TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1. The National Civil Services Day is observed on April 21 every year. The first National Civil Service Day was observed in the year 2006. The Government of India chose April 21 as the National Civil Service Day as on this day the country’s first home minister, Sardar Vallabhbhai Patel addressed the newly appointed Administrative Services Officers in 1947.
தேசிய குடிமைப் பணிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதல் தேசிய குடிமைப் பணிகள் தினம் 2006 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. இந்திய அரசு ஏப்ரல் 21 ஐ தேசிய குடிமைப் பணிகள் தினமாக தேர்வு செய்ததற்கு காரணம், 1947 ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் புதிதாக நியமிக்கப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.
2. The Former Reserve Bank of India Governor Maidavolu Narasimham, famously known as the father of Indian banking reforms, passed away on April 20. Narasimham was the 13th governor of RBI.
இந்திய வங்கிகள் சீர்திருத்தங்களின் தந்தை என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மைடாவோலு நரசிம்மம் ஏப்ரல் 20 அன்று காலமானார். நரசிம்மம் ரிசர்வ் வங்கியின் 13 வது ஆளுநராக இருந்தார்.
3. The Made-in-India COVID-19 vaccine, Bharat Biotech’s Covaxin, neutralises multiple variants of SARS-CoV-2 and effectively works against the double mutant strain as well, the Indian Council of Medical Research (ICMR) said on April 21.
பல்வேறு வகை கொரோனா வைரஸ்களையும், இரட்டை நிலை உருமாறிய கொரோனா வைரஸையும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி அழிக்கிறது என்று தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஏப்ரல் 21 அன்று தெரிவித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
4. India has been elected to three bodies of the United Nations Economic and Social Council ( UN ECOSOC) bodies on April 20. three bodies are the Commission on Crime Prevention and Criminal Justice (CCPCJ), the UN-Women Executive Board (UNW-EB), and the Executive Board of the World Food Programme (WFP). India was elected to these bodies for a three-year term commencing on 1 January 2022.
ஏப்ரல் 20 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (UN ECOSOC) அமைப்புகளில் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று அமைப்புகள் குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆணையம் (CCPCJ), ஐ.நா.-பெண்கள் நிர்வாக சபை மற்றும் உலக உணவு திட்டத்தின் (WFP) நிர்வாக சபை ஆகும். ஜனவரி 1, 2021 ஆம் தேதி தொடங்கி மூன்று ஆண்டு காலத்திற்கு இந்த அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
5. Australia’s High Commissioner to India, Barry O’Farrell, has launched the Australia-India Indo-Pacific Oceans Initiative Partnership (AIIPOIP) grant programme. The programme will support a free, open and prosperous Indo-Pacific.
ஆஸ்திரேலியாவின் இந்திய தூதர் பாரி ஓ ஃபாரெல், ஆஸ்திரேலியா-இந்தியா இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சி கூட்டாண்மை (AIIPOIP) மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இலவச, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவதற்கு ஆகும்.
6. The Blue Nature Alliance is a global partnership of five core partners and few other Non-Profit Organisations. The core partners are Conservation International, The Global Environment Facility, the Pew Charitable Trusts, Minderoo Foundation and Rob and Melani Walton Foundation. The Blue Nature Alliance was launched on April 20, 2021.
நீல இயற்கை கூட்டணி என்பது ஐந்து முக்கிய அமைப்புகள் மற்றும் சில இலாப நோக்கற்ற அமைப்புகள் இணைந்து உருவாக்கிய உலகளாவிய கூட்டாண்மை ஆகும். இதில் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, பியூ நற்பணி மன்றங்கள், மிண்டெரூ அறக்கட்டளை மற்றும் ராப் மற்றும் மெலனி வால்டன் அறக்கட்டளை ஆகியவை 6 முக்கிய அமைப்புகள் ஆகும். நீல இயற்கை கூட்டணி ஏப்ரல் 20, 2021 அன்று தொடங்கப்பட்டது.
7. Harry Potter series author J.K. Rowling is all set to release her latest children’s book titled “The Christmas Pig” on October 12, 2021.
புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடரின் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங் அவர்கள் “தி கிறிஸ்மஸ் பிக்” என்ற தலைப்பில் எழுதியுள்ள குழந்தைகள் புத்தகத்தை அக்டோபர் 12, 2021 அன்று வெளியிடவுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. The National Civil Services Day is observed every year on
1. April 21
2. April 22
3. April 23
4. April 24
ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடிமைப் பணிகள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. ஏப்ரல் 21
2. ஏப்ரல் 22
3. ஏப்ரல் 23
4. ஏப்ரல் 24
2. Who is the father of Indian banking reforms?
C Rangarajan
M Narasimham
S Venkitaramanan
S Jagannathan
இந்திய வங்கிகள் சீர்திருத்தங்களின் தந்தை யார்?
சி ரங்கராஜன்
எம் நரசிம்மம்
எஸ்.வெங்கிடரமணன்
எஸ் ஜெகநாதன்
3. Who developed the COVID-19 vaccine Covaxin?
Serum Institute
Mynvax
Bharat Biotech
Biological E
‘கோவாக்சின்’ என்கிற கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் எது?
சீரம் நிறுவனம்
மைன்வாக்ஸ்
பாரத் பயோடெக்
பயோலாஜிக்கல் இ
4. In which three bodies of UN ECOSOC, India has been recently elected to?
CCPCJ
UNW-EB
WFB-EB
All the above
UN ECOSOC இன் எந்த மூன்று அமைப்புகளில், இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது?
CCPCJ
UNW-EB
WFB-EB
மேலே உள்ள அனைத்தும் சரி
5. How many core partners are there in Blue Nature Alliance?
5
6
7
8
நீல இயற்கை கூட்டணியில் எத்தனை முக்கிய அமைப்புகள் உள்ளன?
5
6
7
8
6. What is the tenure of India for three bodies of UN ECOSOC India recently elected to?
2 years
3 years
4 years
5 years
இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட UN ECOSOC இன் மூன்று அமைப்புகளில் இந்தியாவின் பதவி காலம் என்ன?
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
7. Who is the author of the book “Harry Potter”?
David Yates
Tom Felton
J.K. Rowling
Barry O’Farrell
“ஹாரி பாட்டர்” புத்தகத்தின் ஆசிரியர் யார்?
டேவிட் யேட்ஸ்
டாம் ஃபெல்டன்
ஜே.கே. ரவுலிங்
பாரி ஓ ஃபாரெல்
8. Who launched the Australia-India Indo-Pacific Oceans Initiative Partnership (AIIPOIP)?
David Yates
Tom Felton
J.K. Rowling
Barry O’Farrell
ஆஸ்திரேலியா-இந்தியா இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சி கூட்டாண்மை (AIIPOIP) ஐ ஆரம்பித்தவர் யார்?
டேவிட் யேட்ஸ்
டாம் ஃபெல்டன்
ஜே.கே. ரவுலிங்
பாரி ஓ ஃபாரெல்
9. What is the genre of the book titled “The Christmas Pig”?
Comic
Fantasy
Children
Historical Fiction
“தி கிறிஸ்துமஸ் பிக்” எந்த வகையான புத்தகம்?
நகைச்சுவை
கற்பனை
குழந்தைகள்
வரலாற்று புனைகதை