TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. Tamil Nadu on April 19 became the fourth State, after Maharashtra, Kerala and Karnataka, to cross a total of one million COVID-19 cases.
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பத்து லட்சத்தை தாண்டிய மாநிலங்கள் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகும். இதில் நான்காவது மாநிலமாக தமிழ்நாடு சேர்ந்துள்ளது.
2. Sivasubramanian Ramann from Tamil Nadu has taken charge as the Chairman and Managing Director of the Small Industries Development Bank of India (SIDBI), the principal financial institution engaged in the promotion, financing and development of Micro, Small and Medium Enterprises (MSMEs). The appointment is for a period of three years from April 19.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) நிதி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள முக்கிய நிதி நிறுவனமான இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் ராமன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் ஏப்ரல் 19 முதல் மூன்று வருட காலத்திற்கு ஆகும்.
3. Researchers at the Indian Institute of Technology-Madras (IIT-M) have filed 184 patents during the year 2020, including 65 international ones.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-மெட்ராஸ் (IIT-M) ஆராய்ச்சியாளர்கள் 2020 ஆம் ஆண்டில் 184 காப்புரிமைகள் தாக்கல் செய்துள்ளனர். இதில் 65, சர்வதேச காப்புரிமைகள் ஆகும்.
India
4. The vaccination drive will be opened up for all citizens above the age of 18 from May 1, the Government of India announced on April 19. The immunisation drive is catered to only citizens aged above 45 since April 1, 2021.
கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
5. The Union Minister Piyush Goyal has launched the Startup India Seed Fund Scheme (SISFS). The Scheme was announced by the Hon’ble Prime Minister, Shri Narendra Modi on 16th January 2021 in his Grand Plenary address of ‘Prarambh: StartupIndia International Summit’, marking the five-year anniversary of the Startup India initiative.
ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதி திட்டத்தை (SISFS) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தொடங்கி வைத்தார். ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் ஐந்தாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த திட்டத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 16, 2021 ஆம் தேதி தனது ‘பிரராம்ப்: ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாடு’ உரையில் அறிவித்தார்.
6. The Department of Science and Technology recently launched the National Climate Vulnerability Assessment Report. It has identified Jharkhand, Mizoram, Orissa, Chhattisgarh, Assam, Bihar, Arunachal Pradesh, and West Bengal as states highly vulnerable to climate change.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் தேசிய காலநிலை பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட், மிசோரம், ஒரிசா, சத்தீஸ்கர், அசாம், பீகார், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
7. The Ministry of Tourism’s Dekho Apna Desh Webinar series held its 85th webinar titled “Khajuraho-Temples of Architectural Splendour” on17th April 2021.
சுற்றுலா அமைச்சகத்தின் ‘தேகோ அப்னா தேஷ்’ இணைய கருத்தரங்க தொடர் அதன் 85 வது இணைய கருத்தரங்கை “கஜுராஹோ-கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க கோயில்கள்” என்ற தலைப்பில் ஏப்ரல் 20, 2021 அன்று நடத்தியது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
8. India and Germany have signed an agreement on Technical Cooperation titled ‘Cities Combating Plastic Entering the Marine Environment’ at a virtual ceremony in New Delhi on April 19.
ஏப்ரல் 19 அன்று புது தில்லியில் நடந்த ஒரு மெய்நிகர் விழாவில் இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ‘கடல் சூழலுக்குள் நுழையும் பிளாஸ்டிக்கை தடுக்கும் நகரங்கள்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Which of the following states has crossed a total of one million COVID-19 cases?
Tamil Nadu
Maharashtra
Karnataka
All the above
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பத்து லட்சத்தை தாண்டிய மாநிலங்கள் எவை?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கர்நாடகா
மேலே உள்ள அனைத்தும் சரி
2. Who is the Chairman and Managing Director of SIDBI?
Sivasubramanian Ramann
Harsh Vardhan
Piyush Goyal
Krishnamurthy Subramanian
SIDBI இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யார்?
சிவசுப்பிரமணியன் ராமன்
ஹர்ஷ் வர்தன்
பியூஷ் கோயல்
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
3. Which ministry organises Dekho Apna Desh Webinar?
1. Ministry of Environment
2. Ministry of Tourism
3. Department of School Education
4. Department of Science and Technology
‘தேகோ அப்னா தேஷ்’ இணைய கருத்தங்கம் எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது?
சுற்றுச்சூழல் அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
பள்ளி கல்வித்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
4. National Climate Vulnerability Assessment Report was launched by
1. Ministry of Environment
2. Ministry of Tourism
3. Department of School Education
4. Department of Science and Technology
தேசிய காலநிலை பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
சுற்றுச்சூழல் அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
பள்ளி கல்வித்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
5. Startup India Seed Fund Scheme was launched by
Sivasubramanian Ramann
Harsh Vardhan
Piyush Goyal
Krishnamurthy Subramanian
ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதி திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
சிவசுப்பிரமணியன் ராமன்
ஹர்ஷ் வர்தன்
பியூஷ் கோயல்
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
6. When will COVID-19 vaccine be opened for all citizens above the age of 18 in India?
1. May 1, 2021
2. May 15, 2021
3. June 1, 2021
4. June 15, 2021
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் COVID-19 தடுப்பூசி இயக்கம் எப்போது தொடங்கப்படுகிறது?
1. மே 1, 2021
2. மே 15, 2021
3. ஜூன் 1, 2021
4. ஜூன் 15, 2021
7. Sivasubramanian Ramann belongs to
Tamil Nadu
Maharashtra
Karnataka
None of the above
சிவசுப்பிரமணியன் ராமன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கர்நாடகா
மேற்கூறிய அனைத்தும் தவறு
8. With which country, India has signed an agreement on Technical Cooperation titled ‘Cities Combating Plastic Entering the Marine Environment’?
Germany
France
Japan
Singapore
‘கடல் சூழலுக்குள் நுழையும் பிளாஸ்டிக்கை தடுக்கும் நகரங்கள்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் எந்த நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது,?
ஜெர்மனி
பிரான்ஸ்
ஜப்பான்
சிங்கப்பூர்