TNPSC CURRENT AFFAIRS PDF –1st August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 1 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Tamil Nadu Chief Minister MK Stalin on July 30, 2021 participated in the celebrations marking the “50th anniversary of the Indian Armed Forces’ victory in the 1971 Indo-Pak War” (Swarnim Vijay Varsh) and paid rich tributes to the 1971 war heroes.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 30, 2021 அன்று “இந்திய படைகளின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்” (ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ்) விழாவில் பங்கேற்று, 1971-ம் ஆண்டு போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

2.Environment Minister Siva V Meyyanathan inaugurated archaeological excavation by Tamil Nadu Open University, at Porpanaikottai, Pudukkottai, on July 30, 2021. E Iniyan, Assistant Professor of Archaeology, will be carrying out the excavations with the permission of Archaeological Survey of India.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஜூலை 30 அன்று தொடங்கி வைத்தார். கோட்டை, கொத்தளங்களோடு உள்ள பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

3.Chief Minister MK Stalin launched the week-long COVID-19 awareness campaign drive which included the release of a short film, a signature campaign, and an exhibition. The Chief Minister inaugurated an exhibition on prevention and control measures at the Kalaivanar Arangam in Chennai on July 31, 2021. He also launched a series of awareness videos to be screened in public places. He also rolled out a #MASKUpTN hashtag towards creating awareness on the pandemic among youth. The Chief Minister also led the pledge for healthcare workers to follow safety measures to prevent the third wave in Tamil Nadu.

கொரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சார தொடர் நிகழ்வை ஜூலை 31 அன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினைத் தொடங்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், SHARECHAT செயலியினையும் கொரோனா பேட்ஜினையும் வெளியிட்டார். அதன்பின்பு, கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, LED பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

India

4.“Muslim Women Rights Day” is observed across the country on 1st August 2021, to celebrate the enactment of the law against Triple Talaq on August 1, 2019.

ஆகஸ்ட் 1, 2019 அன்று முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 1, 2021 அன்று “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்” கடைபிடிக்கப்படுகிறது.

5.Minister of State for Culture Meenakashi Lekhi participated in the G20 Culture Ministers’ Meeting on 30 July, 2021 hosted by Italy during their ongoing Presidency of G20 in 2021.

ஜூலை 30, 2021 அன்று இத்தாலி நடத்தி தலைமை வகித்த ஜி20 நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், ஒன்றிய கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி அவர்கள் பங்கேற்றார்.

6.Prime Minister Narendra Modi addressed the passing out IPS probationers of 72nd batch at Sardar Vallabhbhai Patel National Police Academy in Hyderabad via video conferencing.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

7.Lieutenant General Tarun Kumar Chawla will assume the appointment of the Director General of Artillery on 01 August 2021. He takes over the appointment from Lieutenant General K Ravi Prasad, who superannuated on 31 July 2021.

பீரங்கிப் படை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் தருண்குமார் சாவ்லா, ஆகஸ்ட் 1, 2021 அன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஜூலை 31 அன்று ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கே ரவி பிரசாத்திடமிருந்து அவர் இந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்கிறார்.

8.The Director of CSIR-Central Mechanical Engineering Research Institute (Durgapur, West Bengal) Professor Dr. Harish Hirani laid the foundation stone of “Retractable Roof Polyhouse Technology” for horticultural crops at CMERI Extension centre, Ludhiana in Punjab.

பஞ்சாப்பின் லூதியானாவில் அமைந்துள்ள சிஎம்இஆர்ஐ விரிவாக்க மையத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு கூரையை தானியங்கி முறையில் இழுக்கக்கூடிய புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பத்தை, மேற்கு வங்கம் துர்காபூரில் உள்ள சிஎஸ்ஐஆர்- மத்திய மெக்கானிக்கல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஹரீஷ் ஹிரானி அவர்கள் தொடங்கி வைத்தார்.

International 

9.India is taking over the Presidency of the United Nations Security Council (UNSC) on August 1 and is set to host signature events in three major areas of maritime security, peacekeeping and counterterrorism during the month. India’s two-year tenure as a non-permanent member of the Security Council began on January 1, 2021.

ஆகஸ்ட் 1-ம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) தலைமையாக இந்தியா பொறுப்பேற்கிறது. இந்த மாதத்தில் பாதுகாப்பு சபை கடல் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் இரண்டு ஆண்டு காலம் ஜனவரி 1, 2021 அன்று தொடங்கியது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who inaugurated the archaeological excavation at Porpanaikottai?

A.E Iniyan

B.V Meyyanathan

C.Meenakshi Lekhi

D.Tarun Kumar

பொற்பனைக்கோட்டையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை துவக்கியது யார்?

A.இனியன்

B.வி மெய்யநாதன்

C.மீனாட்சி லேகி

D.தருண் குமார்

2.Who participated in the G20 Culture Ministers’ Meeting on behalf of India?

A.E Iniyan

B.V Meyyanathan

C.Meenakshi Lekhi

D.Tarun Kumar

இந்தியாவின் சார்பாக ஜி20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் யார் பங்கேற்றார்?

A.இனியன்

B.வி மெய்யநாதன்

C.மீனாட்சி லேகி

D.தருண் குமார்

3.Who will be carrying out the archaeological excavation at Porpanaikottai?

A.E Iniyan

B.V Meyyanathan

C.Meenakshi Lekhi

D.Tarun Kumar

பொற்பனைக்கோட்டையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை யார் மேற்கொள்கிறார்?

A.இனியன்

B.வி மெய்யநாதன்

C.மீனாட்சி லேகி

D.தருண் குமார்

4.When is Muslim Women Rights Day observed?

A.August 1

B.August 2

C.August 3

D.August 4

இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A.ஆகஸ்ட் 1

B.ஆகஸ்ட் 2

C.ஆகஸ்ட் 3

D.ஆகஸ்ட் 4

5.Where is Sardar Vallabhbhai Patel National Police Academy located?

A.Ludhiana

B.Durgapur

C.Chennai

D.Hyderabad

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி எங்கே உள்ளது?

A.லூதியானா

B.துர்காபூர்

C.சென்னை

D.ஐதராபாத்

6.Who has been appointed as the Director General of Artillery?

A.E Iniyan

B.V Meyyanathan

C.Meenakshi Lekhi

D.Tarun Kumar

பீரங்கி படையின் தலைமை இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A.இனியன்

B.வி மெய்யநாதன்

C.மீனாட்சி லேகி

D.தருண் குமார்

7.When did India take over the Presidency of the United Nations Security Council in 2021?

A.January 1, 2021

B.March 1, 2021

C.July 1, 2021

D.August 1, 2021

2021 இல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமையை இந்தியா எப்போது ஏற்றது?

A.ஜனவரி 1, 2021

B.மார்ச் 1, 2021

C.ஜூலை 1, 2021

D.ஆகஸ்ட் 1, 2021

8.Where was Retractable Roof Polyhouse Technology recently launched?

A.Ludhiana

B.Durgapur

C.Chennai

D.Hyderabad

கூரையை தானியங்கி முறையில் இழுக்கக்கூடிய புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

A.லூதியானா

B.துர்காபூர்

C.சென்னை

D.ஐதராபாத்

9.When did India become a non-permanent member of the UN Security Council?

A.January 1, 2021

B.March 1, 2021

C.July 1, 2021

D.August 1, 2021

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா எப்போது நிரந்தரமற்ற உறுப்பினர் ஆனது?

A.ஜனவரி 1, 2021

B.மார்ச் 1, 2021

C.ஜூலை 1, 2021

D.ஆகஸ்ட் 1, 2021

DOWNLOAD  Current affairs -1 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: