TNPSC CURRENT AFFAIRS PDF –25th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu government has so far implemented 273 of 413 recommendations and observations made by the Dr C. Rangarajan Committee, constituted to advise the State government on medium-term policy responses to the economic impact of COVID-19, the Deputy Chief Minister and Finance Minister O.Panneerselvam said in the interim budget.

COVID-19 பொருளாதார தாக்கத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் சி. ரங்கராஜன் கமிட்டி அளித்த 413 பரிந்துரைகளில் 273 பரிந்துரைகள் இதுவரை தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2.A detailed feasibility report (DFR) for establishing Metro Rail in Coimbatore at a cost of ₹6,683 crores has been prepared and is under examination.

கோயம்புத்தூரில், 6,683 கோடி மதிப்பீட்டில் 44 கி.மீ நீளமுள்ள கோவை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (DFR) தயாரிக்கப்பட்டு பரிசோதனையில் உள்ளது.

3.The Chief Minister Edappadi K.Palaniswami unveiled the portraits of freedom fighter V.O. Chidambaram Pillai and former Chief Ministers P. Subbarayan and Omandur P. Ramaswamy Reddiar in the Assembly hall.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் பி.சுப்பராயன் மற்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்தார்.

4.The Tamil Nadu government has reconstituted the State Commission for Women with Gowri Ashokan as its Chairperson. The Chairperson and the Members of the Commission will hold office for three years. R. Jamuna, T. Deepa, T. Shylaja, B.Dakshayani and Manisha Chordia are the other members of the panel.

மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக கௌரி அசோகன் அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்கள். ஆர்.ஜமுனா, டி. தீபா, டி.ஷைலஜா, பி.தக்ஷயானி மற்றும் மனிஷா சோர்டியா ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5.The Tamil Nadu government, on February 24, constituted an enquiry committee following a complaint by a lady IPS officer alleging sexual harassment charges against Special DGP (Law & Order) Rajesh Das, IPS. An IAS officer and Secretary of Planning and Development Department Jayashree Raghunandan has been named the Presiding Officer of the six-member panel, according to a G.O. issued by Home Secretary S.K. Prabakar.

சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு பிப்ரவரி 24 அன்று அமைத்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளருமான ஜெயஸ்ரீ ரகுநந்தன் அவர்கள் இந்த ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India

6.Vijay Sampla assumed the charge of Chairman of National Commission for Scheduled Castes (NCSC) in New Delhi.

புது தில்லியில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் (NCSC) தலைவராக விஜய் சம்ப்லா பொறுப்பேற்றார்.

7.The world’s largest cricket stadium at Motera in Ahmedabad was renamed the Narendra Modi Stadium and inaugurated on February 24 by the President of India Ram Nath Kovind.

அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான மோடேரா கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பிப்ரவரி 24, 2013 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்.

8.The Union Cabinet on February 24 approved a proposal to impose President’s Rule in Puducherry.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிப்ரவரி 24ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

International

9.The Ministry of Ports, Shipping and Waterways is organizing ‘Maritime India Summit 2021’ on a virtual platform http://www.maritimeindiasummit.in, from 2nd March to 4th March 2021, to promote both international and domestic investment in the Ports and Maritime Sector. Prime Minister Narendra Modi will inaugurate the summit on 2nd March 2021 virtually.

துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறைகளில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தால் மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை http://www.maritimeindiasummit.in என்கிற இணையதளம் மூலம் ‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021’ நடத்தப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which committee was constituted to advise the State government on policy responses to the economic impact of COVID-19?

Kalaiarasan Committee

Rangarajan Committee

Rajasekaran Committee

Kumaraguru Committee

COVID-19 இன் பொருளாதார தாக்கத்திற்கான கொள்கை நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க எந்த குழு அமைக்கப்பட்டது?

கலையாரசன் கமிட்டி

ரங்கராஜன் கமிட்டி

ராஜசேகரன் கமிட்டி

குமரகுரு கமிட்டி

2.For which project, the detailed feasibility report (DFR) was prepared and announced in the interim budget 2021 of Tamil Nadu?

Tiruchi Metro

Coimbatore Metro

Madurai Metro

Salem Metro

எந்த திட்டத்திற்காக, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (DFR) தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் 2021ல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது?

திருச்சி மெட்ரோ

கோயம்புத்தூர் மெட்ரோ

மதுரை மெட்ரோ

சேலம் மெட்ரோ

3.Which of the following leaders’ portraits were recently unveiled in the Tamil Nadu Legislative Assembly?

V.O. Chidambaram

P. Subbarayan

Omandur P. Ramaswamy

All the above

தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் பின்வரும் தலைவர்களின் யாருடைய உருவப்படம் திறக்கப்பட்டது?

வ.உ. சிதம்பரம்

பி.சுப்பராயன்

ஓமந்தூர் பி.ராமசாமி

மேலே உள்ள அனைத்தும் சரி

4.Who is the current chairman of the National Commission for Scheduled Castes?

Nand Kumar Sai

Rekha Sharma

Vijay Sampla

Bhagwan Lal Sahni

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் தற்போதைய தலைவர் யார்?

நந்த்குமார் சாய்

ரேகா சர்மா

விஜய் சம்ப்லா

பகவான் லால் சாஹ்னி

5.Narendra Modi Cricket Stadium is located in

Gandhi Nagar

Ahmedabad

Surat

Rajkot

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் எங்கு அமைந்துள்ளது?

காந்தி நகர்

அகமதாபாத்

சூரத்

ராஜ்கோட்

6.‘Maritime India Summit 2021’ is organised by

1. Ministry of Shipping

2. Ministry of External Affairs

3. Ministry of Home Affairs

4. Ministry of Defence

‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021’ யாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

கப்பல்துறை அமைச்சகம்

வெளிவிவகாரத்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சகம்

7.Who is the presiding officer of the enquiry committee recently constituted to enquire about the sexual complaint against the senior police officer in Tamil Nadu?

Sheela Balakrishnan

Jayashree Raghunandan

Girija Vaidyanathan

Beela Rajesh

தமிழ்நாட்டில் மூத்த காவல்துறை அதிகாரி மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க சமீபத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவர் யார்?

ஷீலா பாலகிருஷ்ணன்

ஜெயஸ்ரீ ரகுநந்தன்

கிரிஜா வைத்தியநாதன்

பீலா ராஜேஷ்

8.Which of the following Union Territory or State has been recently approved to be under President’s Rule by the Union Cabinet?

Tamil Nadu

Andhra Pradesh

Kerala

Puducherry

பின்வரும் எந்த யூனியன் பிரதேசம் அல்லது மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

தமிழ்நாடு

ஆந்திரா

கேரளா

புதுச்சேரி

 

                                                    DOWNLOAD  Current affairs -25 FEB- 2021 PDF

 1,370 total views,  3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: