TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –18 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC January Daily Current Affairs 2021
Tamil Nadu
1.The School Education Department of Tamil Nadu government has announced a reduced syllabus for Classes 10 and 12 for the current academic year. In most subjects, there is no deletion of chapters. Instead, some topics in each unit have been cut out.
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 40% வரை குறைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பெரும்பாலான பாடங்களில், அத்தியாயங்களை நீக்காமல் அதற்கு பதிலாக, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில தலைப்புகள் வெட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.The Indo Cine Appreciation Foundation, in association with the Culture House of the Islamic Republic of Iran, Mumbai, is organizing an Iranian Film Festival from January 18 to 20 and on January 28 and 29 in Chennai.
மும்பையில் உள்ள இஸ்லாமிய குடியரசின் கலாச்சார மாளிகையுடன் இணைந்து இந்தோ சினி பாராட்டு அறக்கட்டளை நடத்தும் ஈரானிய திரைப்பட விழா ஜனவரி 18 முதல் 20 வரை மற்றும் ஜனவரி 28 & 29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
India
3.The Prime Minister Narendra Modi on January 17 flagged off eight trains connecting major destinations in various states of the country with the Statue of Unity in Gurjarat’s Kevadiya, via video-conferencing. The eight trains will connect Kevadiya to Varanasi, Dadar, Ahmedabad, Delhi’s Nizamuddin, Mumbai, Madhya Pradesh’s Rewa, Chennai and Uttar Pradesh’s Pratapnagar.
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி ஜனவரி 17 அன்று தொடங்கி வைத்தார். இந்த எட்டு புதிய ரயில்கள் வாரணாசி, தாதர், அகமதாபாத், டெல்லியின் நிஜாமுதீன், மும்பை, மத்திய பிரதேசத்தின் ரேவா, சென்னை மற்றும் உத்தரபிரதேசத்தின் பிரதாப்நகர் ஆகிய இடங்களை கெவடியாவுடன் இணைக்கின்றன.
4.The country’s first Labour Movement Museum, showcasing the history of world labour movement, would be launched in Kerala’s houseboat tourism hub, Alappuzha.
உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றைக் குறிக்கும் வகையில் நாட்டின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகத்தை கேரள அரசு படகு சுற்றுலா தளமான அலப்புழாவில் திறக்கவுள்ளது.
5.The Ministry of Railways has approved a new iron-ore policy governing the allocation of rakes and transportation of iron-ore. This new policy has been named as Iron-ore Policy 2021 and shall come into effect from February 10, 2021.
இரும்புத் தாதுப் போக்குவரத்தை நிர்வகிக்கும் புதிய இரும்புத் தாது கொள்கைக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கொள்கை ‘இரும்பு தாது கொள்கை 2021’ என பெயரிடப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 10, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
International
6.The U.S. President-elect Joe Biden has nominated at least 20 Indian Americans, including 13 women, to key positions in his incoming administration, a record for the small ethnic community that constitutes one percent of America’s population.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் 13 பெண்கள் உட்பட இதுவரை 20 இந்திய வம்சாவளியினரை முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதமே உள்ள இந்திய சமூகத்துக்கு இத்தனை பிரதிநிதித்துவம் தரப்படுவது சாதனையாகக் கருதப்படுகிறது
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The 2021 Iranian Film Festival in Chennai is organized by
Directorate of film festivals
Tamil Nadu government
Indo Cine Appreciation Foundation
None of the above
சென்னையில் நடைபெறவுள்ள 2021 ஈரானிய திரைப்பட விழா யாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
திரைப்பட விழாக்களின் இயக்குநரகம்
தமிழக அரசு
இந்தோ சினி பாராட்டு அறக்கட்டளை
மேற்கூறிய எதுவும் இல்லை
2.The Prime Minister has recently flagged off eight trains to connect different destinations with
Rajkot
Kevadia
Vadodara
Ahmedabad
எந்த இடத்தை நாட்டின் பல்வேறு இடங்களுடன் இணைக்க பிரதமர் சமீபத்தில் எட்டு ரயில்களை தொடக்கி வைத்தார்?
ராஜ்கோட்
கெவாடியா
வதோதரா
அகமதாபாத்
3. A new iron-ore policy, 2021 was recently approved by
1)Ministry of Railways
2)Ministry of Commerce and Industry
3)Ministry of Corporate Affairs
4)Ministry of Power
புதிய இரும்பு-தாது கொள்கை, 2021 சமீபத்தில் எந்த அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது?
ரயில்வே அமைச்சகம்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கார்ப்பரேட் விவகார அமைச்சகம்
மின் அமைச்சகம்
4.The country’s first Labour Movement Museum would be launched in
Kannur
Salem
Alappuzha
Kevadia
நாட்டின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம் எங்கு தொடங்கப்படவுள்ளது?
கண்ணூர்
சேலம்
ஆலப்புழா
கெவாடியா
5.The Statue of Unity in Gujarat is located in
Rajkot
Kevadia
Vadodara
Ahmedabad
குஜராத்தில் ஒற்றுமை சிலை எங்கு அமைந்துள்ளது?
ராஜ்கோட்
கெவாடியா
வதோதரா
அகமதாபாத்
6.The Statue of Unity is a statue of
Jawaharlal Nehru
Mahatma Gandhi
Vallabhai Patel
Subhash Chandra Bose
குஜராத்தில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை யாருடைய சிலை?
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
வல்லபாய் படேல்
சுபாஷ் சந்திரபோஸ்
7.The world’s tallest statue is
Statue of Equality
Statue of Unity
Spring Temple Buddha
Statue of Gautama Buddha
உலகின் மிக உயரமான சிலை எது?
சமத்துவ சிலை
ஒற்றுமை சிலை
வசந்த கோயில் புத்தர்
கௌதம புத்தரின் சிலை
DOWNLOAD Current affairs -18 JAN- 2020 PDF
1,293 total views, 5 views today