TNPSC CURRENT AFFAIRS PDF –20th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu Chief Minister Stalin called on the President for the first time after assuming charge in May at the Rashtrapati Bhavan and invited him to several events planned in Chennai, including

A.To preside over the Centenary celebrations of the Assembly, known then as the Madras Legislative Council which was set up on January 12, 1921.

B.To unveil the portrait of former Chief Minister M Karunanidhi in the Assembly complex.

C.To lay the foundation stone for Kalaignar Memorial Library in Madurai.

D.To lay the foundation stone for Multi-speciality Hospital at Guindy in Chennai.

E.To lay the foundation stone for a Memorial Pillar on the Marina to mark the platinum jubilee of India’s independence.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள். அப்போது சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள பல நிகழ்வுகளுக்கு வந்து சிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அவை:

A.12.01.1921 அன்று தொடங்கப்பட்ட சென்னை மாகாணத்தின் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்திக்கொடுப்பதற்கு.

B.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்தை சட்டப்பேரவை வளாகத்திற்குள் திறந்து வைப்பதற்கு.

C.மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் அமையவிருக்கும் நூல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு.

D.சென்னை கிண்டியில் அமையவுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையின் அடிக்கல் நாட்டுவதற்கு.

E.சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைய உள்ள நினைவுத் தூணை திறந்து வைப்பதற்கு

2.With the rapid conversion of paddy fields and wetlands into housing plots in Kanyakumari district, the Collector M. Arvind has issued an order against non-agricultural activity on wet agriculture lands. 

A.A no-objection certificate (NOC) should be obtained from the Collector for non-agricultural activities and construction of houses and buildings.

B.A helpline, 1077, has been created for people to lodge complaints against violations on wetlands.

C.Buildings constructed without NOCs from the Collector would not get water and electricity connections.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது அதிகரித்து வரும்நிலையில், விவசாய நிலங்களில் விவசாய சாரா நடவடிக்கைகள் செய்வதைத் தடுக்க ஆட்சியர் எம்.அர்விந்த் அவர்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில்:

A.வேளாண்மை அல்லாத நடவடிக்கைகள் செய்ய மற்றும் கட்டிடங்கள் எழுப்ப ஆட்சியரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.விதி மீறல்களுக்கு எதிராக மக்கள் புகார் அளிக்க 1077 என்ற ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது.

C.ஆட்சியரிடமிருந்து NOC இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நீர் மற்றும் மின்சார இணைப்பு கிடைக்காது.

3.The Minister for Commercial Taxes and Registration P. Moorthy on July 19, 2021 announced several reform measures in Tamil Nadu Registration Department. They are:

A.Unapproved plots would not be registered in the State.

B.Departmental action would be taken against officials violating registration rules.

C.Action would be taken to eradicate the role of intermediaries at registration offices.

D.A token system would be introduced to serve customers on a first come, first served basis at registration offices.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் ஜூலை 19, 2021 அன்று தமிழ்நாடு பதிவுத் துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். அவை:

A.பத்திரப்பதிவுத் துறையில் அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யக் கூடாது.

B.அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் பதிவுத் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

C.இடைத்தரகர்கள் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் உரியவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து பதிவு செய்ய வேண்டும்.

D.பதிவுத்துறை அலுவலகங்களில் டோக்கன் அமைப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்.

4.The UN Development Programme (UNDP) has announced the winners of the 12th Equator Prize. Aadhimalai Pazhangudiyinar Producer Company Limited (Tamil Nadu) and Snehakunja Trust (Karnataka) are among the 10 awardees of the prestigious Equator Prize for their work in the field of conservation and biodiversity.

ஐ.நா. மேம்பாட்டு திட்டமைப்பு (UNDP) 12 வது பூமத்திய ரேகை பரிசு வென்றவர்களை அறிவித்துள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு பணிகளுக்காக உலகளவில் பூமத்திய ரேகை பரிசு பெற்ற 10 சமூகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிமலை பழங்குடியினர் தயாரிப்பாளர் நிறுவனம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சினேககுஞ்சா அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.

5.Researchers at the Indian Institute of Technology (IIT) Madras have developed an Artificial Intelligence-based mathematical model to identify cancer-causing alterations in cells.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஐ.டி-மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கும் மாற்றங்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணித மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

International 

6.Nelson Mandela International Day, also known as Mandela Day, is observed every year on July 18 to mark the birth anniversary of the former South African president. The theme for this year’s Nelson Mandela International Day is “One Hand Can Feed Another.”

முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த

ஆண்டு சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தின் கருப்பொருள் “ஒரு கையால் இன்னொருவருக்கு உணவளிக்க முடியும்” ஆகும்.

7.The International Chess Day is celebrated annually on July 20.

சர்வதேச சதுரங்கம் தினம் ஆண்டுதோறும் ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது.

Sports

8.The two former world chess champions Vladimir Kramnik and Viswanathan Anand played a four-game “no-castling chess” match. Viswanathan Anand (India) defeated Vladimir Kramnik (Russia) to win the Sparkassen Trophy at Dortmund.

இரண்டு முன்னாள் உலக செஸ் சாம்பியன்களான விளாடிமிர் கிராம்னிக் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த், நான்கு ஆட்டங்கள் கொண்ட “நோ-காஸ்ட்லிங் செஸ்” போட்டியில் விளையாடினர். டார்ட்மண்டில் நடந்த இந்த போட்டியில் விளாடிமிர் கிராம்னிக்கை (ரஷ்யா) வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) ஸ்பார்க்கசென் டிராபியை வென்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Madras Legislative Council which was set up on

A.January 12, 1920

B.January 12, 1921

C.February 12, 1920

D.February 12, 1921

மெட்ராஸ் சட்டசபை எந்த தேதியில் அமைக்கப்பட்டது?

A.ஜனவரி 12, 1920

B.ஜனவரி 12, 1921

C.பிப்ரவரி 12, 1920

D.பிப்ரவரி 12, 1921

2.Aadhimalai Pazhangudiyinar Producer Company Limited is located in

A.Kanyakumari

B.Nilgiris

C.Madurai

D.Chennai

ஆதிமலை பழங்குடியினார் தயாரிப்பாளர் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

A.கன்னியாகுமரி

B.நீலகிரி

C.மதுரை

D.சென்னை

3.Kalaignar Memorial Library is to be set up in

A.Kanyakumari

B.Nilgiris

C.Madurai

D.Chennai

கலைஞர் நினைவு நூல் நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது?

A.கன்னியாகுமரி

B.நீலகிரி

C.மதுரை

D.சென்னை

4.Which organisation confers the Equator Prize?

A.UNEP

B.IPCC

C.UNDP

D.IUCN

பூமத்திய ரேகை பரிசை வழங்கும் அமைப்பு எது?

A.UNEP

B.IPCC

C.UNDP

D.IUCN

5.Which institution’s researchers have developed an Artificial Intelligence-based mathematical model to identify cancer-causing alterations in cells?

A.IIT-H

B.IIT-D

C.IIT-M

D.IISc

உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கும் மாற்றங்களை அடையாளம் காண எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணித மாதிரியை உருவாக்கியுள்ளனர்?

A.IIT-H

B.IIT-D

C.IIT-M

D.IISc

6.Nelson Mandela International Day is observed every year on

A.July 17

B.July 18

C.July 19

D.July 20

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூலை 17

B.ஜூலை 18

C.ஜூலை 19

D.ஜூலை 20

7.The International Chess Day is celebrated annually on

A.July 17

B.July 18

C.July 19

D.July 20

சர்வதேச சதுரங்கம் தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 17

B.ஜூலை 18

C.ஜூலை 19

D.ஜூலை 20

8.Vladimir Kramnik, a chess player, belongs to

A.Germany

B.France

C.Russia

D.Norway

சதுரங்க வீரரான விளாடிமிர் கிராம்னிக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A.ஜெர்மனி

B.பிரான்ஸ்

C.ரஷ்யா

D.நார்வே

DOWNLOAD  Current affairs -20 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: