TNPSC CURRENT AFFAIRS PDF –21 July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 21 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The 10-member Justice D. Murugesan Commission, which was formed on June 15, to study the representation of government school students in technical education, submitted its report to the Chief Minister M K Stalin, at the Secretariat, on July 20, 2021.

தமிழ்நாட்டில் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவற்காக, ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட ஆணையம் ஒன்று கடந்த ஜூன் 15-ம் தேதி அமைக்கப்பட்டது. இதற்கான ஆய்வு நிறைவடைந்த நிலையில், ஜூலை 20, 2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நீதிபதி முருகேசன் அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்தார்.

2.The Higher Education Minister K.Ponmudi said on July 20, 2021 that Annamalai University, a unitary institution, would be converted into an affiliating university. Colleges in Villupuram, Cuddalore, Kallakurichi and Mayiladuthurai, including Dr. J.Jayalalithaa University (Villupuram), will be affiliated to Annamalai University.

தற்போது தனிப் பல்கலைக்கழகமாக இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை இணைத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் திரு க.பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

3.The Public Health Department of Tiruvallur District has introduced a doorstep healthcare service for the physically challenged and bed-ridden people. The scheme has been named ‘Neyam’ and was launched by Minister for Milk and Dairy Development SM Nasar, along with Collector Dr. Alby John.

நடமாட முடியாமல் படுக்கையில் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ வாகன திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நேயம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் திரு சா.மு.நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு ஆல்பி ஜான் அவர்கள் உடன் இருந்தார்.

4.The Tamil Nadu government on July 20 organised an Investors Conclave in which 35 Memoranda of Understanding (MoUs) were exchanged with a cumulative investment of Rs 17,141 crore which would provide employment opportunities for 55,054 people. On the occasion, the Chief Minister M K Stalin laid the foundation for nine projects with an investment commitment of Rs 4,250 crore and employment opportunities for 21,630 people. Besides, the Chief Minister also inaugurated five projects with an investment commitment of Rs 7,117 crore and job opportunities for 6,798 people. The total investment committed in the above 49 projects is Rs. 28,508 crores and employment opportunities to 83,482 persons.

சென்னை கிண்டியில் தொழில்துறை சார்பில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்கிற விழா நடைபெற்றது. இதில் 17,141 ரூபாய் முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 4,250 ரூபாய் முதலீட்டில் 21, 630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ஆகவே, மொத்தம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 49 தொழில் திட்டங்கள் மூலம் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது.

5.The Chief Minister launched the Single Window Portal 2.0 of Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau (TNIGEPB). It is provided with over 100 services spread across 24 departments for existing and new investors in a fully digitalised manner.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையத்தளம் 2.0 ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கி வைத்தார். தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றிப் புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட சேவைகள் இந்த இணையத்தளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

6.Guidance Tamil Nadu entered into an MoU with the American Tamil Entrepreneurs Association to promote start-ups in the fields of innovation, research and development in Tamil Nadu. The state government has sanctioned Rs 5 crore for this programme.

தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மாநில அரசு சார்பில் ரூ .5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7.General Electric Company has proposed to establish a Centre of Excellence for the development of aircraft and aeronautical components to enhance the production for industries in the aerospace and defence sector using advanced manufacturing technologies. A MoU was signed between General Electric Company and Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) at the Investors Conclave in the presence of the Tamil Nadu Chief Minister.

உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான எந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் திறன்மிகு மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) மேற்கொள்ளப்பட்டது.

India

8.The Indian Institute of Technology, Ropar has developed a first-of-its-kind Oxygen Rationing Device – AMLEX to increase the life of medical oxygen cylinders three fold. This process saves oxygen which otherwise unnecessarily gets wasted.

மருத்துவப் பிராணவாயு சிலிண்டர்களின் வாழ்நாளை மூன்று மடங்கு அதிகரிக்கும் முயற்சியில் ரோப்பாரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முதன்முறையாக ஆம்லெக்ஸ் என்ற பிராணவாயு பங்கீட்டு முறை உபகரணத்தை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் தேவை இல்லாத சமயத்தில் பிராணவாயுவின் விநியோகம் குறைக்கப்பட்டு, சேமிக்கப்படுகிறது.

9.The Ministry of Social Justice and Empowerment has formulated a scheme “SMILE – Support for Marginalized Individuals for Livelihood and Enterprise”, which includes a subscheme – ‘Central Sector Scheme for Comprehensive Rehabilitation of persons engaged in the act of Begging’. This scheme covers several comprehensive measures including welfare measures for persons who are engaged in the act of begging.

ஸ்மைல் எனப்படும் “விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு” எனும் திட்டத்தின் துணை திட்டமாக ‘பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு,  மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

International 

10.The International Olympic Committee has amended its motto ‘Faster, Higher, Stronger’ to include the word ‘Together’. The motto now reads : “Faster, Higher, Stronger – Together”.

‘ஒன்றாக’ என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்காக பன்னாட்டு ஒலிம்பிக் குழு அதனது குறிக்கோள் வாசகத்தை மாற்றியுள்ளது. எனவே, பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தற்போதைய குறிக்கோள் வாசகம் “வேகமான, உயர்ந்த, வலிமையான – ஒன்றாக” ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the head of the Commission appointed to study the representation of government school students in technical education?

A.Justice A.K.Rajan

B.Justice D. Murugesan

C.Justice Kulasekaran

D.Justice Kalaiyarasan

தொழில்நுட்பக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

A.நீதிபதி ஏ.கே.ராஜன்

B.நீதிபதி த.முருகேசன்

C.நீதிபதி குலசேகரன்

D.நீதிபதி கலையரசன்

2.Which University in Tamil Nadu is to be converted from unitary institution to an affiliating university?

A.Anna University

B.Bharathiar University

C.Periyar University

D.Annamalai University

தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகம் தனி பல்கலைக்கழகத்தில் இருந்து இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது?

A.அண்ணா பல்கலைக்கழகம்

B.பாரதியார் பல்கலைக்கழகம்

C.பெரியார் பல்கலைக்கழகம்

D.அண்ணாமலை பல்கலைக்கழகம்

3.The Chief Minister recently launched the Single Window Portal 2.0 of

A.TANSI

B.TNeGA

C.TNIGEPB

D.TIDCO

எந்த அமைப்பின் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 ஐ சமீபத்தில் முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A.TANSI

B.TNeGA

C.TNIGEPB

D.TIDCO

4.AMLEX Oxygen Rationing Device was developed by

A.IIT-Madras

B.IIT-Kanpur

C.IIT-Raipur

D.IIT-Ropar

ஆம்லெக்ஸ் பிராணவாயு பங்கீட்டு முறை உபகரணம் யாரால் உருவாக்கப்பட்டது?

A.ஐ.ஐ.டி-மெட்ராஸ்

B.ஐ.ஐ.டி-கான்பூர்

C.ஐ.ஐ.டி-ராய்ப்பூர்

D.ஐ.ஐ.டி-ரோப்பர்

5.Which organisation has signed an MoU with General Electric Company to establish a Centre of Excellence for the development of aircraft and aeronautical components?

A.TANSI

B.TNeGA

C.TNIGEPB

D.TIDCO

விமானம் மற்றும் வானூர்தி கூறுகள் உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை நிறுவ ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் எந்த அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

A.TANSI

B.TNeGA

C.TNIGEPB

.D.TIDCO

6.In which district, ‘Neyam’ doorstep health services was recently launched?

A.Perambalur

B.Tenkasi

C.Villupuram

D.Thiruvallur

சமீபத்தில், ‘நேயம்’ எனப்படும் நடமாடும் மருத்துவ வாகனத் திட்டம் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?

A.பெரம்பலூர்

B.தென்காசி

C.விழுப்புரம்

D.திருவள்ளூர்

7.Which Ministry formulated SMILE (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) Scheme?

A.Ministry of Women Empowerment

B.Ministry of Social Justice

C.Ministry of Health

D.Ministry of Education

ஸ்மைல் (விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு) என்கிற திட்டத்தை எந்த அமைச்சகம் கொண்டு வந்துள்ளது?

A.பெண்கள் அதிகாரமளித்தல் அமைச்சகம்

B.சமூக நீதி அமைச்சகம்

C.சுகாதார அமைச்சகம்

D.கல்வி அமைச்சகம்

8.Which word was added in the motto of the International Olympic Committee?

A.Together

B.Faster

C.Higher

D.Stronger

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் குறிக்கோள் வாசகத்தில் எந்த சொல் சமீபத்தில் சேர்க்கப்பட்டது?

A.ஒன்றாக

B.வேகமாக

C.உயர்ந்த

D.வலிமையான

9.Where is Dr. J.Jayalalithaa University located?

A.Perambalur

B.Tenkasi

C.Villupuram

D.Thiruvallur

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

A.பெரம்பலூர்

B.தென்காசி

C.விழுப்புரம்

D.திருவள்ளூர்

10.How many MoUs were signed in Tamil Nadu Investors Conclave on July 20, 2021?

A.35

B.45

C.55

D.65

ஜூலை 20, 2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன?

A.35

B.45

C.55

D.65

DOWNLOAD  Current affairs -21 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us