Santhi Duraisamy
-
P. Padmapriya
-
P. Shanmuga Priya
சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்மாதிரியான சேவைக்காக யார் கௌரவிக்கப்பட்டனர்?
-
லட்சுமணன்
-
சாந்தி துரைசாமி
-
பத்மப்ரியா
-
சண்முகப்பிரியா
-
Who has been conferred Best Third Gender Award by the Tamil Nadu government?
-
Grace Banu
-
Santhi Duraisamy
-
P. Padmapriya
-
P. Shanmuga Priya
சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசால் சிறந்த மூன்றாம் பாலினர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
-
கிரேஸ் பானு
-
சாந்தி துரைசாமி
-
பத்மப்ரியா
-
சண்முகப்பிரியா
-
Who has been conferred Avvaiyar Award by the Tamil Nadu government?
-
Grace Banu
-
Santhi Duraisamy
-
P. Padmapriya
-
P. Shanmuga Priya
சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசால் அவ்வையார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
-
கிரேஸ் பானு
-
சாந்தி துரைசாமி
-
பத்மப்ரியா
-
சண்முக பிரியா
-
Which municipal corporation has won the Best Corporation Award?
-
Nagercoil
-
Thanjavur
-
Salem
-
Avadi
சுதந்திர தின விழாவில் எந்த மாநகராட்சி சிறந்த மாநகராட்சி விருதை வென்றுள்ளது?
-
நாகர்கோவில்
-
தஞ்சாவூர்
-
சேலம்
-
ஆவடி
-
Which town panchayat has won the prize for the best town panchayat?
-
Vadalur
-
Bhuvanagiri
-
Orathanadu
-
Kallakudi
சுதந்திர தின விழாவில் சிறந்த பேரூராட்சிக்கான பரிசை எந்த பேரூராட்சி வென்றுள்ளது?
-
வடலூர்
-
புவனகிரி
-
ஒரத்தநாடு
-
கல்லக்குடி
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
B |
B |
C |
A |
B |
C |
A |
B |
B |
D |
DOWNLOAD Current affairs -16 August- 2021 PDF
JULY MONTH FULL CURRENT AFFAIR PDF