TNPSC CURRENT AFFAIRS PDF –18th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The first batch of the indigenously produced 12.7 mm Stabilised Remote Control Gun (SRCG) system was handed over to the Navy and the Coast Guard by the Ordnance Factory, Tiruchi (OFT), on July 17, 2021. OFT is the nodal unit for indigenous production of the SRCG system. The systems are manufactured and supplied to the Navy and the Coast Guard through transfer of technology from Elbit Systems, Israel, in various phases.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12.7 மி.மீ  நிலையான தொலைநிலை கட்டுப்பாட்டு துப்பாக்கி  (SRCG) ஜூலை 17, 2021 அன்று கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பல்வேறு ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் புதிய ரக SRCG துப்பாக்கி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இத்துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. SRCG ரக துப்பாக்கியின் உள்நாட்டு உற்பத்திக்கான நோடல் தொழிற்சாலை திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (OFT) ஆகும்.

India

2.An Artificial Intelligence-powered Covid-19 test ‘COVIHOME’ that can be performed at an affordable cost at home has been developed by researchers at the Indian Institute of Technology-Hyderabad (IITH) led by Prof. Shiv Govind Singh.

பேராசிரியர் சிவ் கோவிந்த் சிங் தலைமையிலான ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IITH) ஆராய்ச்சியாளர்கள் வீட்டிலேயே மலிவு விலையில் சோதனை செய்யக்கூடிய ‘கோவிஹோம்’ என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கோவிட் -19 சோதனைமுறையை உருவாக்கியுள்ளனர்.

3.The Chief Justice of India N.V. Ramana launched a new scheme called ‘FASTER’ (Fast and Secure Transmission of Electronic Records) by which the court would instantly, directly, securely and electronically transmit bail and other orders to the jail authorities, district courts and the High Courts.

இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் ‘ஃபாஸ்டர்’ (மின்னணு பதிவுகளின் வேகமான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம்) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நீதிமன்றம் உடனடியாக, நேரடியாக, பாதுகாப்பாக மற்றும் மின்னணு முறையில் ஜாமீன் மற்றும் பிற உத்தரவுகளை சிறை அதிகாரிகள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பலாம்.

4.Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY-U) has launched two unique initiatives, Khushiyon Ka Aashiyana – Short Film contest 2021 and Awas Par Samvaad – series of 75 seminars and workshops. The declaration of the two initiatives by the Ministry of Housing and Urban Affairs (MoHUA) was made on the occasion of the sixth anniversary of PMAY-U on June 25, 2021.

உலகின் மிகப் பெரிய வீட்டு வசதி திட்டமான, பிரதமரின் வீட்டு வசதி திட்டம்- நகர்ப்புறம், இரு தனித்துவமான முயற்சிகளை தொடங்கியுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்ல, மகிழ்ச்சி இல்லம் (Khushiyon Ka Aashiyana) என்ற பெயரில் குறும்பட போட்டியும், வீட்டில் உரையாடல் (Awas Par Samvaad) என்ற தலைப்பில் 75 கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் 6ம் ஆண்டு விழா கடந்த ஜூன் 25ம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்த இரு நடவடிக்கைகளின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

5.The nomenclature “Common High Court of UT of Jammu and Kashmir and UT of Ladakh” has been changed to “High Court of Jammu and Kashmir and Ladakh”, according to an order.

“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் பொதுவான உயர் நீதிமன்றம்” என்ற பெயர் “ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம்” என்று மாற்றப்பட்டுள்ளது.

International 

6.The U.S., Afghanistan, Pakistan and Uzbekistan have agreed in principle to establish a new quadrilateral diplomatic platform ‘Quad Group’ focused on enhancing regional connectivity, the Biden administration has said.

பிராந்திய நாடுகளின் இணைப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து புதிய ‘குவாட் கூட்டமைப்பு’ ஒன்றை நிறுவ கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த குவாட் என்ற வார்த்தைக்கு 4 தரப்பு பாதுகாப்பு என்று பொருள் ஆகும்.

7.Pulitzer Prize-winning Indian photojournalist Danish Siddiqui was killed on July 16 while covering a clash between Afghan security forces and Taliban fighters in Kandahar province of Afghanistan.

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் ராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையிலான மோதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் ஜூலை 16 அன்று மரணம் அடைந்துள்ளார். மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக், கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர். இவர், ராய்ட்டர்ஸ் என்னும் பத்திரிக்கை நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.

Sports

8.An 88 member Indian contingent including 54 athletes were given a formal send-off for Tokyo Olympics 2021 at Indira Gandhi International Airport. The athletes were addressed and sent their best wishes by the Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur and Minister of State for Youth Affairs and Sports Nisith Pramanik.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 88 பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் முதல் அணியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் நிசித் பிரமானிக் ஆகியோர் டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். இதில் 54 பேர் தடகள வீரர்-வீராங்கனைகள் ஆவர்

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which is the nodal unit for indigenous production of the SRCG system?

A.OFP

B.OFC

C.OFT

D.OFK

SRCG ரக துப்பாக்கியின் உள்நாட்டு உற்பத்திக்கான நோடல் தொழிற்சாலை எது?

A.OFP

B.OFC

C.OFT

D.OFK

2.The Covid-19 test ‘COVIHOME’ has been developed by researchers at

A.IITM

B.IITD

C.IITK

D.IITH

‘கோவிஹோம்’ என்ற கோவிட் -19 சோதனை எந்த நிறுவன ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது?

A.IITM

B.IITD

C.IITK

D.IITH

3.Which country is not a member of the new QUAD group?

A.Pakistan

B.USA

C.Uzbekistan

D.Tajikistan

புதிய QUAD கூட்டமைப்பில் எந்த நாடு இல்லை?

A.பாகிஸ்தான்

B.அமெரிக்கா

C.உஸ்பெகிஸ்தான்

D.தஜிகிஸ்தான்

4.Who launched the scheme called ‘FASTER’?

A.CEC

B.CIC

C.PM

D.CJI

‘ஃபாஸ்டர்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தது யார்?

A.CEC

B.CIC

C.PM

D.CJI

5.Who is the Indian photojournalist killed while covering a clash between Afghan security forces and Taliban fighters in Afghanistan?

A.Barkha Dutt

B.Ravish Kumar

C.Arnab Goswami

D.Danish Siddiqui

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையிலான மோதலில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் யார்?

A.பார்கா தத்

B.ரவீஷ்குமார்

C.அர்னாப் கோஸ்வாமி

D.தனிஷ் சித்திக்

6.Khushiyon Ka Aashiyana contest was launched by

A.Ministry of Education

B.Ministry of Environment

C.Ministry of Health

D.Ministry of Housing

‘குஷியோன் கா ஆஷியானா’ என்கிற போட்டி எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

A.கல்வி அமைச்சகம்

B.சுற்றுச்சூழல் அமைச்சகம்

C.சுகாதார அமைச்சகம்

D.வீட்டுவசதி அமைச்சகம்

7.Stabilised Remote Control Gun (SRCG) system is manufactured through technology of transfer from

A.Russia

B.Japan

C.France

D.Israel

நிலையான தொலைநிலை கட்டுப்பாட்டு துப்பாக்கி (SRCG) எந்த நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது?

A.ரஷ்யா

B.ஜப்பான்

C.பிரான்ஸ்

D.இஸ்ரேல்

DOWNLOAD  Current affairs -18 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: