TNPSC CURRENT AFFAIRS PDF –16th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 16 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Commission of Inquiry, led by retired High Court judge Aruna Jagadeesan, constituted by the State government to probe the police firing and killing of civilians protesting against Sterlite’s copper smelter in Thoothukudi in May 2018, submitted its interim report to the Chief Minister M.K. Stalin in Chennai on May 14.

தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள், மே 14 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார்.

India

2. Wadia Group-owned GoAir has been rebranded as ‘Go First’ as the airline focuses on an ultra-low-cost business model.

வாதியா குழுமத்திற்கு சொந்தமான ‘கோ ஏர்’ விமான நிறுவனம் ‘கோ ஃபர்ஸ்ட்’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறது, ஏனெனில் குறைந்த கட்டண (low-cost) விமான நிறுவனத்தில் இருந்து மிகக் குறைந்த (ultra-low-cost) கட்டண விமான நிறுவனமாக மாற இருக்கிறது.

3. According to the India Meteorological Department (IMD), the Great Depression in the Arabian Sea will intensify into a cyclone storm, Taukte, which is likely to cross the Gujarat coast between Porbandar and Naliya around May 18.

அரேபிய கடல் பகுதியில் அதி தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயல், மே 18ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

4. On the occasion of 14th World Agri-tourism day on 16th May, the Department of Tourism, Government of Maharashtra organized an International Conference on Agri Tourism on 15th-16th of May 2021.

14 ஆம் உலக வேளாண் சுற்றுலா தினத்தை (மே 16 ஆம் தேதி) முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச வேளாண் சுற்றுலா மாநாடு மே 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட்டது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

5. China became the world’s first country to ban all synthetic cannabinoid substances.

அனைத்து செயற்கை கன்னாபினாய்டு பொருட்களையும் தடைசெய்த உலகின் முதல் நாடாக சீனா ஆனது.

6. The United Nations-designated International Day of Families is marked every year on May 15. This year’s International Day of Families has celebrated under the theme – ‘Families and New Technologies’.

ஐக்கிய நாடுகள் சபையால் குறிக்கப்பட்ட சர்வதேச குடும்பங்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச குடும்பங்கள் தினம் – ‘குடும்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்’ என்ற மையப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

7. The UN Security Council will hold a virtual public meeting on the Israeli-Palestinian conflict on May 16. It is an emergency session on the situation in Israel and in and in Gaza amid an escalation of violence between the two sides.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான காசா பதற்றத்தை தணிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மே 16 அன்று மெய்நிகர் முறையில் கூடி, விவாதிக்க உள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the head of the Inquiry Commission constituted to probe the Thoothukudi police firing?

Kulasekaran

Kalaiyarasan

Aruna Jagadeesan

Jayashree Raghunandan

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார்?

குலசேகரன்

கலையரசன்

அருணா ஜெகதீசன்

ஜெயஸ்ரீ ரகுநந்தன்

2. Which Indian airline has recently adopted an ultra-low-cost business model?

Indigo

Air India

Vistara

Go First

எந்த இந்திய விமான நிறுவனம் சமீபத்தில் மிகக் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மாறியது?

இண்டிகோ

ஏர் இந்தியா

விஸ்டாரா

கோ ஃபர்ஸ்ட்

3. The World Agri-tourism day is observed every year on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

ஒவ்வொரு ஆண்டும் உலக வேளாண் சுற்றுலா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

4. The International Day of Families is observed every year on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குடும்பங்கள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

5. Which state recently organised the International Conference on Agri Tourism?

Kerala

Tamil Nadu

Assam

Maharashtra

சர்வதேச வேளாண் சுற்றுலா மாநாட்டை சமீபத்தில் எந்த மாநிலம் நடத்தியது?

கேரளா

தமிழ்நாடு

அசாம்

மகாராஷ்டிரா

6. Which is the first country to ban all synthetic cannabinoid substances?

Israel

India

Palestine

China

அனைத்து செயற்கை கன்னாபினாய்டு பொருட்களையும் தடை செய்த முதல் நாடு எது?

இஸ்ரேல்

இந்தியா

பாலஸ்தீனம்

சீனா

7. Gaza is located in

Israel

India

Palestine

China

காசா எங்கு அமைந்துள்ளது?

இஸ்ரேல்

இந்தியா

பாலஸ்தீனம்

சீனா

8. The cyclone Tauktae is the Great Depression formed in

Bay of Bengal

Pacific Ocean

Arabian Sea

None of the above

டவ்தே தீவிர சூறாவளி புயல் எங்கு உருவாகியது?

வங்காள விரிகுடா

பசிபிக் பெருங்கடல்

அரேபிய கடல்

மேற்கூறிய எதுவும் இல்லை

 

 

           

DOWNLOAD  Current affairs -16 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: