TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 24 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1. The 51st edition of the virtual Indian Handicrafts and Gift Fair (IHGF) of Delhi was inaugurated. The fair is India’s largest Virtual Fair in the Home, Fashion, Lifestyle, Textiles and Furniture sector.
இந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுக் கண்காட்சியின் (IHGF) 51 வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் இந்தியாவின் மிகப்பெரிய மெய்நிகர் கண்காட்சி இதுவாகும்.
2. Karnataka stands in first place in establishing health and wellness centres (HWC) under the Ayushman Bharat programme to provide comprehensive primary health care in rural areas for 2020-2021.
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை (HWC) சிறந்த முறையில் நிறுவிய மாநிலங்களில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
3. India’s Chandigarh-based startup Jupitice Justice Technologies has developed the World’s First Private Digital Court under the Private Justice System (Alternative Dispute Resolution or ADR Mechanism).
சண்டிகரை தளமாகக் கொண்ட ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ் உலகின் முதல் தனியார் டிஜிட்டல் நீதிமன்றத்தை மாற்று தீர்வு அமைப்பின் கீழ் உருவாக்கியுள்ளது.
4. The Chief Minister of Manipur, N Biren Singh, has launched the MOMA Market (Manipur Organic Mission Agency Market) mobile app for home delivery of fresh vegetables during the COVID-19 induced lockdown.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கின் போது மக்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே காய்கறிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அவர்கள் “மோமா சந்தை” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
5. Jharkhand has ranked the first position for implementing Smart City Mission schemes in the recent ranking released by the Union Ministry of Housing and Urban Affairs.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களின் தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
6. China has successfully sent a new ocean-monitoring satellite called Haiyang-2D (HY-2D) into orbit. The satellite was launched by a Long March-4B, rocket.
சீனா வெற்றிகரமாக ஹயாங் -2 டி (HY-2D) என்ற புதிய கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-4 பி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
Sports
7. Indian rowers Arjun Lal Jat and Arvind Singh have qualified for the Tokyo Olympics in men’s lightweight double sculls event after finishing second in the final race of the Asia/Oceania Continental Qualifying Regatta.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய-ஓசியானா மண்டல துடுப்பு படகு தகுதி சுற்று போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவு பந்தயத்தில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அர்விந்த் சிங் ஜோடி 2-வது இடத்தை பிடித்தது. முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய ஜோடி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
8. The thirty-seven-year-old Tashi Yangjom, a mountaineer from Arunachal Pradesh, has climbed Mount Everest by becoming India’s first woman climber to scale in 2021.
இந்தியப் பெண் ஒருவர், இந்த ஆண்டில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைப் பெண்ணின் பெயர் தாஷி யாங்ஜோம் ஆகும். இவர் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Which state got the first rank in establishing health and wellness centres under the Ayushman Bharat Programme in 2020-21?
Jharkhand
Karnataka
Kerala
Manipur
2020-21ல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை நிறுவுவதில் எந்த மாநிலத்திற்கு முதல் இடம் கிடைத்தது?
ஜார்க்கண்ட்
கர்நாடகா
கேரளா
மணிப்பூர்
2. The World’s First Private Digital Court was established by
Supreme Court of India
Jupitice Justice Technologies
Madras High Court
Jupiter Justice Technologies
உலகின் முதல் தனியார் டிஜிட்டல் நீதிமன்றம் யாரால் நிறுவப்பட்டது?
இந்திய உச்ச நீதிமன்றம்
ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
ஜூபிடர் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ்
3. Which state recently launched the MOMA Market App?
Jharkhand
Karnataka
Kerala
Manipur
மோமா சந்தை செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
ஜார்க்கண்ட்
கர்நாடகா
கேரளா
மணிப்பூர்
4. Which state got the first rank in implementing Smart City Mission schemes?
Jharkhand
Karnataka
Kerala
Manipur
ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த மாநிலத்திற்கு முதல் இடம் கிடைத்தது?
ஜார்க்கண்ட்
கர்நாடகா
கேரளா
மணிப்பூர்
5. Who is the Chief Minister of Manipur?
Tashi Yangjom
Biren Singh
Biplab Kumar Deb
Zoramthanga
மணிப்பூர் முதலமைச்சர் யார்?
தாஷி யாங்ஜோம்
பிரேன் சிங்
பிப்லாப் குமார் தேப்
சோரம்தங்கா
6. Which country recently launched Haiyang-2D satellite?
Japan
South Korea
China
India
எந்த நாடு சமீபத்தில் ஹையாங் -2 டி செயற்கைக்கோளை ஏவியது?
ஜப்பான்
தென் கொரியா
சீனா
இந்தியா
7. Who is India’s first woman climber to scale Mount Everest in 2021?
Tashi Yangjom
Biren Singh
Biplab Kumar Deb
Zoramthanga
2021 இல் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியாவின் முதல் பெண் யார்?
தாஷி யாங்ஜோம்
பிரேன் சிங்
பிப்லாப் குமார் தேப்
சோரம்தங்கா
8. Arjun Lal Jat and Arvind Singh, recently in news, are
Environmentalists
Scientists
Writers
Sportspersons
அண்மையில் செய்திகளில் வெளிவந்த அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் யார்?
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
விஞ்ஞானிகள்
எழுத்தாளர்கள்
விளையாட்டு வீரர்கள்