TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 24 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.President Ramnath Kovind has appointed Muthukalingan Krishnan, at present Vice Chancellor of Madurai Kamaraj University in Madurai, as Vice-Chancellor of the Central University of Tamil Nadu in Tiruvarur for a term of five years from the date on which he enters upon his office, or until he attains the age of 70 years, whichever is earlier.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி வரும் முத்துகலிங்கன் கிருஷ்ணன் அவர்களை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும்.
2.The Tamil Nadu Startup and Innovation Mission (StartupTN) has planned to launch the Second Edition of TANSEED (Tamil Nadu Startup Seed Grant Fund) 2021 during July-September 2021 supporting upto 20 Startups with seed grant of INR 10 Lakh each.
The Tamil Nadu Startup and Innovation Mission, branded as “StartupTN” was formed by the Government of Tamil Nadu in March 2021.
StartupTN had launched the First Edition of TANSEED (Tamil Nadu Startup Seed Grant Fund) 2021 as a Grand Challenge during January-February 2021 and had supported ten promising startups with a seed grant of INR 10 Lakh each.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் ஆரம்பக் கட்ட ஆதார நிதி (TANSEED) திட்டத்தின் இரண்டாவது பதிப்பை 2021ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்த StartupTN திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இருபது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் வரை ஆரம்பக் கட்ட ஆதார நிதி (Seed Grant) அளித்து ஆதரவளிக்கத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
StartupTN என்று அழைக்கப்படும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம் என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.
StartupTN தனது தமிழ்நாடு ஸ்டார்ட்அப் ஆரம்பக் கட்ட ஆதார நிதி (TANSEED) திட்டத்தின் முதல் பதிப்பை 2021ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் செயல்படுத்தியது. அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய பத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வரை ஆரம்பக் கட்ட ஆதார நிதி (Seed Grant) அளித்து ஆதரவளித்தது.
3.Vice Admiral Ajendra Bahadur Singh, Flag Officer Commanding-in-Chief, Eastern Naval Command, Indian Navy, called on Chief Minister M.K. Stalin on July 23.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை 23.7.2021 அன்று கிழக்கு பிராந்திய கடற்படை தலைவர் திரு.அஜேந்திர பகதூர் சிங் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
4.The Justice (Retd.) A.Arumugasamy Commission of Inquiry, formed on September 25, 2017 to inquire into the death of former Chief Minister Jayalalithaa, has been granted yet another (11th) extension of 6 months by the Tamil Nadu government as the period expires on July 24, 2021.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடா்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. ஆணையத்தின் கால அவகாசம் ஜூலை 24-ம் தேதி முடிவடையுள்ள நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு 11வது நீட்டிப்பினை செய்துள்ளது.
5.In Tamil Nadu, noted Carnatic Classical Violinist ‘Kalaimamani’ Sikkil R. Bhaskaran passed away at Chennai.
புகழ்பெற்ற பாரம்பரிய கர்நாடக வயலின் கலைஞர் ‘கலைமாமணி’ சிக்கில் பாஸ்கரன் அவர்கள் சென்னையில் காலமானார்.
India
6.Defence Minister Rajnath Singh flagged-in the Indian Army Skiing Expedition, ARMEX-21, in New Delhi on July 23, 2021. The expedition was flagged off at Karakoram Pass in Ladakh on March 10, 2021 and culminated at Malari in Uttarakhand on July 06, 2021, covering 1,660 kms in 119 days. It was conducted in the mountain ranges of the Himalayan region to promote the adventure activity in the country and the Indian Army.
புதுதில்லியில் ஜூலை 23, 2021 அன்று நடைபெற்ற ஆர்மெக்ஸ்-21 எனப்படும் இந்திய ராணுவ பனிச்சறுக்கு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டார். நாட்டில் மற்றும் ராணுவத்தில் சாகச செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், இமயமலைப் பகுதிகளில் ஆர்மெக்ஸ்-21 நடத்தப்பட்டது. மார்ச் 10, 2021 அன்று லடாக்கில் உள்ள காரகோரம் கணவாயில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2021 ஜூலை 6 அன்று உத்தரகாண்டில் உள்ள மலாரியில் நிறைவுற்றது. இதில் பங்கேற்ற குழு 119 நாட்களில் 1,660 கிலோமீட்டர்கள் பயணித்து, பனிப்பாறைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகளை கடந்தது.
7.Defence Research and Development Organisation (DRDO) successfully test fired indigenously developed New Generation Akash (Akash-NG) missile, a Surface to Air Missile, from Integrated Test Range, Chandipur off the coast of Odisha on July 23, 2021.
தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை (ஆகாஷ்-என்ஜி) ஒடிசாவின் சந்திபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜூலை 23 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.
8.The Department of Empowerment of Persons with Disabilities (Divyangjan) will organise the virtual 5th North-East India Traditional Fashion Week (NEIFW) 2021 on 24th & 25th July 2021. The National Institute for the Empowerment of Persons with Visual Disabilities (Divyangjan) (NIEPVD, Dehradun) is organizing the NEIFW 2021 to cater to the divyang populace and stakeholders from the North-East to promote the arts and artisans of North-East India.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, 5வது வடகிழக்கு இந்திய பாரம்பரிய ஃபேஷன் வாரம் (NEIFW) என்னும் மெய்நிகர் நிகழ்வை ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்கிறது. வடகிழக்கு இந்தியாவின் கலை மற்றும் கைவினைப்பொருட்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகளை இத்துறையில் ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்நிகழ்வு தேசிய பார்வை குறைபாடுள்ளவர்கள் மேம்பாட்டு நிறுவனத்தால் (NIEPVD, Dehradun) நடத்தப்படுகிறது.
International
9.World’s first 3D-printed steel bridge was opened to the public in Amsterdam. It was developed by MX3D, a Dutch robotics company.
உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க இரும்பு பாலம் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது நெதர்லாந்து நாட்டின் தானியங்கியல் நிறுவனமான MX3D ஆல் உருவாக்கப்பட்டதாகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who has been appointed as the Vice-Chancellor of the Central University of Tamil Nadu?
A.Muthukalingan Krishnan
B.Jaishankar
C.Rajnath Singh
D.Ajendra Bahadur Singh
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A.முத்துக்கலிங்கன் கிருஷ்ணன்
B.ஜெய்சங்கர்
C.ராஜ்நாத் சிங்
D.அஜேந்திர பகதூர் சிங்
2.When was the Tamil Nadu Startup and Innovation Mission (StartupTN) formed?
A.September 2017
B.May 2018
C.January 2020
D.March 2021
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க அமைப்பு (StartupTN) எப்போது உருவாக்கப்பட்டது?
A.செப்டம்பர் 2017
B.மே 2018
C.ஜனவரி 2020
D.மார்ச் 2021
3.When was Justice A.Arumugasamy Commission of Inquiry formed?
A.September 2017
B.May 2018
C.January 2020
D.March 2021
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது?
A.செப்டம்பர் 2017
B.மே 2018
C.ஜனவரி 2020
D.மார்ச் 2021
4.Who is the current Flag Officer Commanding-in-Chief of Eastern Naval Command?
A.Muthukalingan Krishnan
B.Jaishankar
C.Rajnath Singh
D.Ajendra Bahadur Singh
கிழக்கு பிராந்திய கடற்படையின் தலைவர் யார்?
A.முத்துக்கலிங்கன் கிருஷ்ணன்
B.ஜெய்சங்கர்
C.ராஜ்நாத் சிங்
D.அஜேந்திர பகதூர் சிங்
5.Where is the Central University of Tamil Nadu located?
A.Chennai
B.Trichy
C.Thanjavur
D.Tiruvarur
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் எங்குள்ளது?
A.சென்னை
B.திருச்சி
C.தஞ்சாவூர்
D.திருவாரூர்
6.Where was the ARMEX-21 expedition flagged off?
A.Rohtang La Pass
B.Zoji La Pass
C.Mohan Pass
D.Karakoram Pass
ARMEX-21 பயணம் எங்கே தொடங்கப்பட்டது?
A.ரோஹ்தங் லா கணவாய்
B.சோஜி லா கணவாய்
C.மோகன் கணவாய்
D.காரகோரம் கணவாய்
7.Which institution recently organised the 5th North-East India Traditional Fashion Week 2021?
A.NIEPMD
B.NISD
C.NIMH
D.NIEPVD
5வது வடகிழக்கு இந்தியா பாரம்பரிய பேஷன் வாரம் 2021 ஐ சமீபத்தில் எந்த நிறுவனம் நடத்தியது?
A.NIEPMD
B.NISD
C.NIMH
D.NIEPVD
8.Who flagged-in the Indian Army Skiing Expedition, ARMEX-21?
A.Muthukalingan Krishnan
B.Jaishankar
C.Rajnath Singh
D.Ajendra Bahadur Singh
ARMEX-21 என்ற இந்திய இராணுவ பனிச்சறுக்கு பயணத்தை நிறைவு செய்து வைத்தவர் யார்?
A.முத்துக்கலிங்கன் கிருஷ்ணன்
B.ஜெய்சங்கர்
C.ராஜ்நாத் சிங்
D.அஜேந்திர பகதூர் சிங்
9.Where was the World’s first 3D-printed steel bridge recently opened?
A.London
B.Amsterdam
C.Paris
D.New York
உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க இரும்பு பாலம் சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது?
A.லண்டன்
B.ஆம்ஸ்டர்டாம்
C.பாரிஸ்
D.நியூயார்க்
DOWNLOAD Current affairs -24 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF