TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC February Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.Flipkart recently signed a memorandum of understanding (MoU) with Tamil Nadu micro, small and medium enterprises (MSME) trade and investment promotion bureau (MTIPB) to bring local artisans, weavers, craftsmen and small and medium businesses (SMBs) of the state into the e-commerce fold.
உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்களை (SMB) மின் வணிகத்தில் சேர்க்கும் நோக்கத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகத்துடன் (MTIPB) சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
2.The Chief Minister Edappadi K.Palaniswami on February 22 laid the foundation stone for the first phase of the Cauvery-South Vellar-Vaigai-Gundar intra-State river link project. Through this, the surplus water from the Cauvery would be diverted via the canal to South Vellar, Vaigai and Gundar. The people of Tiruchi, Pudukottai, Sivaganga, Virudhunagar and Ramanathapuram districts would benefit.
காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு உள்மாநில நதி இணைப்பு திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிப்ரவரி 22 அன்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம், காவரியில் இருந்து உபரி நீர் கால்வாய் வழியாக தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் குண்டாறுக்கு திருப்பி விடப்படும். திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இதன்மூலம் பயனடையும்.
3.The Chief Minister Edappadi K.Palaniswami laid the foundation for the renovation of irrigation infrastructures under the Extension, Renovation, and Modernisation of Cauvery Sub-basin Project, at a function in Kunnathur, near Viralimalai. The ₹3,384 crore project for the renovation and modernisation of the Cauvery sub-basin is aimed at ensuring irrigation for over 4.6 lakh acres of land in Thanjavur, Nagapattinam, Tiruvarur, and Mayiladuthurai districts, served by the Cauvery, and 21 of its tributaries falling in the lower Cauvery Sub-basin.
நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புதுப்பிக்க காவிரி துணைப் படுகை விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், விராலிமலைக்கு அருகிலுள்ள குன்னத்தூரில் அடிக்கல் நாட்டினார். 3,384 கோடி செலவில் நிறைவேறவிருக்கும் காவிரி துணைப் படுகையின் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுரை மாவட்டங்களில் காவிரி துணைப் படுகையின் கீழ் வரும் 4.6 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4.A special programme, called ‘Nadanthai Vazhi Cauvery’, to rejuvenate and protect the river from urban pollution.
நகர்ப்புற மாசுபாட்டிலிருந்து காவிரி ஆற்றைப் பாதுகாக்கவும் புத்துயிர் பெறசெய்யவும் ‘நடந்தாய் வாழி காவிரி’ என்கிற சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது.
India
5.The six-day Khajuraho Dance Festival was started on February 21, 2021. The dance festival is being organised at the Khajuraho Temple which is a UNESCO World Heritage site in Madhya Pradesh.
ஆறு நாள் நடக்கும் கஜுராஹோ நடன விழா பிப்ரவரி 21, 2021 அன்று தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கஜுராஹோ கோவிலில் இந்த நடன விழா நடத்தப்படும்.
International
6.The closing ceremony of the joint military exercise between the Indian and U.S. Army, ‘Exercise Yudh Abhyas-20’ was held at Mahajan Field Firing Range, Rajasthan on February 21. This was the 16th edition of the joint exercise and it began on February 8. The aim of the exercise was to focus on counter-terrorism operations under the mandate of the United Nations.
இந்திய மற்றும் அமெரிக்க இராணுவத்திற்கு இடையிலான ‘யுத் அபியாஸ் -20′ என்கிற கூட்டு இராணுவப் பயிற்சி பிப்ரவரி 21 அன்று ராஜஸ்தானில் நிறைவுபெற்றது. இது கூட்டுப் பயிற்சியின் 16 வது பதிப்பாகும், இது பிப்ரவரி 8 அன்று தொடங்கியது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
7.The International Mother Language Day was celebrated on February 21, 2021. The theme for this year is “Fostering multilingualism for inclusion in education and society”.
சர்வதேச தாய் மொழி தினம் பிப்ரவரி 21, 2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “கல்வி மற்றும் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பை உண்டாக்க பன்மொழிமொழித் திறமையை வளர்ப்பது”.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which company recently signed an MoU with Tamil Nadu micro, small and medium enterprises (MSME) trade and investment promotion bureau (MTIPB)?
Amazon
Flipkart
Ajio
Myntra
எந்த நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (MTIPB) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
அமேசான்
பிளிப்கார்ட்
ஏஜியோ
மிந்த்ரா
2.Which districts would benefit from the Cauvery-South Vellar-Vaigai-Gundar intra-State river link project?
Trichy
Sivagangai
Pudukottai
All the above
காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு உள்-மாநில நதி இணைப்பு திட்டத்தின் மூலம் எந்த மாவட்டங்கள் பயனடைகின்றன?
திருச்சி
சிவகங்கை
புதுக்கோட்டை
மேலே உள்ள அனைத்தும் சரி
3.Where was the Extension, Renovation and Modernisation of Cauvery Sub-basin Project laid foundation?
Perundurai
Melur
Karur
Kunnathur
காவிரி துணைப் படுகை விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் எங்கே அமைக்கப்பட்டது?
பெருந்துறை
மேலூர்
கரூர்
குன்னத்தூர்
4.What is the objective of ‘Nadanthai Vazhi Kaveri’ programme?
1. Protect from rural pollution
2. Protect from urban pollution
3. Protect from climate change
4. None of the above
‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தின் நோக்கம் என்ன?
கிராமப்புற மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க
நகர்ப்புற மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க
காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க
மேற்கூறிய எதுவும் இல்லை
5.The International Mother Language Day is celebrated on
1. February 21
2. February 22
3. February 23
4. February 24
சர்வதேச தாய் மொழி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
1. பிப்ரவரி 21
2. பிப்ரவரி 22
3. பிப்ரவரி 23
4. பிப்ரவரி 24
6.The military exercise ‘Yudh Abhyas-20’ is between
1. India and Russia
2. India and USA
3. India and France
4. India and Japan
‘யுத் அபியாஸ் -20’ என்ற இராணுவப் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையில் நடக்கிறது?
இந்தியாவும் ரஷ்யாவும்
இந்தியாவும் அமெரிக்காவும்
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியாவும் ஜப்பானும்
7.Khajuraho Temple is located in
Maharashtra
Madhya Pradesh
Gujarat
Rajasthan
கஜுராஹோ கோயில் எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
DOWNLOAD Current affairs -22 FEB- 2021 PDF
427 total views, 11 views today