TNPSC CURRENT AFFAIRS PDF –20th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Veteran cine actors B. Saroja Devi and Sowcar Janaki, noted playback singers P. Susheela and Jamuna Rani and Bharatanatyam artistes Ambika Kameshwar and Parvathi Ravi Ghantasala have been named for the Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa Special Kalaimamani Award for 2019 and 2020 by the Tamil Nadu government. Noted artistes Vani Jayaram and S. Rajeswari have been named for receiving the all India award — the M.S. Subbulakshmi Award (Music) for 2019 and 2020 respectively. Artistes Alarmel Valli and Chandra Dhandayuthapani, too, are to receive the allIndia award — the Balasaraswathi Award (Dance) for 2019.

பழம்பெரும் நடிகைகள் பி.சரோஜா தேவி மற்றும் சவுகார் ஜானகி, பிரபல பின்னணி பாடகர்கள் பி.சுஷீலா மற்றும் ஜமுனா ராணி மற்றும் பரதநாட்டியம் கலைஞர்களான அம்பிகா காமேஷ்வர் மற்றும் பார்வதி ரவி கான்டசலா ஆகியோருக்கு 2019 மற்றும் ஆண்டிற்கான தமிழக அரசின் புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான எம். எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பிரபல கலைஞர்கள் வாணி ஜெயராம் மற்றும் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர்களான அலர்மேல் வள்ளி மற்றும் சந்திர தண்டாயுதபாணி ஆகியோர் 2019 ஆம் ஆண்டிற்கான பாலசரஸ்வதி விருது (நடனம்) பெற உள்ளனர்.

2.A total of 59 personalities have been named for receiving the Kalaimamani Award for 2019 and another 65 for 2020, according to a G.O. issued in this regard by theState government on February 17. The ‘Akkarai Sisters’ — S.Subhalakshmi and S. Sornalatha — Nagaswaram artist Achalpuram S. Chinnathambi, singer Jolly Abraham, actors Ramarajan, Yogi Babu and Devadarshini, cinema producer Kalaipuli S. Thanu, cine editor Antony and K.N.Ramaswamy of the Bharatiya Vidya Bhavan are among those who received the Kalaimamani Award for 2019. Actors Sivakarthikeyanand Aishwarya Rajesh, music director D. Imman and film director Gautham Vasudev Menon were among those selected for the award for 2020.

2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டிற்கான 59 நபர்கள் மற்றும் 2020 க்கு 65 பேர் உள்ளிட்ட 124 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அக்கரை சகோதரிகள்’ – எஸ்.சுபலக்ஷ்மி மற்றும் எஸ்.சொர்ணலதா – நாதஸ்வரம் கலைஞர் அச்சல்புரம் எஸ்.சின்னாதம்பி, பாடகர் ஜாலி ஆபிரகாம், நடிகர்கள் ராமராஜன், யோகி பாபு மற்றும் தேவதர்ஷினி, சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சினிமா எடிட்டர் அந்தோணி மற்றும் பாரதிய வித்யா பவனின் கே.என்.ராமசாமி ஆகியோர் 2019 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை பெற்றவர்கள் ஆகும். ஐஸ்வர்யா ராஜேஷ், இசை அமைப்பாளர் டி. இம்மான் மற்றும் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

3.The Pollachi Tamil Isai Sangam and Tamil Isai Sangam at the Raja Muthiah Mandram in Madurai will receive shields for best cultural organisations. Sabari Nadaga Kuzhu in Tiruvannamalai will receive the rolling shield for the best drama troupe.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இயங்கும் தமிழ் இசை சங்கம் மற்றும் பொள்ளாச்சி தமிழ் இசை சங்கம் சிறந்த கலாச்சார அமைப்புகளுக்கான பரிசுளைப் பெறுகின்றன. திருவண்ணாமலையில் உள்ள சபரி நாடக குழு சிறந்த நாடக குழுவினருக்கான பரிசை பெறுகிறது.

India

4.The Union Minister for Road Transport & Highways Nitin Gadkari launched the “Go Electric” Campaign on February 19, 2021 to spread awareness on the benefits of e-mobility and EV Charging Infrastructure as well as electric cooking in India.

இந்தியாவில் மின்சார சமையல், மின்னணு வாகனங்கள் மற்றும் அதன் சார்ஜிங் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பிப்ரவரி 19, 2021 அன்று “கோ எலக்ட்ரிக்” என்கிற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

5.The Yoga guru Ramdev on February 19, 2021 released a research paper by Haridwar-based Patanjali Research Institute on the “first evidence-based ayurvedic medicine” called Coronil against the coronavirus disease. Coronil has received certification from Ayush Ministry as per World Health Organization (WHO) certification scheme.

பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட “கொரோனில்” என்கிற COVID-19 க்கான மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை பிப்ரவரி 19, 2021 அன்று தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார். உலக சுகாதார அமைப்பு (WHO) சான்றிதழ் திட்டத்தின் படி ஆயுஷ் அமைச்சகம் “கொரோனில்” மருந்துக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

6.The Prime Minister Narendra Modi on February 19, 2021 inaugurated POWERGRID’s 320 kV 2000 MW Pugalur (Tamil Nadu) – Thrissur (Kerala) High Voltage Direct Current (HVDC) power transmission project.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 19, 2021 அன்று POWERGRID இன் 2000 மெகாவாட் அதிநவீன புகளூர் – திருச்சூர் உயர் மின்னழுத்த நேர் மின்சார (HVDC) பகிர்மானத் திட்டத்தை திறந்து வைத்தார்.

International

7.Indian American scientist Swati Mohan,who leads the guidance, navigation, and control operations of NASA’s Mars 2020 mission, played a pivotal role in landing the U.S. space agency’s historic Perseverance rover on the Martian surface on February 19.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் பிப்ரவரி 19 அன்று களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன் அவர்கள் உள்ளார்.

8.The 11th India-EU Macroeconomic dialogue was held on February 19, 2021 through video conferencing.

11 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார உரையாடல் பிப்ரவரி 19, 2021 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who received Balasaraswathi Award (Dance) for 2019?

Chandra Dhandayuthapani

Ambika Kameshwar

S.Subhalakshmi

Jamuna Rani

2019 ஆம் ஆண்டிற்கான பாலசரஸ்வதி விருதை (நடனம்) பெற்றவர் யார்?

சந்திர தண்டயுதபனி

அம்பிகா காமேஸ்வர்

எஸ்.சுபலக்ஷ்மி

ஜமுனா ராணி

2.Who received the best drama troupe award from Tamil Nadu government?

Pollachi Tamil Isai Sangam

Madurai Tamil Isai Sangam

Sabari Nadaga Kuzhu

Vetri Nadaga Kuzhu

தமிழக அரசிடமிருந்து சிறந்த நாடக குழு விருதைப் பெற்றவர் யார்?

பொள்ளாச்சி தமிழ் இசை சங்கம்

மதுரை தமிழ் இசை சங்கம்

சபரி நாடக குழு

வெற்றி நாடக குழு

3.How many personalities received the Kalaimamani Award for 2020?

59

65

69

75

2020 க்கான கலைமாமணி விருதை எத்தனை நபர்கள் பெற்றனர்?

59

65

69

75

4.Sabari Nadaga Kuzhu belongs to

Cuddalore

Thiruvannamalai

Kanchipuram

Sivagangai

சபரி நாடக குழு எந்த ஊரைச் சேர்ந்தது?

கடலூர்

திருவண்ணாமலை

காஞ்சிபுரம்

சிவகங்கை

5.Who launched the first evidence-based ayurvedic medicine Coronil?

Geetanjali Research Institute

Patanjali Research Institute

Indian Council of Medical Research

None of the above

ஆயுர்வேத மருந்தான கொரோனில்-ஐ சமீபத்தில் வெளியிட்டது யார்?

கீதாஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம்

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

மேற்கூறிய எதுவும் இல்லை

6.Who launched the “Go Electric” Campaign?

1. Ministry of Education

2. Ministry of Transport

3. Ministry of Environment

4. Ministry of Finance

“கோ எலக்ட்ரிக்” பிரச்சாரத்தை ஆரம்பித்தது யார்?

கல்வி அமைச்சகம்

போக்குவரத்து அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

நிதி அமைச்சகம்

7.The 11th India-EU Macroeconomic dialogue was held on

1. February 16

2. February 17

3. February 18

4. February 19

11 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார உரையாடல் என்று நடைபெற்றது?

1. பிப்ரவரி 16

2. பிப்ரவரி 17

3. பிப்ரவரி 18

4. பிப்ரவரி 19

8.Who led NASA’s Mars 2020 mission?

Kamala Harris

Swathi Mohan

Neetu Chandra

None of the above

2020 நாசாவின் செவ்வாய் கிரக மிஷனுக்கு தலைமை தாங்குவது யார்?

கமலா ஹாரிஸ்

சுவாதி மோகன்

நீது சந்திரா

மேற்கூறிய எதுவும் இல்லை

                                                    DOWNLOAD  Current affairs -20 FEB- 2021 PDF

 459 total views,  13 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: