TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The Union Minister of Power and New & Renewable Energy R.K. Singh inaugurated the conference organised by the Bureau of Energy Efficiency (BEE). It is titled as ”Aiming for Sustainable Habitat: New Initiatives in Building Energy Efficiency 2021”.
எரிசக்தி திறன் பணியகம் (BEE) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் திறந்து வைத்தார். அந்த மாநாடு “நிலையான வாழ்விடத்திற்கான நோக்கம்: ஆற்றல் திறன் 2021 ஐ உருவாக்குவதில் புதிய முயற்சிகள்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2.The Union Education Minister Dharmendra Pradhan and the Tribal Affairs Minister Arjun Munda jointly launched the ‘School Innovation Ambassador Training Program’ for 50,000 School Teachers on 16th July 2021. The program has been designed by Innovation Cell of the Ministry of Education and AICTE for School Teachers based on its “Innovation Ambassador Training Program for Higher Educational Institution’s faculty members”.
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் இணைந்து 50,000 ஆசிரியர்களுக்கான ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ ஜூலை 16, 2021 அன்று துவக்கி வைக்கவுள்ளனர். கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், ‘உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கான புதுமை தூதர் பயிற்சி திட்டத்தின்’ அடிப்படையிலானது ஆகும்.
3.The National Commission for Women (NCW) has signed an MoU with Bureau of Police Research and Development (BPR&D) for Gender Sensitization Training Programme for Police Personnel across the country.
நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி அளிப்பதற்காக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தேசிய மகளிர் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது.
4.An MoU was signed between Jamnagar based Institute of Teaching and Research in Ayurveda (ITRA) under Ministry of Ayush and the Government of Gujarat on 15th July 2021. Through this MoU all the institutions functioning in the Ayurveda campus in Jamnagar have been brought under the umbrella of ITRA, the only institution under the Ministry of Ayush that has been accorded the status of Institute of National Importance (INI).
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், குஜராத் மாநில அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூலை 15 அன்று கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜாம்நகர் ஆயுர்வேத வளாகத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
5.NTPC Group companies under the Ministry of Power have achieved over 100 Billion Units (BU) of cumulative generation in the current financial year, reinforcing the group’s commitment towards excellence in operation. Last year the group generation had crossed 100 BU on 7th August 2020, indicating improved performance and an increase in demand for power in the current year.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழக (என்டிபிசி) குழுமத்தின் நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் அலகுகளுக்கும் அதிகமான எரிசக்தியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்தக் குழுமம் 100 பில்லியன் அலகுகள் என்ற இலக்கை கடந்தது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் எரிசக்தியின் தேவை அதிகரித்திருப்பதும், செயல்திறன் மேம்பட்டு இருப்பதும் தெரியவருகிறது.
International
6.15th July is marked as World Youth Skills Day. It was designated by the United Nations General Assembly (UNGA) in 2014. The theme for 2021 is ‘Reimagining Youth Skills Post-Pandemic’.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 உலக இளைஞர் திறன் தினமாக குறிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ‘பெருந்தொற்றுக்கு பின் இளைஞர் திறன்களை மறுவடிவமைத்தல்’ ஆகும்.
7.World plastic surgery day is observed on July 15 every year.
உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
8.The World Day for International Justice is celebrated globally on July 17. The theme for 2021 is “A Call for Social Justice in the Digital Economy.”
உலக நீதி தினம் ஜூலை 17 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் கருப்பொருள் “டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதிக்கான அழைப்பு” ஆகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.With which organisation, the Bureau of Police Research and Development has signed an MoU for Gender Sensitization Training Programme for Police Personnel?
A.NHRC
B.NCW
C.NCPCR
D.NCPWD
காவல்துறை பணியாளர்களுக்கான பாலின உணர்திறன் பயிற்சி திட்டத்திற்காக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?
A.NHRC
B.NCW
C.NCPCR
D.NCPWD
2.Institute of Teaching and Research in Ayurveda (ITRA) is located in
A.Ramnagar
B.Jamnagar
C.Srinagar
D.Bilaspur
ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ITRA) எங்கு அமைந்துள்ளது?
A.ராம்நகர்
B.ஜாம்நகர்
C.ஸ்ரீநகர்
D.பிலாஸ்பூர்
3.‘School Innovation Ambassador Training Program’ was launched by
A.Arjun Munda
B.Dharmendra Pradhan
C.Both 1 and 2 are incorrect
D.Both 1 and 2 are correct
‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டம்’ யாரால் தொடங்கப்பட்டது?
A.அர்ஜுன் முண்டா
B.தர்மேந்திர பிரதான்
C.1 மற்றும் 2 இரண்டும் தவறானவை
D.1 மற்றும் 2 இரண்டும் சரியானவை
4.World plastic surgery day is observed on
A.July 15
B.July 16
C.July 17
D.July 18
உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூலை 15
B.ஜூலை 16
C.ஜூலை 17
D.ஜூலை 18
5.Institute of Teaching and Research in Ayurveda (ITRA) is under
A.Ministry of Science and Technology
B.Ministry of Earth Science
C.Ministry of Health
D.Ministry of Ayush
ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ITRA) எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளது?
A.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
B.பூமி அறிவியல் அமைச்சகம்
C.சுகாதார அமைச்சகம்
D.ஆயுஷ் அமைச்சகம்
6.The World Day for International Justice is celebrated globally on
A.July 15
B.July 16
C.July 17
D.July 18
உலக நீதி தினம் உலகளவில் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
A.ஜூலை 15
B.ஜூலை 16
C.ஜூலை 17
D.ஜூலை 18
7.World Youth Skills Day is observed every year on
A.July 15
B.July 16
C.July 17
D.July 18
ஒவ்வொரு ஆண்டும் உலக இளைஞர் திறன் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூலை 15
B.ஜூலை 16
C.ஜூலை 17
D.ஜூலை 18
DOWNLOAD Current affairs -17 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF