TNPSC CURRENT AFFAIRS PDF –25th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –25 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC January Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Greater Chennai Corporation has nominated cricketer Washington Sundar as the Chennai District Election Icon for the upcoming Assembly election.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்முறை இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வாஷிங்டன் சுந்தரை சென்னை தேர்தல் தூதராக மாநகராட்சி நியமித்துள்ளது. இதன் மூலம், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த அவர் ஊக்கமாக இருப்பார் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2.The Chief Minister Edappadi K. Palaniswami has recently unveiled a skill development centre at Vaniyambadi in Tirupattur district set up at a cost of ₹6.25 crore. The skill development centre has been set up by a joint collaboration between Tamil Nadu Skill Development Corporation and Central Footwear Training Institute

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

India

3.The Election Commission of India is celebrating 11th National Voters Day on 25th January 2021. The theme for this year’s NVD, ‘Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed’.

இந்திய தேர்தல் ஆணையம் 2021 ஜனவரி 25 ஆம் தேதி 11 வது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள், ‘நம் வாக்காளர்களுக்கு அதிகாரம், விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் தகவல் அளித்தல்’.

4.The President of India will confer the National Awards for the special contribution in electoral works and launch ECI’s Web Radio: ‘Hello Voters’ on 25th January 2021.

ஜனவரி 25 அன்று தேர்தல் பணிகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்காக இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை காணொளி காட்சி வாயிலாக வழங்குகிறார், மேலும் தேர்தல் ஆணையத்தின் ‘ஹலோ வாக்காளர்கள்’ என்கிற இணைய வானொலி சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

5.The Union Minister Shri Ravi Shankar Prasad will launch the e-EPIC programme and distribute e-EPICs and Elector Photo Identity Cards to five new voters. e-EPIC, a digital version of the Elector Photo Identity Card can be accessed through the Voter Helpline App and websites https://voterportal.eci.gov.in/ and https://www.nvsp.in/.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் e-EPIC திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பான e-EPIC ஐ வாக்காளர்கள் அணுகலாம்.

6.The Indian Sunderbans,which is part of the largest mangrove forest in the world, is home to 428 species of birds, a recent publication of the Zoological Survey of India (ZSI) states.

உலகின் மிகப்பெரிய சதுப்புநில வனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்திய சுந்தரவனத்தில் 428 வகையான பறவைகள் வசிப்பதாக இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) சமீபத்திய வெளியீடு கூறுகிறது.

International

7.The Nepal Prime Minister KP Sharma Oli has been expelled from the ruling Communist Party over his decision to dissolve the Parliament. The decision to expel Oli from the party was taken by the Central Committee. The move comes amid repeated threats by the rival faction leaders who had said that they would revoke Oli’s membership over his decision to dissolve the Nepal Parliament. Nepal plunged into a political crisis on December 20 last year after the Prime Minister Oli, in a surprise move, recommended dissolution of Parliament amidst a tussle for power with former PM Pushpa Kamal Dahal Prachanda.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் கே.பி. ஷர்மா ஓலியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்குவதாக பிரசண்டா அணி தெரிவித்துள்ளது. நேபாளத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் கட்சியிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் கே.பி. ஷர்மா ஓலி என்பது பிரசண்டா தலைமையிலான கோஷ்டியின் குற்றச்சாட்டு. இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கே.பி. ஷர்மா ஓலி நீக்கப்பட்டுள்ளதாக பிரசண்டா அணி அறிவித்திருக்கிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who was nominated as the Chennai District Election Icon by the Greater Chennai Corporation?

Nataraj

Washington Sundar

Varun Chakravarti

Dinesh Karthik

சென்னை பெருநகர மாநகராட்சி சென்னை மாவட்ட தேர்தல் தூதராக யாரை நியமித்திருக்கிறது?

நடராஜ்

வாஷிங்டன் சுந்தர்

வருண் சக்ரவர்த்தி

தினேஷ் கார்த்திக்

2.Where was the skill development centre recently unveiled by the Chief Minister?

Vaniyambadi

Perambalur

Ariyalur

None of the above

முதலமைச்சரால் சமீபத்தில் திறமை மேம்பாட்டு மையம் எங்கே திறக்கப்பட்டது?

வாணியம்பாடி

பெரம்பலூர்

அரியலூர்

மேற்கூறிய எதுவும் இல்லை

3.‘Hello Voters’ is an initiative of

All India Radio

Election Commission of India

Doordarshan

None of the above

‘ஹலோ வாக்காளர்கள்’ என்பது யாருடைய முயற்சி?

அகில இந்திய வானொலி

இந்திய தேர்தல் ஆணையம்

தூர்தர்ஷன்

மேற்கூறிய எதுவும் இல்லை

4.The National Voters Day is celebrated on

January 24

January 25

January 26

January 27

தேசிய வாக்காளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 24

ஜனவரி 25

ஜனவரி 26

ஜனவரி 27

5.The e-EPIC programme was launched by

All India Radio

Election Commission of India

Doordarshan

None of the above

e-EPIC திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

அகில இந்திய வானொலி

இந்திய தேர்தல் ஆணையம்

தூர்தர்ஷன்

மேற்கூறிய எதுவும் இல்லை

6.‘Hello Voters’, recently in news, is a

Web Portal

Mobile App

Web Radio

TV Channel

சமீபத்தில் செய்திகளில் வந்த ‘ஹலோ வாக்காளர்கள்’ என்பது என்ன?

இணைய போர்ட்டல்

மொபைல் செயலி

இணைய வானொலி

தொலைக்காட்சி அலைவரிசை

7.KP Sharma Oli is a former Prime Minister of

Bhutan

Bangladesh

Nepal

None of the above

கே.பி. சர்மா ஓலி எந்த நாட்டின் முன்னாள் பிரதமர்?

பூட்டான்

பங்களாதேஷ்

நேபாளம்

மேற்கூறிய எதுவும் இல்லை

                                                      DOWNLOAD  Current affairs -25 JAN- 2021 PDF


 1,225 total views,  5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: